Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all 376 articles
Browse latest View live

கூட்டு ஒப்பந்தம் பற்றி கருத்துக்கள்


தீபாவளி முற்பணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

$
0
0
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு,கிழ்பிரிவு மக்கள் இன்றைய தினம் தொழிலுக்கு செல்லாது தீபாவளி பண்டிகை முற்பணத்தினை வழங்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

தீபாவளி பண்டிகைக்கு வழங்கபட வேண்டிய 10,000 ரூபா இன்று வழங்குவதாக கூறிய வாக்குறுதி அளித்த தோட்ட நிர்வாகம் இன்று வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தமையினாலேயே ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முற்பணத்தினை உடனடியாக வழங்கபட வேண்டுமெனவும் மலையக அரசியல்வாதிகள் இவ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகாரர்கள் தெறிவித்தனர்.

இதேவேளை இந்த ஆர்பாட்டம் குறித்து தோட்ட முகாமையாளரிடம் கேட்டபோது எதிர்வரும் 25ம் திகதி வழங்கபடுமென உறுதியளித்தார்.

தொழிலாளர்கள் போராட்டம்

$
0
0
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி கள் வழங்க மறுத்ததையடுத்து உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி  லிந்துலை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று பிற்பகல் 2 மணிநேரம் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஏனைய பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் தீபாவளி முற்பணம் வழங்கியிருக்கின்ற போதிலும் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. நேற்றுக்காலை தோட்ட தொழிற்சங்க தலைவர்களும் மற்றும் தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்கு சென்று தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரிய போது தோட்ட அதிகாரி வழங்க வேண்டிய தீபாவளி முற்பணம் கம்பனி வங்கியில் வைப்பு செய்யவில்லை எனவும், வைப்பு செய்தால் பணத்தை 24ஆம் திகதி தருவதாக கூறியதையடுத்து, தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே இருப்பதால் 24ஆம் திகதி இப்பணத்தை பெற்று தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு தீபாவளி பண்டிகைக்காக மாதாந்தம் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்து சேமித்து வைத்திருக்கும் தொகையினை கூட வழங்க தோட்ட நிர்வாகம் மறுத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று தருவதாக கூறிய மலையக அரசியல் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாக தெரிவித்த அவர்கள், கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுப்படும் தொழிற்சங்க அதிகாரிகள் காட்டி கொடுத்துவிட்டனர்.20ஆம் திகதி தீபாவளி முற்பணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகமும், தொழிற்சங்க அதிகாரிகளும் தமக்கு தீபாவளி முற்பணத்தினையும், ஏனைய கொடுப்பனவுகளையும் உடனடியாக பெற்று தருமாறும், அவ்வாறு தவறும் பட்சத்தில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படப் போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

12 மணித்தியாலங்கள் மழை பெய்தால் மண்சரிவு அபாயம் ஏற்படும்

$
0
0

நாடுமுழுவதும் தொடர்ச்சியாக பதிவாகும்;; மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு மற்றும் இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்புள்ளதாகவும் அபாயம் நிலவ கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாகஸ்தோட்டை கந்தபொல கொன்கோடியா பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் சாத்தியம் இருப்பதனை தொடர்ந்து 18 பேர் தங்கள் இடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இதுவரையில் பாரிய அனர்த்தங்கள் எவையும் பதிவாகவில்லை என்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். 

இது தொடர்பாக மத்தியநிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மததிய மாகாணத்தின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படட்டுள்ளது. 

எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு மலை தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு மற்றும் நிலவெட்டுச் சாய்வுகள் இடிந்து விழக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டி மாவட்டத்தில் கங்கதிகே கோரலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எல்பத குருவிட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெரனியகல தெஹியோவிட்ட ருவன்வெல்ல, யட்டியாந்தோட்ட,புளத்ஹோபிட்டிய,அரநாயக்க, கேகாலை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டள்ளதால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும். இதனிடையே கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது. காலி உள்ளிட்ட கரையோரத்தை அண்டிய மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 30 தொடக்கம் 40 வரையில் இருக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

$
0
0
கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோவில் கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனத் தோட்ட நிர்வாகம் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 100க்கும்; மேற்பட்ட தொழிலாளர்கள் கொழுந்து மடுவத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்துக்கு அரை நாள் சம்பளத்தை தோட்ட நிர்வாகம் தற்போது வழங்குகின்றது. கடந்த காலத்தில்; 18 கிலோவுக்கு குறைவாகக் கொழுந்து பறித்தபோது, முழு நாள் சம்பளத்தை  வழங்கியதாகவும் கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், கடந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் 4.30 மணியளவில் எங்களின் தொழிலை முடித்து வீடு திரும்பியதாகவும் தற்போது 5 மணிவரை கட்டாயம் தொழில் செய்ய வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் வலியுறுத்துகின்றது.  5 மணிவரை தொழில் செய்யும்பொழுது எமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளோம். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதிலும், இதுவரையில் சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எமக்கு விளக்கம் கொடுக்கவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பு நிலுவை சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறிய தொழிற்சங்கம் எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது'என்றனர்.

140 ரூபாயை ஏப்பம்விட்ட நிர்வாகங்கள்

$
0
0
புதிய கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக ஒக்டோபர் மாத்துக்குரிய சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான மாதாந்த சம்பளம், 10ஆம் திகதி தோட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய கூட்டொப்பந்தத்தின்படியே இம்மாதம் சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சில தோட்டங்களில் 590 ரூபாய் என்ற அடிப்படையிலே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்த கூட்டொப்பந்த பேச்சு, கடந்த மாதம் 19 ஆம் திகதியே முடிவுக்கு வந்தது. இதற்கமைவாக அடிப்படைச் சம்பளம் ரூ.500, உற்பத்தித்திறன் கொடுப்பனவு   ரூ.140,  நிலையான விலை கொடுப்பனவு  ரூ.30,  வருகைக் கொடுப்பனவு  ரூ.60, உள்ளடங்களாக மொத்தம் 730 ரூபாய் சம்பள தொகையுடன் புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இச்சம்பளம் ஒக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒக்டோபர் மாதத்துக்கான சம்பளம்,  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அச்சம்பளமானது புதிய ஒப்பந்தத்துக்கு அமைவாக வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். அடிப்படைச் சம்பளம் ரூ.500, வருகைக் கொடுப்பனவு ரூ.60, நிலையான விலை கொடுப்பனவு ரூ.30 இணைக்கப்பட்டு 590 ரூபாயே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தித்திறன் கொடுப்பனவான 140 ரூபாய்,  சம்பளத்தில் இணைத்துகொள்ளப்படவில்லை என தெரிவித்த தொழிலாளர்கள், 18 கிலோகிராமுக்கும் மேலதிகமாக கொழுந்து பறித்தால் மட்டுமே முழுமையான சம்பளத்தை வழங்க முடியுமென தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்ததாக கூறினர். 

