Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all 376 articles
Browse latest View live

சம்பள விவகாரத்தில் இழுத்தடிப்பு வேண்டாம்

0
0
பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் காலா­வதி­யாகி நான்கு மாதங்கள் நிறை­வ­டை­யப்­போ­கின்ற நிலை­யிலும் புதிய கூட்டு உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் தொடர்ச்­சி­யாக தோல்­வி­யையே சந்­தித்து வரு­கின்­றன. பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் தமக்கு நாட் சம்­ப­ள­மாக 1000 ரூபாவை வழங்­கக்­கோரி நிற்­கின்ற நிலையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் அதனை நிரா­க­ரித்­து­வ­ரு­கின்­றது. கூட்டு ஒப்­பந்த விவ­காரம் தொடர்பில் இது­வரை ஆறு சுற்று பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­விட்­ட­போதும் அவை தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தன.
முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடையில் இது­வரை நடை­பெற்ற நான்கு சுற்று பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளன. அதன்­ பின்னர் தொழில் அமைச்­சுக்கும் முத­லாளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­தன. அந்­த­வ­கையில் நடை­பெற்ற அனைத்து பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் சார்பில் 1000 ரூபா நாட் சம்­பளம் கோரப்­பட்­டு­வ­ரு­கின்ற போதும் தோட்ட கம்­பனி நிர்­வா­கங்கள் அந்த கோரிக்­கையை நிரா­க­ரித்­து­வ­ரு­கின்­றன.
முத­லாளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் தொழில் அமைச்­சுக்கும் இடையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது பெருந்­தோட்­டத்­துறை தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளொன்­றுக்கு மொத்த சம்­ப­ள­மாக 700 ரூபாவை வழங்க முன்­வந்­தன. எனினும் தொழி­லா­ளர்கள் சார்பில் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்ட தொழிற்­சங்­கங்கள் கம்­ப­னி­களின் இந்த அறி­விப்பை நிரா­க­ரித்­துள்­ளன.
தொழிற்­சங்­கங்கள் சம்­பள உயர்­வாக 1000 ரூபா­வையே பெற்­றுத்­தர வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலும் 700 ரூபா­வை­விட அதி­க­ரிக்க முடி­யாது என்ற ரீதியில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் பிடி­வாதப் போக்கை கடைப்­பி­டித்­ததால் நான்கு மணி நேரம் நீடித்­தி­ருந்த ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பா­டுகள் இன்றி முடி­வுக்கு வந்­தது.
எனினும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் நிறை­வ­டைந்­ததும் மீண்டும் பேசித் தீர்­மானம் ஒன்­றுக்கு வரு­வ­தென முடி­வெ­டுப்­ப­தற்கு இந்த ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலை­மையில் தொழில் அமைச்சில் இடம்­பெற்ற இப்­பேச்­சு­வார்த்­தையில் பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சர் கே.வேலா­யுதம் உள்­ளிட்ட பிர­தி­நி­திகள், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள், பெருந்­தோட்ட தொழிற்­சங்க கூட்­ட­மைப்பின் பிர­தி­நிதி, முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் அதி­கா­ரிகள், தோட்ட முகா­மைத்­துவ கம்­ப­னி­களின் நிறை­வேற்று அதி­கா­ரிகள் ஆகியோர் கலந்துகொண்­டி­ருந்­தனர்.
அதா­வது தற்­போ­தைய சூழ்­நி­லையில் சர்­வ­தேச சந்­தையில் தேயி­லையின் விலையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளதன் கார­ண­மாக கம்­ப­னி­க­ளுக்கு நஷ்டம் ஏற்­ப­டு­வ­தா­கவும் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வது இன்­றைய நிலையில் சாத்­தி­ய­மில்லை எனவும் 700 ரூபா­வையே மொத்த சம்­ப­ள­மாக வழங்­க­மு­டியும் என கம்­ப­னிகள் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எனினும் கம்­ப­னி­களின் இந்­நி­லைப்­பாட்டை நிரா­க­ரித்­துள்ள பெருந்­தோட்டத் தொழில் இரா­ஜாங்க அமைச்சர் கே.வேலா­யுதம், கம்­ப­னிகள் கொடுக்­கின்ற பணி­களை தொழி­லா­ளர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் முழு­மை­யாக நிறை­வேற்­று­கின்­றனர். எனவே அவர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பு வழங்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­ய­துடன் தோட்­டங்­களை இலா­ப­மீட்டும் வகையில் நிர்­வ­கிக்க வேண்­டி­யதும் அபி­வி­ருத்தி செய்­ய­வேண்­டி­யதும் தோட்டக் கம்­ப­னி­களின் பொறுப்­பாகும். அதற்கு தொழி­லா­ளர்கள் பொறுப்புக் கூற­மு­டி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
கூட்டு ஒப்­பந்த காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்த நிலையில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பொன்றை முத­லா­ளிமார் சம்­மே­ளனம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. அந்தக் கோரிக்­கையை பெருந்­தோட்டத்­து­றையின் ஏனைய தொழிற்­சங்­கங்களும் வலி­யு­றுத்­தி­ய­துடன் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்டு வந்­தன. ஆனால் இது­வரை விமோ­சனம் கிடைக்­காமல் உள்­ளது.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தமது உடலை வருத்தி மேற்­கொள்­கின்ற உழைப்­புக்கு ஏற்ற நியா­ய­மான ஊதி­யத்தை பெறு­வதில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் பாரிய போராட்­டத்­தையே நடத்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை காணப்­ப­டு­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெலும்­பாக இருக்கும் தோட்ட தொழி­லா­ளர்­களின் உழைப்­புக்கு நியா­ய­மான சம்­பளம் கிடைக்­காமல் இருப்­ப­தா­னது பெரும் வேத­னைக்­கு­ரிய நிலை­யாகும்.