மண்சரிவு அபாயம்; 29 பேர் இடம்பெயர்வு

$
0
0
அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை  பெயார்லோன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 29 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சாமிமலை சின்ன சூரியகந்தத் தோட்ட லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 7 சிறுவர்கள் 21 பெண்கள் உட்பட 29 பேர் சிறுவர் நிலையம் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (11) மாலை, பெய்த கடும் மழையினால் குறித்த லயன் குடியிருப்புப்  பகுதியில் 30 மீட்டர் தூரம் வரையில் வெடிப்புடன்  மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே, பாதுகாப்பின் நிமித்தம் இவர்கள் தற்காளிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியின் அயாயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவித்துள்ளதாக மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பள ஒப்பந்தத்தில் முரண்பாடுகள் - தொழிலாளர்கள் போராட்டம்

$
0
0
இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளம் தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக ஹட்டனில் தொழிலாளர்கள் ஒன்று கூடிக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
17-11-2016ல்  ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள உற்பத்தித் திறன் கொடுப்பனவு 140 ரூபா நிபந்தனை இன்றி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன் வைத்து பேரணியொன்றையும் நடத்தினர்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் இ.தொ. கா தலைவர் முத்து சிவலிங்கம் , பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் தங்களால் முன் வைக்கப்பட்ட கண்டனம் மற்றும் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் இரு வருடங்களுக்கொரு தடவை தொழிற்சங்கங்களுக்கும் தோட்டநிர்வாகங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் தான் நிர்ணயம் செய்கின்றது.
இறுதியாக 18 மாத கால இழுபறியின் பின்னர் கடந்த மாதம் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிய கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் அடிப்படை சம்பளம் - 500 ரூபா, உற்பத்தித் திறன் கொடுப்பனவு - 140 ரூபா உட்பட அனைத்துக் கொடுப்பனவுகளும் அடங்கலாக நாளொன்றுக்கு ரூபா 730 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் அக்டோபர் 15ம் திகதி தொடக்கம் நாளொன்றுக்கு 110 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற முடியும் எனத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்களினால் அவ்வேளைத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன.
வழமைக்கு மாறாக நாளொன்றுக்கு 18 தொடக்கம் 20 கிலோ வரை தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் எனத் தோட்ட நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்த்தில் எந்தவொரு இடத்திலும் நாளொன்றுக்கு 18 - 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை குறிப்பிடப்படவில்லை இ.தொ கா கூறுகின்றது.
நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்து நிறையத் தோட்ட நிர்வாகங்களும் தோட்ட தலைவர்களும் பேசியே தீர்மானிக்க வேண்டும் என்று தான் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறுகின்றார் இ.தொ கா தலைவரான முத்து சிவலிங்கம்.
தோட்ட நிர்வாகங்களின் இந்தச் செயல்பாடானது கூட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவிக்கின்றார் ;
கடந்த காலங்களிலும் 18 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டதாக தொழிலாளர்களினால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஏற்கனவே 610 ரூபா சம்பளத்தை பெற்று வந்த தங்களுக்கு புதிய கூட்டு ஒப்பந்தம் மூலம் 730 ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 590 ரூபா தான் கிடைத்துள்ளதாகத் தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
நன்றி- பி.பி.சி

மலையக மக்கள் என்பதால் எங்களின் விடயத்தில் அக்கறையின்றி இருக்கின்றீர்களா?

$
0
0
நாங்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியமர்ந்துள்ளோம். இன்று வரை எங்களுக்கு நிரந்தர காணி வழங்கப்படவில்லை. நாங்கள் கிளிநொச்சிக்கு வந்த காலத்தில் இங்கு அதிகளவான அரச காணிகள் இருந்தன.  அங்கு எங்களை குடியமர்த்தியிருக்கலாம்,  அதனையும் மேற்கொள்ளவில்லை நாங்க்ள இப்பொழுதும் காணியற்ற  மக்களாக சொந்த இடத்தில் அகதியாக வாழ்கின்றோம் இது ஏன் நாங்கள் மலையக மக்கள் என்பதால் எங்களின் விடயத்தில் அக்கறையின்றி இருக்கின்றீர்களா? என  அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை நோக்கி பன்னங்கண்டி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.                                                                                                   
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கள் கிழமை பத்தாவது  நாளாக தொடர்கிறது.
காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம்  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி  பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர்.இந்த மக்கள் 1990 ஆம்ஆண்டு முதல் மேற்படி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் வாழ்கின்ற  பிரதேசம் பன்னங்கண்டி பசுபதிகமம் என அழைக்கப்படுகிறது. இது இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபராக இருந்து சிவாபசுதி என்பவரின் காணியாகும்.   தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்செயல்கள்காரணமாக இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த மக்களில் சிலரை குறித்த காணிகளில் குடியேற்றியுள்ளனர் அப்போதே நிர்வாகத்தினர்.
ஆனால ;இன்று வரை இந்த மக்களுக்கு சொந்தமாக காணியோ,  மற்றும் வீட்டுத்திட்டங்களோ,அல்லது அரசின் ஏனைய எந்த உதவித் திட்டங்களும் இன்றி மிக மிக மோசமான நிலையில் வாழ்கின்றனர்.  அகதி முனாம் வாழ்க்கையை விட மோசமான வாழ்க்கை வாழ்வதாக இந்த மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்ற போதும்  எவரும்  அதனை  கண்டுகொள்ளவில்லை எனவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக  தாங்கள் மலையக மக்கள் என்ற காரணத்தினால்தான் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தங்களின் விடயத்தில் அக்கறையின்றி இருப்பதாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்ட்டுவரும் கேள்வி எழுப்பியுள்ளனர். 
தேர்தல் காலங்களில் வீடு வீடாக வரும் அரசியல் தரப்புக்கள் தாங்க்ள தெருவில் இறங்கி பத்துநாளாக போராடுகின்ற போது வெறுமனே வந்து பார்த்துவிட்டு தேர்தல்   நேரங்களில் வழங்கும் வாக்குறுதிகள் போன்று வழங்கிவிட்டு சென்றுவிட்டார்களே தவிர அவர்கள் அதற்கான முயற்சிகளை  மேற்கொண்டார்களா என்பது பெரும் சந்தேகத்திற்குரியது எனத் தெரிவிக்கின்றனர்.  

புதிய கூட்டொப்பந்தத்தை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம்

$
0
0
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கம்(ஜே.வி.பி) ஹட்டன் நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த கூட்டொப்பந்தம், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே, மீண்டும் கைச்சாத்திடப்பட்டது. 2015 ஆம் ஆண்டின்படி கணக்கிட்டால், 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குப் பின்னர், மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருக்க வேண்டும். ஆனால், தொழிற்சங்கங்கள் அதனை செய்யத் தவறியுள்ளன. எனவே, மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டன. “பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், போலியான கூட்டொப்பந்தத்தை கைச்சாத்திட்டதனூடாக, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டன” என்று, மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இது தொடர்பாக தெரிவிக்கையில் “கூட்டொப்பந்தம் முறையாக கைச்சாத்திடப்பட்டு வந்திருந்தால், புதிய ஒப்பந்தம், 2017.04.02 ஆம் திகதி, மீண்டும் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையக தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொண்ட போலியான ஒப்பந்தத்தினூடாக, தொழிலாளர்களின் உழைப்பை காட்டிக்கொடுத்து விட்டன. எனவே, மீண்டும் புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட தோட்ட தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும். தற்போதைய அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால், தோட்டத் தொழிலாளர்கள், குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நல்லாட்சி எனும் போலியான அரசு மற்றும் போலியான தொழிற்சங்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஜே.வி.பி யின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் முன்னெடுத்து வருகின்றது” 

மலையகத் தமிழ் சமூகத்துடன் இந்தியத் தலைவரின் சந்திப்பு

$
0
0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 12ஆம் திகதியன்று நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் விளையாட்டு மைதானத் தில் மலையக தமிழ் சமுதாய மக்க ளைச் சந்திப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தியாவின் பல அரசியல் தலை வர்கள் இலங்கைக்கு விஜயம் செய் துள்ளதோடு மலையக சமுதாய தலைவர்களையும் சந்தித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்தியப் பிரதமர் மோடியின் விஜயமானது விஷேட கவனத்துக்கு உரியது.

அன்றைய இந்திய காங்கிரஸின் தலைவரும் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியுமான ஜவஹர்லால் நேரு 1939ஆம் ஆண்டு வருகை தந்தமை அதிகளவில் குறிப்பிடப் படுகிறது. 1939ஆம் ஆண்டு இச் சமுதாயத்தை பல்வேறு தொழில் மற்றும் சாதி அடிப்படையிலான அமைப்புகள் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தன. இவ்வமைப்புகளை ஒர் அமைப்பின் கீழ் இயங்குமாறு நேரு ஆலோசனை வழங்கினார்.

இதன் விளைவாக உருவாகியதே இலங்கை-இந்திய காங்கிரஸாகும். இதுவே பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது. நேருவின் வரு கையோடு தற்போதைய மோடி வருகையை ஒப்பிடுகையில் அர சியல் சமூக சூழ்நிலையானது பொதுவாக முழு நாட்டையும் குறிப்பாக மலையக சமூகத்தினரை பொறுத்தவரையிலும் அன்றைய நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் கண்டுள்ளது. அன்றைய காலப் பகுதியில் இந்திய தமிழர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இம்மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதோடு வாக்குரிமையும் இழந்தனர்.

இதன் பின்னால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் குடியுரிமைப் பிரச்சினையே பிரதான மாக அமைந்திருந்தது. 1964ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக இம்மக்களின் அரைவாசிப் பேர் இந்தியாவான தமது தாயகத்திற்குத் குடிபெயர்ந்தனர்.

5 இலட்சத்திற்கும் மேற்பட் டோர் தாயகம் திரும்பியதைத் தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு குடியுரிமை பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்பட்டதோடு இம்மக்களைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் உறுதித் தன்மை ஏற்படத் தொடங்கியது. தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக தனிமைப்ப டுத்தப்பட்டிருந்த இந்த சமுதாயம் தேசிய நீரோட்டத்தில் இணையத்தொடங்கியது. இத்தகைய அபிவிருத்தி செயற்பாடு துரிதப்படுத்தப் பட வேண்டிய ஒன்றாகும்.

இத் துரிதப்படுத்தும் செயன்முறையில் மோடியின் வருகையானது ஒரு முக்கிய நிகழ்வாக அமைகின்றது. தற்போது இலங்கையில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான செயல்முறை இடம்பெற்று வருகிறது. இதில் மலையக சமூகம் தமது அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் தமக்குரிய பிரதி நிதித்துவத்தை பல்வேறு அரசியல் மட்டங்களில் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் அதிகார பரவலாக்கல் மற்றும் தேர்தல் தொகுதி சீர்திருத் தம் என்பவற்றினூடாக ஏற்படக் கூடிய அரசியல் ஏற்பாடுகளில் இந்த மக்கள் தங்களது அரசியல் உரி மைகளை ஏனைய சமூகத்தினரை போல அனுபவிக்கக் கூடிய நிலை உருவாக வேண்டும். இச்சமூகமா னது ஏனைய சமூகங்களில் இருந்து வேறுபட்ட கலாசார மற்றும் பொருளாதார சமூக அடையாளங் களைக் கொண்ட ஒரு தனித்துவ இனத்துவக் குழுவாக அங்கீகரிக் கப்பட வேண்டும். வருகை தரும் இந்தியப் பிரதமர் தன்னுடைய பேச்சுவார்த்தையில் இலங்கைத் தலைவர்களுடன் இது குறித்து பேச வேண்டுமென இச்சமுதாயத்தினர் விரும்புகின்றனர்.

மேலும் இம்மக்களது சமூக பொருளாதார கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இச்சமூகம் இன்னும் நிலம் மற்றும் வீடுகளுக்கான சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அபிவிருத்தி

குறித்த நோக்கில் சமூக அபிவிருத்தி குறிகாட்டிகள், இம்மக்கள் ஏனைய மக்களோடு ஒப்பிடும் போது பின்தங்கிய நிலையில் இருப்பது துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுள் வறுமை நிலை, போஷாக்கு மற்றும் சுகாதார நிலை கல்வி அடைவுகள் என்பவை குறிப்பிடக் கூடியவையாகும். 

குறைவான கல்வி அடைவுகள் காரணமாக இச்சமூ கத்தினர் பொதுச் சேவை துறையில் உயர்நிலையிலும் அரச சேவையில் ஈடுபடுவ தும் பூச்சியமாகக் காணப்படு கிறது. தேசிய பல்கலைக்கழ கங்களில் வருடாந்த மொத்த அனுமதியில் இச்சமூகத்தின் பங்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது. சமீப காலங்களில் தோட்டத்துறையில் இருந்து அதிகளவிலான இடம்பெ யர்வு நகர்புறங்களை நோக்கி திறமையற்ற தொழில்களை நாடி இடம்பெறுகின்றது. இரண்டாம் தர மற்றும் உயர் இரண்டாம் தர பள்ளிக்கூடங்களை விட்டு விலகுவோர் தங்களது கல்வி தொழில்சார் அல்லது தொழில்நுட்பதிற மைகளை விருத்தி செய்வ தற்கான போதிய வசதிகள் காணப்படவில்லை.

இந்திய அரசாங்கத்தின் கடந்தகால உதவிகள்:

மேற்குறிப்பிட்ட தோற்றப்பாட்டில் இந்தியாவின் உதவிகள் மற்றும் தலையீடுகளை இந்த சமூகம் ஒரு தார்மிக கடப்பாடாகக் கருதுகிறது. ஏனெனில் இச்சமூகம் வரலாற்று ரீதியாக இந்தியாவோடு தொடர்புடையதாக இருப்பதோடு இன்னும் கலாசார உறவுகளைப் பேணி வருவதாக உள்ளது. கடந்த காலத்திலே இச்சமூகத்திற்கான இந்திய உதவிகள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குறிப்பாக கல்வி, தொழிற்பயிற்சி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வீடமைப்பு ஆகிய சில துறைகளை அடையா ளப்படுத்தலாம்.

கல்வித்துறையை பொறுத்த வரையில் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி நிதியமா னது 1947ஆம் ஆண்டு அப்போது இலங்கையில் இருந்த இந்தியப் பிரதிநிதியான எம்.எஸ். அனி என் பவரின் முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது 1947இல் நான்கு மாணவர்களுடன் ஆரம்பித்து, உயர்கல்வி பெற விரும்பும் தகுதி யுள்ள மாணவர்களுக்கு தொடர்ந் தும் உதவி செய்து வருவது குறிப்பி டத்தக்க ஒன்றாகும்.