நாட்டின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள நிலை­யிலும் மக்­களின் சமூக வாழ்க்கை நிலையில் முன்­னேற்­றங்கள் வந்­து­கொண்­டி­ருக்­கின்ற சூழ­லிலும் பெருந்­தொட்ட தொழி­லா­ளர்­களின் வாழ்க்கை நிலையும் அவர்­களின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பும் தொடர்ந்தும் வீழ்ச்சிப்பாதையில் பய­ணிப்­ப­தா­னது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

அந்த மக்­களின் வரு­மான கட்­ட­மைப்­பா­னது தொடர்ந்தும் பரி­தா­ப­க­ர­மான நிலை­யி­லேயே இருந்துவரு­கின்­றது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டு­வ­ரு­கின்ற போதிலும் அந்த மக்கள் கோரு­கின்ற நியா­ய­மான சம்­பள உயர்வு அவற்றின் ஊடாக வழங்­கப்­பட்­ட­தில்லை. இதனால் பெருந்­தோட்ட மக்கள் மிகவும் பரி­தா­ப­க­ர­மான வாழ்க்­கை­யையே நடத்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய சூழல் நில­வி­வ­ரு­கின்­றது.

பெருந்­தோட்ட மக்கள் வறுமை நிலை­யி­லேயே தமது வாழ்க்கைப் பய­ணத்தைக் கொண்டு நடத்­த­வேண்­டி­யுள்ளதால் பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். தமது பிள்­ளை­க­ளுக்கு சிறந்த கல்­வியை வழங்கி அவர்­களை சமூ­கத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்­டு­வ­ரு­வதில் அந்த மக்கள் பாரிய பிரச்­சி­னை­க­ளையும் சிக்­கல்­க­ளையும் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர்.

கல்விப் பிரச்­சினை, சுகா­தாரப் பிரச்­சினை, போக்­கு­வ­ரத்து மற்றும் சமூக வச­தி­யின்மை உள்­ளிட்ட பல சிக்­கல்­க­ளுக்கு பெருந்­தோட்ட மக்கள் முகம்­கொ­டுத்­து­வ­ரு­கின்­­றனர். தமது அன்­றாட வாழ்க்­கையை கொண்டு நடத்­து­வ­தற்கு பாரிய திண்­டாட்­டங்­க­ளையே தோட்டத் தொழி­லா­ளர்கள் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர். எனவே தோட்டத்தொழி­லா­ளர்­களின் இந்தப் பிரச்­சி­னையை தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. 1000 ரூபா சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதில் மலையக தொழிற்­சங்க மற்றும் அர­சியல் தலை­மைகள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எக்­கா­ரணம் கொண்டும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் நியா­ய­மான சம்­பள கோரிக்­கை­யான 1000 ரூபா விட­யத்தை தொழிற்­சங்க மற்றும் அர­சியல் தலை­மைகள் கைவிட்­டு­வி­டக்­கூ­டாது.