தற்போது (2016_2017இல்) இந்த எண்ணிக்கை 369ஆக உயர்ந் துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் (237பேருக்கு) உயர்தரத்தில் கற்பதற்கும் மற்றும் 132 பேருக்கு பல் கலைக்கழகம் செல்வதற்கும் கல்வியியல் கல்லூரியில் கற்பதற்கும் இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை நிதி அங்கத்தவர் திரட்டுவதோடு இந்திய அரசாங் கத்தாலும் வழங்கப்படுகின்றது. இதில் பயன்பெறுவதற்குரியமானவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருப்பதோடு கணிதம் உட்பட சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்களாக இருக்கவேண்டும். இந்நிதியத் தின் மூலமாக நூறுக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றுள்ளனர். இவர்களில் மருத்துவம் பொறி யியல் விவசாயம் என்பனவும் அடங்குகின்றன. தற்போது க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைவோர் தொகை அதிகரித்து செல்வ தால் இந்நிதியத்தின் பணிகளை விரிவுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. 

தொழிற்பயிற்சியை பொறுத்த வரை ஹட்டனில் அமைந்துள்ள நோராட் அமைப்பின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமானது இந்த சமூகத்தின் தொழிற் பயிற்சி தேவைகளை நிறைவேற் றும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்நிறுவனத்தினுடைய பிரதான பிரச்சினை தமிழ் மொழிமூல பயிற்சியாளர் இல்லாது இருந்தமையாகும். இதனை நிவர்த்தி செய்யும் முகமாக 20.11.2017 வரைக்கும் பல தமிழ் மொழி பயிற்றுவிப்பா ளர்களை இந்திய அரசாங்கம் இந்த பயிற்சி நிலையத்திற்கு வழங்கியுள் ளது. இவர்கள் மோட்டார் சக்கர மெக்கானிக், மின்சார பொருத்துனர், தன்னியக்க இயக்கமுள்ள மெக்கானிக், இயந்திர லெய்டர் பொருத்துனர், அலுமினிய பொருத் துனர் போன்ற துறை சார்ந்தவர்கள் ஆவர். தற்போது இந்நிறுவனத்தில் 4 பயிற்றுவிப்பாளர்கள் கடமை புரிகின்றனர். அத்தோடு இந் நிறுவ னத்தினரின் உபகரணங்கள் மற்றும் கட்டடங்கள் வழங்குவதற்காக 199 மில்லியன் ரூபா உதவியில் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்க ஒன்றாகும்.

அத்தோடு கணிதம் மற்றும் விஞ் ஞானம் போன்ற பாடங்களில் ஆசி ரியர்களை பயிற்றுவிப்பதற்காக பல பயிற்சித் திட்டங்கள் நடைமு றைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக இந்தியாவில் ஒருதொகை ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ள னர். அத்தோடு இந்திய பயிற்று விப்பாளர் இங்குள்ள ஆசிரியருக்கு பயிற்சிஅளித்துள்ளனர். அத்தோடு 25 ஆசிரியர்கள் விஞ்ஞானத் துறையில் பட்டம் பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தியா செல்வதற்கு முன்னால் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இங்கு பயிற்சியும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்துத் துறை குறித்த பிரச்சினைகள் முக்கியமானவை. தோட்டங்கள் நகரங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ள காரணத்தினால் பொதுப் போக்குவ ரத்து வசதிகளை பெற்றுக் கொள்ள lug) இடர்பாடுகள் உள்ளன. இவற்றை ஓரளவு தீர்க்கும் முகமாக 40 சிறு பஸ் வண்டிகள் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. இவை எந்தளவிற்கு பயன ளித்துள்ளன என்பது கேள்விக்குரிய ஒன்றாகும்.

இந்திய உதவியில் முக்கியமாகக் கருதப்பட வேண்டியது சுகாதாரத் துறையாகும். நுவரெலியா மாவட் டத்தில் டிக்கோயா நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளங்கன் வைத்தியசாலையின் நிர்மாணம் இந்திய அரசாங்க உதவியுடன் 1200 மில்லியன் ரூபாவில் 2011இல் ஆரம்பிக்கப்பட்டு 2015இல் முடி வுற்றது. இருப்பினும் உரிய உபகர ணங்களை கொள்வனவு செய்வதி லும் நிர்வாக பொறுப்பினை ஏற்றுக் கொள்வதில் மத்திய அரசாங்கத்திற் கும் மாகாண சபைக்கும் ஏற்பட்ட இழுபறி காரணமாக இதனுடைய தொடக்கம் தாமதப்படுத்தப்பட்டு இறுதியாக இந்த வைத்தியசாலை பிரதம மந்திரி மோடியினால் மே மாதம் 12ஆம் திகதி திறக்கப்பட வுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வடமாகாணத்தில் இடம்பெ யர்ந்தோருக்காக இந்திய அரசாங்கம் ஐம்பதாயிரம் வீடுகளை வழங்க முன்வந்தது. பின்னர் இத்தொகை யில் 4000 வீடுகள் தோட்டத்துறைக்காக ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபா 10 இலட்சம் என்ற அடிப்படையில் இவ்வீடு கள் இலவசமாக வழங்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் இக்கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகள் தாமதிக்கப்பட்டு 2017ஆம் ஆண் டிலேயே ஆரம்பிக்கப்பட்டன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவ்வீடுகளின் நிர்மானப் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால உதவிகளுக்கான தேவைகளில் முதலாவது வீட்டுத் தேவையாகும்.

160,000க்கும் மேலதிகமான வீடமைப்பு தேவைகள் காணப்படுவதால் அதற்காக நிதியை இலங்கை அரசாங்கத்திடம் பெற்றுக் கொள் வதில் பல்வேறு சிரமங்கள் காணப் படுகின்றன. 2015 ஆம் ஆண்டு அமைச்சரவையின் அங்கீகாரத் தோடு இருபதாயிரம்வீடுகளுக்கான வீடமைப்பு செயற்திட்டம் ஒன்று இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இதற்கான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர் பார்க்கப்பட்ட நிலையில் உள்ளது.

அடுத்தது கல்வித்துறையாகும். உயர் இரண்டாம் தர கல்வியின் விரிவு காரணமாக தற்போது பல் கலைக்கழகத்தின் அனுமதிக்காக தகுதி பெறும் மாணவர்களின் எண் ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக் கையான 27 ஆயிரத்தில் ஒரு சத வீதத்தை கூட இன்னும் மிஞ்சவில்லை. தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் நூறு பல்கலைக்கழக மாணவர்களுக்கே உதவி செய்கின்றது. தகுதி இருந்தும் அனுமதி பெறாது இருப்பவர்களுக்கு உதவி செய்யும் முகமாக தங்களுடைய பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்வதற்கு மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் புலமைப் பரிசில்களை வழங்குவதற் காக இந்திய அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை மலையக சமூ கத்திற்கு மாத்திரமே தங்களுக் கென ஒரு பல்கலைக்கழகத்தை அடையாளம் காட்ட முடியாத நிலை உள்ளது. பேராதனை, ஊவா மற்றும் சப்ரகமுவ போன்ற பகுதிகளில் பல்க லைக்கழகங்கள் காணப்பட்டாலும் அவற்றை மலையக பல் கலைக்கழகம் என்று சொல்ல முடியாத நிலையில், தனித்த ஒரு பல்கலைக்கழகம் தேவை என்பது இச்சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இச்சமூகத்தின் வரலாறு கலாசாரம் சமூகப் பிரச்சினை என்பவற்றில் ஆய்வினை மேற்கொள்வதற்கும் தனியான பல்கலைக்கழகத்தின் தேவை உணரப்பட்டுள்ளது. எனவே இதைப் பூர்த்தி செய்யும் முகமாக இந்திய அரசாங்கம் இது குறித்த சாத்திய வள ஆய்வினை மேற் கொள்ள வேண்டியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

அத்தோடு பல்கலைக்கழகத் திற்கு அனுமதி பெற முடியாத மாணவர்கள் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்ற னர். பிரதானமாக அமைந்துள்ளது தமிழ்மொழி மூலம் போதுமான போதனைகள் இல்லாமையாகும். ஒரு தனித்த தொழில்நுட்ப கல்லூரி ஒன்றின் மூலமாகவே இத்தகைய மாணவர்களின் தேவை முழுமை யாக பூர்த்தி செய்யக் கூடியதாக அமையும். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகின்ற முக்கிய பாடங்களான கணிதம், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், பெளதிகவியல், இரசாயனவியல், ஆங்கிலம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் ஆசிரியர்களுக்காக பயிற்சி தேவைப்படுகின்றது. முன்னர் செயற்பட்டு வந்த செயற்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம். கல்வித் துறையைப் பொறுத்தவரை இறுதியாக பல்வேறு பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

1980களில் சீடா, ஜி.டி.இசட் போன்ற நிறுவனங்களினால் 300இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. ஏனைய பாடசாலைகள் அரசாங்க நிதி உதவியோடு குறைந்த எண்ணிக்கையில் தரமுயர்த்தல் படிப்படியாக இடம்பெற்று வருகின்றது. இந்திய அரசாங்கம் 100 பாடசாலைகளை பொறுப்பேற்குமானால் இந்த தரமுயர்த்தல் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதம மந்திரி மோடியின் வரு கையோடு இம்மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினைகளை முன்வைப்பதில் மக்களின் தலைமைகள் முன்வந் திருக்கின்றன. இந்திய அரசாங்கம் கடந்த காலத்தில் செய்த உதவிகளை மதிப்பீடு செய்வதின் மூலமாக அந்த திட்டங்களினு டைய செயல்முறைகளின் குறைநி றைகளை அறிய முடிகிறது. இவை எதிர்காலத்தில் வழங்கவிருக்கும் உதவிகளை வழிப்படுத்துவதற்கு உதவியாய் அமையும். மலையக சமூக அபிவிருத்தியில் நோர்வே, சுவீடன், போன்ற நாடுகள் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்களவு உதவிகளை நல்கியுள்ளன. இவற்றை மிஞ்சியதாக இந்திய உதவிகள் அமைய வேண்டும் என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எம்.வாமதேவன். 
நன்றி - தினகரன்

கொள்கைப் பிரகடனங்களை ‘மாகாண சபையில் முன்வைக்க வேண்டும்

$
0
0
 எதிர்வரும் மாதங்களிலாவது, மலையக மக்களின் சமூக சீரமைப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து கொள்கைப் பிரகடனங்களை மாகாண சபைகளில் முன்வைக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களையே இங்கு முன்வைக்கின்றோம்” என்று, ஊவா சக்தி அமைப்பின் இணைப்பாளர் இராமசுந்தரம் ரகுராஜ் தெரிவித்தார். ஊவா சக்தி அமைப்பினால், அவ் அமைப்பின் தலைவர் நடேசன் சுரேஸ் தலைமையில் நேற்று(09) பதுளை ரிவர் சைட் விடுதியில் நடைபெற்ற மலையக மக்களின் சமூக சீரமைப்பு விடயமான கொள்கைப்பிரகடனமொன்றினை வெளியீட்டுவைக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபேயசிரி கருத்துத் தெரிவிக்கையில், “பதுளை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம் பாடசாலைகள் சிலவற்றில் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் பாடங்கள் புகட்டப்படுகின்றன. ஆனால், தமிழ் மொழி மூலப்பாடசாலைகளில் க.பொ.த உயர்தரங்களில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிக்க பாட ரீதியிலான ஆசிரியர்கள் இல்லாதுள்ளனர். பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளுக்கு பெரும் தடைகளாக இருப்பது தெளிவற்ற நிலையும் கல்வி மேம்பாடுகள் இன்மைகளேயாகும். அம்மக்களின் பெரியவர்கள் எத்தனை பேருக்கு தமிழ் அறிச்சுவடிகள் தெரியுமென்பதே, கேள்விக்குறியாகும். இந்நிலை மாற வேண்டும்” என்றார் -

பாரதப் பிரதமரின் செவிகளில் மலையக அரசியல் தலைவர்கள் எதனைக் கூறப்போகிறார்கள்

$
0
0

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் மலையகத்தில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையிலான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அநேகமானவர்களின் எதிர்பார்ப்பாகும்.

எனினும், பாரதப் பிரதமரின் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு அரங்கேறும் அரசியல் நிகழ்வுகள் இன்று நாட்டின் அரசியல் அரங்கில் பிரதான தலைப்பாக மாறியுள்ளது.

பாரதத்தில் இருந்து தொழிலுக்காக கடல் கடந்து வந்த இந்திய வம்சாவளி மக்கள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட குடியிருப்புக்களில் இன்றளவும் சிலரது வாழ்க்கைச்சக்கரம் சுழல்கின்றமை கவலைக்குரியதே.நாட்டின் பொருளாதாரத்தை நிமிரச் செய்வதற்காக தினமும் தலைகுணிந்து தேயிலை பறிக்கும் இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகவே தொடர்கிறது.

வனவிலங்குகள், இயற்கை அனர்த்தங்கள் என சற்றும் குறைவிலாத ஆபத்துக்களுடன், பாதுகாப்பற்ற தொழிலாளர் தொடர் குடியிருப்புக்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புக்களின் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக பல உயிர்கள் பறிபோனதுடன் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தது.

இந்தியாவின் அயல் நாடான இலங்கையில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது இன்றும் கேள்விக்குறியே?
இந்தப் பின்புலத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் அமையப்போகிறது.

இந்த சிறந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு ஒன்றிணைந்து பயன்படுத்துவது என்பதனை சிந்திக்காமல் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது பலத்தை நிரூபிப்பதற்காக, இதனைப் பயன்படுத்த முயல்வதையே அண்மையில் நோர்வூட்டில் இடம்பெற்ற சம்பவம் பிரதிபலிக்கின்றது.
மலையகத்தின் பல பகுதிகளில் இந்தியப் பிரதமரின் புகைப்படத்துடன் தமது புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, வாகனங்களிலும் அதனை ஒட்டி நடமாடும் காட்சிகளை இன்றும் காணமுடிகின்றது.

நோர்வூட் நகரில் இருந்து 3 கிலோமீற்றர் தூரத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அமைந்துள்ளது. 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை 152 வருட வரலாற்றைக் கொண்டது.