அத்­துடன் இது தோட்டத்தொழி­லா­ளர்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடை­யி­லான பிரச்­சினை என்று கருதி அர­சா­ங்கம் இந்த விட­யத்தில் மௌனப் போக்கை கடை­ப்பி­டிக்­கக்­கூ­டாது. தொழில் அமைச்சு இந்த விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை செய்ய முன்­வ­ர­வேண்டும்.

ஏற்­க­னவே தொழில் அமைச்சு முதலா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் இந்த விவ­காரம் தொடர்பில் இரண்டு சுற்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி ஒரு ஆரோக்­கி­ய­மான தலை­யீட்டை மேற்­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். ஆனால் இத்துடன் நிறுத்திவிடாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடவேண்டியது அவசியமாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் காணப்படுகின்ற துயர்மிக்க வரலாற்றுக்கு முடிவு கட்டவேண்டியது அவசியமாகும். அந்த மக்களின் நியாயமான சம்பள அதிகரிப்புக்கு வழிவகுக்கவேண்டியது கட்டாயம். தொடர்ந்து அந்த மக்கள் வேதனையுடன் வாழும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடாது. தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறி மக்களின் நியாயமான சம்பள உயர்வை வழங்காமல் விட்டுவிடக்கூடாது. நடைமுறையில் இருந்த கூட்டு உடன்படிக்கை காலாவதியாகி நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வைக்காண அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.


நன்றி- வீரகேசரி

23,500 ரூபா சம்­பளம் என்­பதில் உண்­மை­யில்லை

0
0
பெருந்­தோட்டப் பாட­சா­லை­க­ளுக்­கென்று நிய­மனம் பெற்ற உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடு க்­கப்­ப­டு­மாயின் முதலில் மகிழ்ச்­சி­ய­டை­பவன் நானா­கவே இருப்பேன். ஆனால் உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு 23 ஆயி­ரத்து ஐநூறு ரூபா என்­ற­டிப்­ப­டையில் கூடுதல் சம்­ப­ள த்தைப் பெற்றுக் கொடுப்­ப­தாகக் கூறி வரு­வது உண்­மைக்குப் புறம்­பா­ன­தா­கு­ மென்று இ.தொ.கா வின் உப தலைவர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்தார்.
 
மடுல்­சீமை, ஊவா பர­ண­கமை, அப்­புத்­தளை போன்ற இடங்­களில் நடை­பெற்ற இ.தொ.கா. வின் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் இ.தொ.கா. உப தலைவர் செந்தில் தொண்­டமான் கலந்து கொண்­பே­சு­கை யில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.தொடர்ந்து அவர் பேசு­கையில்;
 
‘‘கடந்த ஆட்­சியின் போது இ.தொ.கா. எடுத்துக் கொண்ட முயற்­சி­களின் பல­னாக மூவா­யிரம் உதவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்க அரசு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது. அதற்­க­மைய புதிய ஆட்­சயின் போது ஒரு தொகுதி உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன. இந்­நி­ய­ம­ன ங்­களில் ஊவா மாகா­ணத்தில் 599 பேர் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு 23 ஆயி­ரத்து ஐநூறு ரூபா என்ற அடிப்­ப­டை யில் கூடுதல் சம்­பளம் பெற்றுத் தரு­வ­தாக மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­தி­ருந்தார்.அவ்­வு­தவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கடந்த மாதம் வழங்­கப்­பட்ட சம்­ப­ளமும் வர்த்த மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டி­ருந்­த­ப டியே வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்­களுக்கு கூடுதல் சம்­ப­ளத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான எந்­த­வொரு முயற்­சியும் எடுக்­கப்­ப­ட­வில்லை. கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடுப்­ப­தாக கூறப்­படும் கூற்­று க்கள் அனைத்தும் உண்­மைக்குப் புறம்­பா­ன­தாகும். புத்­தி­ஜீ­வி­க­ளான ஆசி­ரியர் சமூ­கத்­தையே ஏமாற்­றி­யி­ருக்கும் இவர்கள் பாமர மக்­களை எவ்­வ­கையில் ஏமாற்­று­வார்கள் என்­பது அம் மக்­க­ளுக்கே தெரிந்த விட­ய­மாகும்.
 
கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடுப்­பது தொடர்­பான உண்மை நிலை­யி­னை­ய­றிய சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அணுகி வின­வி­ய­போது, ‘‘நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்ட உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டுள்ள பிர­காரம், சம்­பளம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. கூடுதல் சம்­பளம் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பது குறித்து எத்­த­கைய தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை” என்று கூறினர்.
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஆயிரம் ரூபா சம்­பள உயர்­ வினை இ.தொ.கா. பெற்றுக் கொடுப்­பது உறு­தி­யாகும். பெற்றுக் கொடுக்க முடி­யா­விட்டால் இ.தொ.கா. அக் கோரிக்­கையை முன்­வைக்­காது. தோட் டக் கம்­ப­னி­களின் ஆத­ர­வா­ள ர்­க­ளாக செயல்­பட்­டு­வரும் மலை­யக தொழிற்­சங்­கங்கள் சில ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வினை வழங்க மறுக்கும் கம்­ப­னி­யா­ளர்­களை எதிர்க்­காமல் சம்­பள உயர்­வினைப் பெற்றுக் கொடுக்க முனையும் இ.தொ.கா. வை எதிர்க்­கவும், விமர்­ச னம் செய்­ய­வு­மான செயல்­பா­டு­களை மேற்­கொள்­கின்­றனர்.பெருந்­தோட்ட மக்கள் குறித்து அக்­க­றை­ யு­டனும் உணர்வு பூர்­வ­மா­கவும் செயற்­ப டும் ஒரே அமைப்பு இ.தொ.கா. மட்­டு­மே­யாகும்.
 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவிற் கும் இ.தொ.கா. விற்கும் இடையில் பூரண நல்லுறவுகள் தொடர்ந்த வண்ணமேயு ள்ளன. அந் நல்லுறவுகளின் பயனாக மேலும் மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும், தோட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒவ் வொரு தோட்டப் பிரிவிற்கும் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என் றார்.

மனசாட்சி உடன்படிக்கையில் மலையக மக்களுக்கும் தீர்வு

0
0
மக்கள் விடுதலை முன்னிணியின் மனசாட்சி உடன்படிக்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்,கிறிஸ்தவ மக்கள் உட்பட மலையக மக்களின் பிரச்சினை களுக்கும் தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளதாக  இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை க்கு சரியான தீர்வு பெற்று கொடுப்பதோடு அவர்களின் சம்பள உயர்வு விடயத்தில் நாம் போராட்டம் நடத்தி அதை பெற்றுகொடுக்க முன்னின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ள சுந்தரலிங்கம் பிரதீப் ஊழல் இல்லாத அரசியல் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது. தவறு செய்பவர்களை தட்டி கேட்கக்கூடிய தகுதி, இக்கட்சிக்கு  மட்டுமே உள்ளது என்றார்.
'கடந்தகால தேர்தல்களைவிட இம்முறை தேர்தலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நான்கு இன மக்களும் என்றும் இல்லாதவாறு இன்று, மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றனர். இதனால், இரத்தினபுரி மாவட்டத்தில் ம.வி.மு.இன் பிரதிநிதி ஒருவர் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
'மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த ம.வி.மு மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு என்றுமே தயாராக உள்ளது. இன,மத,மொழி,பேதங்களின்றி ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்'என அழைப்புவிடுத்தார்.

மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய சம்பளம் இல்லை

0
0
1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.

இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.

இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.

நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.

இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.  சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையக கட்சிகளின் பதில் என்ன?