வைத்தியசாலையில் நிலவிய குறைபாடுகளையும் மக்களின் தேவைகளையும் கருத்திற்கொண்டு 2011 ஆம் ஆண்டு புதிய மூன்று மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடைந்த போதிலும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டடம் மூடப்பட்டிருந்தது.

150 கட்டில்களையும் 6 சத்திரசிகிச்சைப் பிரிவுகளையும் ஒரு அவசர சிகிச்சைப் பிரிவையும் நவீன சமயலறை, வைத்தியர்களுக்கான விடுதி என சகல வசதிகளையும் உள்ளடக்கி இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அவசரமாகத் திறந்து வைக்கும் முயற்சிகள் மலையக அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

மண், கற்பாறை சரிவால் 428 பேர் வெளியேற்றம்

$
0
0
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், நேற்று (30) ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிவுகளால், இதுவரையிலும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 428 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை-யுனிபீல்ட், ஹோல்புறூக், திம்புள்ள- பத்தனை, யுனிபீல்ட் ஆகிய இடங்களிலேயே, மண்சரிவுகளும் கற்பாறைச் சரிவு அனர்த்தங்களும் இடம்பெற்றுள்ளன.   
அக்கரப்பத்தனை, யுனிபீல்ட் ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைச் சரிவு காரணமாக, 25 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் நியூகொலனி பிரதேசத்தில், திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 வெளியேற்றப்பட்டுள்ளனர்.  
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, யுனிபீல்ட் தோட்டத்தில் நேற்று (30) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால், 19 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  
நுவரெலியா, டெப்பாஸ் கிராமத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாயமுள்ளதால், கிராமத்திலுள்ள 84 குடும்பங்களை வெளியேறுமாறு, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பணித்துள்ளது.  
மேலும் நுவரெலியா டொப்பாஸ் முதல் இறம்பொடை வரையிலான பகுதிகளில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, நுவரெலியா இடர் முகாமைத்துவ பிரிவு அதிகாரி எம்.பண்டார தெரிவித்தார்.  
ஹரிஸ்பத்துவ மகாவூவா பகுதியில் மண்சரிவு ஏற்படும் வாய்புள்ளதால் அவதானமாக இருக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.   
இரத்தினபுரி பொத்குல் விகாரை மலைப் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேறும் படி,  இரத்தினபுரி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

மண்சரிவு அபாயம் - 60 பேர் வெளியேற்றம்

$
0
0

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்டத்தில் 31.05.2017 அன்று ஏற்பட்ட மண்சரிவில் ஒரு வீடு சேதமானதுடன் ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த 60 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். 

12 குடும்பங்கள் வசிக்கின்ற இந்த ஒரு லயன் குடியிருப்பில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதனால் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். 

இந் நிலையில் பாதுகாப்பு நலன் கருதி ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த சுமார் 60 பேர் வரை அக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு தோட்ட வெளிகல உத்தியோகத்தர் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர்உணவு பொருட்களை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் பெய்துவரும் அடைமழையினால் பேரழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் அதிக காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது. 

எங்கள் மீதுதான் தவறு; கிரகங்களில் இல்லை!

$
0
0
இலங்கை பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மேலுமொரு துயரத்திற்கு முகம் கொடுத்துள்ளது. வரட்சி, வெள்ளம், மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்கள் சாதாரண அனர்த்தங்களாக மாறி வருகின்றன. இற்றைக்கு இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மண்சரிவு என்பது அபூர்வமாக இடம்பெறும் விடயமாகும்.
தவறு கிரகங்களில் இல்லை. எமது கைகளில்தான் என்று மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். அதேபோல் இந்த அனர்த்தங்களின் போது மனித நடவடிக்கைகளும் இணைந்துள்ளன. இது இலங்கைக்கு மாத்திரம் பொதுவானது அல்ல. ஆபிரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் வெள்ளம், மண்சரிவு என்பவற்றிற்கு மனித நடவடிக்கைகள் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் பூமியை சுரண்டும் இந்நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.
2010-2011 பாகிஸ்தானில் இட ம்பெற்ற வெள்ளம் தொடர்பாக ஸ்டேன்பேர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தத்திற்கு அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததென்று வெளியாகியுள்ளது.
அவ்வறிக்கை கூறுவது போல் இயற்கை அழிவு பட்டியலுக்கு எல்லாவற்றையும் உள்ளடக்கி விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது அதற்கெதிரான மனித நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சிவில் சமூகத்தினருக்கு உரிமை உள்ளது. இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக சிவில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவ்வறிக்கை அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிடமும் கேட்டுள்ளது. அத்துடன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் சமனான தன்மையையும் தெளிவுபடுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இருபது இலட்சமாகும் இறந்தோரின் எண்ணிக்கை 1800 தொடக்கம் 2000 வரையாகும். 1.7 மில்லியன் வரையான வீடுகள் அழிக்கப்பட்டன. நாட்டின் மலைப் பிரதேசத்துக்கு கிடைத்த அதிக பருவப் பெயர்ச்சி மழையே இவ்வெள்ளத்திற்குக் காரணமானது.
கைப்பர் பிரதேசத்திற்கு ஜுலை 28 தொடக்கம் ஒகஸ்ட் 03 வரையான காலப் பகுதியில் பெறப்பட்ட அதிக மழையுடன் ஆரம்பித்த வெள்ளம் பல பிரதேசங்களின் அடிப்ப​ைட வசதிகளை மாத்திரமல்ல, சாதாரண மக்களின் வாழ்வாதார தொழில் மற்றும் சமூதாய வாழ்க்கையையும் முற்றாக அழித்தது. நிலைமையை சீராக்க பெருமளவு வளங்கள் தேவைப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண நிதிக்கு 1.79 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தது. அதற்கு அமெரிக்க 30 வீத நிதியையும் சவூதி அரேபியாக 1.5 வீதத்தையும் தனியார் மற்றும் அமைப்புகள் 17.5 வீதத்தையும் அந்நிதிக்கு அளித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
இலங்கை வெளிநாட்டு அமைச்சும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்த நிலைமைக்கு உதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு நாடுகளிடம் இருந்தும் தற்போது உதவிகள் கிடைத்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு உதவிகளை முகாமைத்துவம் செய்வதற்காக வேறான பிரிவொன்றும் அமைக்கப்பட்டு வெளிநாட்டவர்களுடன் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் என்பன முதலில் உதவி செய்ய முன்வந்த நாடுகளாகும்.
இதுவரை வெள்ளத்தாலும் மண்சரிவாலும் இறந்தோர் எண்ணிக்கை 193 ஆகும். அதேபோல் காயமடைந்தோர் ஏராளம். 114124 குடும்பங்களைச் சேர்ந்த 442299 பேர் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். பாதிப்புகள் தொடர்பாக இறுதி மதிப்பீடு மில்லியன் அளவில் அல்ல பில்லியன் அளவில் கணக்கிட வேண்டி வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அனர்த்த நிவாரண பணிகளுக்காக அரசாங்கம் 45 மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருந்தது. அதனை தற்போது 150 மில்லியனாக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் வாழ்க்கையை பணத்தினால் மதிப்பீடு செய்ய முடியாது. ஆனாலும் இறந்த ஒருவருக்காக பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அதிகளவு நிதி தேவை. உடைந்த வீடுகள் அனைத்துக்கும் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க அரசாங்கம் உறுதிமொழி அமைத்துள்ளது. மேற்கு, தெற்கு, மத்திய சப்ரகமுவ, கிழக்கு போன்ற மாகாணங்களின் அடிப்படை வசதிகள் அழிந்து போயுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் மின்விநியோகத்தை புனரமைக்க வேண்டியுள்ளது. கிராமப்புற பாதைகள், பாலங்கள், மதகுகள் மற்றும் சிறிய நீர்ப்பாசன குளங்கள் பாதிப்படைந்துள்ளன.
பொருளாதார பாதிப்பு:
மக்களின் சுகாதார நடவடிக்கைகளுக்கான கிணறு, குளம் கழிப்பறை ஆகியனவும் நீரும் மிகவும் அசுத்தமான நிலமையில் உள்ளன. அப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நேரத்தில் இடைநடுவில் தடைப்பட்டிருக்கும் தொழில்கள் மற்றும் வருமானத்துக்கான வழிகளை பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.
பொருளாதார பயிர்ச்செய்கைக்கான நிலங்கள் மண்சரிவுக்கு உட்பட்டுள்ளது. (09ம் பக்கம் பார்க்க)
கருணாரத்ன அமரதுங்க