0
0
இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. ரணில் தலைமை யிலான ஐக்கிய தேசிய முன்ன ணிக்கும் மஹிந்த தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது. மலையகத்தில் போட்டியிடுகின்ற திகாம்பரம், ராதாகிருஷ்ணன் சார்ந்துள்ள கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதோடு, ரங்காவின் கட்சியும் ஆறுமுகம் தொண்டமானின் காங்கிரஸ் கட்சியும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி புதிய ஆட்சியைக் கைப்பற்ற முழு மூச்சுடன் களத்தில் நிற்கின்றன.
மலையகம் சார்ந்த தமிழ் கட்சிகளில் ரங்காவின் கட்சியைத் தவிர திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் தொண்டமான் சார்ந்த கட்சிகள் பதுளை, நுவரெலியா பிரதேசங்களில் ஆசனங்களைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மலையகத்தின் ஏனைய பிரதேசங்களில் தமிழ் வாக்குகளை யானைக்கும் வெற்றிலைக்கும் பெற்றுக்கொடுப்பதில் மலையகக் கட்சிகள் ஆர்வத்தோடு செயற்படுகின்றன. தமது அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மலையக அரசியல்வாதிகள் தமது அணிசார்ந்து பெருந்தோட்டத்துறை வாழ் மக்களுக்கும் பொதுவாக மலையகத்துக்கும் பெற்றுக்கொடுக்கப் போவது என்ன? மக்களைக் கவரும் மேடைப் பேச்சுக்களோ, துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்படுபவை போன்றன என்றும் ஏட்டுச்சுரக்காய்தான்.
முன்னைய மஹிந்தரின் ஆட்சியிலும், இவ்வருடம் ஜனவரியில் பதவியேற்ற ரணில் தலைமையிலான அரசும் தொழிலாளர்களுக்கு 7 பர்ச்சஸ் காணி என்பதையே உறுதிப்படுத்திவிட்டன. இரண்டாவது, சம்பள ஒப்பந்த விடயம். தேர்தல் முடிந்ததும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதனை விட வேறு விடயங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டங்களை உள்ளடக்கி மலையக வாழ் தமிழர்களின் தனித்துவமிக்க அடையாளங்களை பேணிப்பாதுகாக்கவும் சமூக, கலை, கலாச்சார, பாதுகாப்பு விடயமாகவும் மண்சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் என்ன?
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 1911இல் 13 வீதமாக இருந்த மலையகத் தமிழர்கள் 2011இல் 4.8 வீதமாக குறைந்திருப்பதற்கான சமூக அரசியல் பின்னணி என்னவென ஆராய வழிவகுக்கப்படுமா? இதன் பாதிப்புகள் வெளிக்கொணரப் படுமா? (பெருந்தோட்ட ஆரம்பப் பாடசாலை கள் பிள்ளைகளின் வரவின்றி தொடர்ச்சியாக மூடப்படுகின்றன).
அரசு பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்டதும் JEDB, SLSPC, எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றிடமும் பெருந்தோட்டங்கள் நிறுவைக்குக் கொடுக்கப்பட்டன. இத்தோட்டங்களில் தொழில்புரிந்தோரின் EPF, ETF பணமான ரூபா 1888 மில்லியனுக்கும் அதிகமான தொகை மிக நீண்டகாலமாக மத்திய வங்கியில் வைப்பிலிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்பணத்தின் உரிமையாளர்களான தொழிலாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன?
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை 1904இல் – 1320, 1980இல் – 668, 1992இல் – 506, 2013இல் – 427 என தோட்டங்கள் குறைந்துகொண்டு வருகின்றன. இதனால், இத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் சமூக பாதிப்புகள் பற்றி ஆராயப்படுமா?
தொழிலாளர்களாக 1981இல் – 497,995 பேர், 1992இல் – 376,498 பேர், 2013இல் – 193,412 பேர் எனக் குறைந்துள்ளதோடு, தொழிலாளர்கள் சுயமாகவே பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவதற்கான பின்புலங்கள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றமைக்கான அரசியல் பொருளாதார காரணிகள் கண்டறியப்படவும், இவர்கள் தமது வாழ்விடங்களில் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட திட்டங்கள் உள்ளனவா?
மேலும், 1995இல் 82,000 ஹெக்டேயராக இருந்த சிறு தோட்டங்க ள் 2012இல் 120,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதோடு, தேயிலை உற்பத்தியில் 70 வீதத்தினை இவர்களே மேற்கொள்கின்றனர். இன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். இந்நிலைக்கு 200 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உயர்த்தப்படுவார்களா?
மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள மற்றும் நல விடயமாக 2 வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படுகிறது. அதற்காக போலிப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை விடுவித்து நிலத்தோடு ஒட்டிய சுயபொருளாதாரத்தில் அபிவிருத்தியடைய வகுத்துள்ள திட்டம் என்ன?
பெருந்தோட்ட தொழிலாளர்களில் 32 வீதமானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும், 11.4 வீதமானோர் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிலையில் வாழ்கின்றனர் என்றும் கடந்தகால புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலை போக்க எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் ஏதும் உண்டா?
பெருந்தோட்டங்கள் தோறும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் பாலர் பாடசாலைகளும் உருவாக்கப்படுகின்றன; வரவேற்றகத் தக்கது. இது தொழில் காரணங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இதை யாவரும் அறிவர். இந்நிலையில், வாழ்வின் இறுதிவரை உழைத்து வயதுமுதிர்ந்த நிலையில் ஆதரவற்று இருப்போருக்காக வயோதிப இல்லங்கள் உருவாக்கப்பட திட்டங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டக் கம்பனிகள் தமது பயன்பாட்டிலிருந்து வருடாந்தம் ஒதுக்கப்படும் காணிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அதாவது, 2005 – 2011 காலப்பகுதியில் வருடாந்தம் 1,650 ஹெக்டேயர் காணிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. பெருந் தோட்டங்கள் தொடர்ச்சியாக நட்டமடைவதாகக் கூறுகின்ற இக்காலக்கட்டத்தில் காணி சட்டத்தின் கீழ் மீண்டும் அரசு பெருந்தோட்ட காணிகளைப் பொறுப்பேற்று பிரதேச செயலர்கள் ஊடாக மலையக மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படுமா?
இறுதியாக மலையக மக்களும் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என்பதற்கான அனைத்து அடையாளங்களும், உரிமைகளும் கொண்டிருப்பவர்களாக விளங்குகின்றனர். இலங்கை வாழ் மலையக மக்கள் எனும் கௌரவ நிலையை அரசியல் சாசனம் ஊடாக உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
மலையக அரசியல்வாதிகளே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கான சலுகைகளையும் பாதுகாப்பையும் அதிகரித்துக் கொள்வீர்கள். பாதுகாப்புப் படைகளோடு உலாவருவீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் இந்நாட்டின் கௌரவ பிரஜைகளாக வாழ அரசியல், பொருளாதார, சமூக பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கத் தீட்டப்படும் திட்டங்கள் மூலமே உங்களுடைய எதிர்காலம் நிலையானதாக அமையும் என்பதை கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
அருட்தந்தை மா. சத்திவேல்
நன்றி: மாற்றம்