மண் சரிவு அபாயமுள்ள 1000 இடங்கள் பரிசோதனை

$
0
0

மண் சரிவு அபாயம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. 

பல மாவட்டங்களில் மண் சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் மண் சரிவு ஆராய்ச்சி மற்றும் அபாய முகாமைத்துவ பணிப்பாளர் ஆர். எம்.எஸ். பண்டார கூறினார். 

பரிசோதனைக் குழு வரவில்லை எனக் கூறி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வௌியேறாதிருப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

12 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய தோட்ட அதிகாரியின் மனைவி கைது

$
0
0
சிறுமியை (12 வயது) வீட்டு வேலை க்கு அமர்த்தி அடித்து கொடூரமாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை யடுத்து தலாத்துஓயா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தோட்ட அதிகாரி ஒருவரின் மனைவியை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தலாத்துஓயா கெட்டவல பிரதேசத்தில் இரவு வேளை (8.40 மணியளவில்) சிறுமி ஒருவர் வீதியில் தனிமையில் அழுதுகொண்டு சென்றுக்கொண்டிருப்பதை அவதானித்த பிரதேச வர்த்தக நிலையப் பெண் ஒருவர் இச் சிறுமி குறித்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
சிறுமியை அழைத்து அப்பெண் விசாரித்தபோது அந்தச் சிறுமி தமிழ் சிறுமி என தெரியவரவே பெண் வேரொருவரை அழைத்து அவரின் உதவியுடன் சிறுமியை விசாரித்துள்ளார்.
சிறுமி தான் வேலை செய்து வந்த வீட்டில் எஜமானியினால் இழைக்கப்படும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டைவிட்டு ஒருவருக்கும் தெரியாமல் தப்பிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவசர பொலிஸ் பிரிவு 119 இலக்கத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் உடனடியாக அங்கு வி்ரைந்து சிறுமியைப் பொறுப்பேற்றனர்.
பொலிஸாரின் விசாரணைகளின்போது அச்சிறுமி தெரிவித்தாவது, எனது பெயர் சுப்பிரமணியம் மல்காந்தி, நான் அம்மாவுடனும் தம்பியுடனும் கலவான குண்டல தோட்டத்தில் வசித்து வருகின்றேன். தந்தை இறந்துபோனார், அம்மா தோட்டத்தில் வேலை செய்து வருகின்றார். தோட்டத்தில் தொழில் செய்யும் நபர் ஒருவர் கெட்டவலயில் உள்ள வீடொன்றிற்கு அழைத்து வந்தார்.
வீட்டிலிருந்த எஜமானியான நோனா கடுப்பானவர். எந்தநேரமும் கோபத்துடனேயே காணப்படுவார். அவர் என்னை அடிக்கடி தும்புத்தடியாலும் தடிகளாலும், கைகளாலும் அடிப்பார். கொடூரமாக சித்திரவதை செய்வார். என்னை படிக்கவைக்கப் போவதாக கூறிய அவர்கள், வீட்டை கூட்டி பெருக்குவது, சமையல் பானைகள், பிங்கான் கோப்பைகளை சுத்தம் செய்வது, அடுப்பு எரிப்பது போன்ற வேலைகளையே செய்ய வைப்பார்கள்.
எனக்கு படுக்க பாய், தலையணை, விரிப்பு போர்வை எதுவுமே கிடையாது.
நான் தரம் ஒன்று மட்டுமே பாடசாலை சென்று கல்விகற்றேன். அவர்கள் பாடசாலைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தபோதும் அது குறித்து எவ்வித கவனமும் எடுக்கவில்லை. பொடியன் ஒருவனைத் தேடி எனக்கு கட்டிவைப்பதாக எல்லாம் தெரிவித்தார்கள் என அழுத வண்ணம் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தார். அதேவேளை தோட்ட அதிகாரியின் மனைவியே தனது எஜமானி என்றும் தெரிவித்தார்.
இதனை யடுத்து தலாத்துஓயா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உபேவங்சவின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் தோட்ட அதிகாரியின் மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-தினகரன் -

12 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய தோட்ட அதிகாரியின் மனைவி கைது

$
0
0
சிறுமியை (12 வயது) வீட்டு வேலை க்கு அமர்த்தி அடித்து கொடூரமாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை யடுத்து தலாத்துஓயா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தோட்ட அதிகாரி ஒருவரின் மனைவியை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தலாத்துஓயா கெட்டவல பிரதேசத்தில் இரவு வேளை (8.40 மணியளவில்) சிறுமி ஒருவர் வீதியில் தனிமையில் அழுதுகொண்டு சென்றுக்கொண்டிருப்பதை அவதானித்த பிரதேச வர்த்தக நிலையப் பெண் ஒருவர் இச் சிறுமி குறித்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
சிறுமியை அழைத்து அப்பெண் விசாரித்தபோது அந்தச் சிறுமி தமிழ் சிறுமி என தெரியவரவே பெண் வேரொருவரை அழைத்து அவரின் உதவியுடன் சிறுமியை விசாரித்துள்ளார்.
சிறுமி தான் வேலை செய்து வந்த வீட்டில் எஜமானியினால் இழைக்கப்படும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டைவிட்டு ஒருவருக்கும் தெரியாமல் தப்பிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவசர பொலிஸ் பிரிவு 119 இலக்கத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் உடனடியாக அங்கு வி்ரைந்து சிறுமியைப் பொறுப்பேற்றனர்.
பொலிஸாரின் விசாரணைகளின்போது அச்சிறுமி தெரிவித்தாவது, எனது பெயர் சுப்பிரமணியம் மல்காந்தி, நான் அம்மாவுடனும் தம்பியுடனும் கலவான குண்டல தோட்டத்தில் வசித்து வருகின்றேன். தந்தை இறந்துபோனார், அம்மா தோட்டத்தில் வேலை செய்து வருகின்றார். தோட்டத்தில் தொழில் செய்யும் நபர் ஒருவர் கெட்டவலயில் உள்ள வீடொன்றிற்கு அழைத்து வந்தார்.
வீட்டிலிருந்த எஜமானியான நோனா கடுப்பானவர். எந்தநேரமும் கோபத்துடனேயே காணப்படுவார். அவர் என்னை அடிக்கடி தும்புத்தடியாலும் தடிகளாலும், கைகளாலும் அடிப்பார். கொடூரமாக சித்திரவதை செய்வார். என்னை படிக்கவைக்கப் போவதாக கூறிய அவர்கள், வீட்டை கூட்டி பெருக்குவது, சமையல் பானைகள், பிங்கான் கோப்பைகளை சுத்தம் செய்வது, அடுப்பு எரிப்பது போன்ற வேலைகளையே செய்ய வைப்பார்கள்.
எனக்கு படுக்க பாய், தலையணை, விரிப்பு போர்வை எதுவுமே கிடையாது.
நான் தரம் ஒன்று மட்டுமே பாடசாலை சென்று கல்விகற்றேன். அவர்கள் பாடசாலைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தபோதும் அது குறித்து எவ்வித கவனமும் எடுக்கவில்லை. பொடியன் ஒருவனைத் தேடி எனக்கு கட்டிவைப்பதாக எல்லாம் தெரிவித்தார்கள் என அழுத வண்ணம் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தார். அதேவேளை தோட்ட அதிகாரியின் மனைவியே தனது எஜமானி என்றும் தெரிவித்தார்.
இதனை யடுத்து தலாத்துஓயா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உபேவங்சவின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் தோட்ட அதிகாரியின் மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரசியல்வாதிகளின் கண்களில் தென்படாத பசுமலை தோட்டம்

$
0
0
எத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும், எத்தனையோ அரசியல் மாற்றங்கள் வந்த போதிலும், குயின்ஸ்பெரி பிரிவு பசுமலை தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.

இரு இனங்கள் வாழும் பிரதேசங்களுக்கிடையில், இரு மாவட்டங்களுக்கிடையில், இரு நிர்வாக பிராந்தியங்களுக்கிடையில் எல்லையாக அமைந்துள்ள இடங்களில் இவ்வாறான குறைகள் காணப்படுவது வழமை. இவ்வாறான பிரதேசங்களில் பெரும்பாலானவை அபிவிருத்தி குன்றியதாகவும் பலரின் கவனத்திற்கு அகப்படாமலும் காணப்படுகின்றன.

மலையகத்தில் நவநாத சித்தர் வாழ்ந்ததாகக் கூறப்படும் குயின்ஸ்பெரி தோட்டத்திலும் இவ்வாறானதொரு நிலைமை காணப்படுகின்றது. குயன்ஸ்பெரி வடக்கு, குயின்ஸபெரி; மேற்கு, குயின்ஸ்பெரி கீழ்ப் பிரிவு ஆகியன காவத்தை பெருந்தோட்டக் கம்பனியின் நிர்வாகத்திற்குக் கீழ் இயங்கி வருகின்றன.

குயின்ஸ்பெரி கீழ்ப் பிரிவானது ஒருபகுதி கொத்மலை செயலகத்திற்கு உட்பட்டதாகவும், மற்றைய பகுதி கடியலென பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டதாகவும் இயங்கி வருகின்றது. அதேநேரம் தனியார் ஒருவருக்குச் சொந்தமான பசுமலை பிரிவு பலரால் அறியப்படாத ஒரு பிரதேசமாகும். இந்தப் பிரதேசமும் கடியலென கிராம சேவகர் பிரிவுக்குரியதாகவும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்குரியதாகவும் உள்ளது. 8 குடும்பங்கள் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றன.

365 ஏக்கர் பரப்பைக் கொண்ட இந்த பசுமலை பிரிவானது 1970 களில் தோட்டங்கள் அரசு உடமையாக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டபோது தனியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தோட்டத்தினைச் செயற்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. ஏறத்தாள 150 குடும்பங்கள் வாழ்ந்த போதிலும் பலர் தோட்டம் கைவிடப்பட்ட பின்னர் ஆங்காங்கே வெவ்வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். 8 குடும்பங்கள் மாத்திரமே தினக்கூலியாக வாழ்ந்து வருகின்றனர்.

சில காலத்திற்குப் பிறகு இத்தோட்டம் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிறு உடமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் உடமையாளரால்; இந்த எட்டு குடும்பங்களையும் உடனடியாக வெளியேறும்படியும் வெளியேறாவிடின் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங். பொன்னையா அவர்களினூடாக இம்மக்கள் தொழில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை ஏக்கர் காணி வழங்க இணக்கம் காணப்பட்ட பொழுதும் இதுவரை அக்காணி வழங்கப்படவில்லை.

மிகவும் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் இவர்கள், தற்பொழுது பிரதானமாக பாதைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களது குடியிருப்புக்குச் செல்லும் பிரதான பாதையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் காணப்படுகின்றது.

இவர்களுக்கான நீர்விநியோகத்திற்கான ஆரம்ப இடம் மற்றொரு உடமையாளர்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதால் இவர்களுக்கான குடிநீர் குழாயினை மாற்றி அவர்களுடைய விவசாயத் தேவைகளுக்கு உபயோகித்து வருகின்றனர். இதற்கெதிராக கேட்கச் சென்றவர்களை பெண் மீது பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சித்தார்கள் என்று சோடிக்கப்பட்டு நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களை 5 நாட்கள் வரை விளக்கமறியலில் வைத்திருந்த அவலமும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் குயின்ஸ்பெரி பாடசாலையிலும், நாவலப்பிட்டி கதிரேசன் பாடசாலையிலும் கல்வி கற்று வருகின்றனர். குறித்த தோட்டம் தொடர்பிலும், நிலவும் பிரச்சினை தொடர்பிலும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட விஜயம் செய்திருந்தோம். இத்தனை வருட வரலாற்றில் அரசியல் சார்ந்தோ, அரசு சார்ந்தோ, தனியார் துறை சார்ந்த எந்தவொரு அலுவலரும் அங்கு வரவில்லை. அவர்களின் குறைகளைக் கேட்கவில்லை என்பதே அம்மக்களின் அங்கலாய்ப்பாக இருந்தது.

பாதை வசதி, இருப்பிட வசதி, குடிநீர் வசதி, வாழ்வாதார வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் இம்மக்கள் விஷேட கவனத்திற்குரியவர்களேயாவர்.

இம்மக்களுக்கான தீர்வாக இவர்களுக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணிகளை பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இக்குடும்பங்களுக்காக வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி அவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்புகளைப் பெற்று கொடுக்கலாம். தற்காலிகமாக இவர்களுக்கான மாற்றுத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தும் வரை குடிநீர், பாதை, கூரைத் தகடுகளை பெற்றுக் கொடுக்கலாம்.

இதனடிப்படையில்; சமுதாய அபிவிருத்தி அமைச்சர்; பணிப்புரைக்கு அமைய குடிநீர்த் திட்டத்திற்கான நிதியொதுக்கீடு இப்போது செய்யப்பட்டுள்ளதோடு, கூரைத் தகடுகளும், வழங்கப்படவிருக்கின்றன. இந்திய வீடமைப்புத் திட்டத்திலும் இந்த 08 குடும்பங்களையும், உள்வாங்குவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணியினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தினகரன்

Viewing all 376 articles
Browse latest View live