இந்தியாவின் ஏழை முதலமைச்சர்

0
0
முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று பீரியட்கள் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என் றால் நம்பமுடிகிறதா? அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.

தற்போது 64 வயதாகும் மாணிக் சர்க்கார் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்எல்ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர். மூன்று ஐந்தாண்டுகள் முதல்வராய் இருந்த அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதல்வராகியுள்ளார். அதிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் சீட்டுகள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார்.சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.

அவரின் மொத்த சொத்தின் மதிப்பே ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத்தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம். அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு ரூ. 46,000-தான். இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வீடோ, வாகனமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான். சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது.முதலமைச்சருக்கு என்று ஒரு சம்பளம் உண்டல்லவா? அதையும் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார்.

கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ.5000 தருகிறது. ‘இந்த பணமும் எனது மனைவியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது’ என்கிறார் சர்க்கார்.
 
‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி.‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்: தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.

2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார். சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியிலேயே சர்க்காரை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர். சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.

மண்சரிவு அபாயம் - 220 பேர் பாடசாலையில்

0
0
சீரற்ற கால­நிலை மற்றும் மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக பண்­டா­ர­வளை அம்­பிட்­டி­கந்த பெருந்­தோட்­டத்தில் 67 தொழி­லாளர் குடும்­பங்­களைச் சேர்ந்த 220 பேர் கடந்த சனிக்­கி­ழமை அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு அம்­பிட்­டி­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். மேற்­படி தோட்­டத்தில் மண் சரிவு அபாயம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து,அங்­கி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­களை வெளியே­று­மாறு பிர­தேச செய­லாளர் உத்­த­ர­விட்டும் அவ் உத்­த­ர­வினை தொழி­லா­ளர்கள் செவி­ம­டுக்­க­வில்லை. அதை­ய­டுத்து பொலி­ஸாரின் துணை­யுடன் தோட்டத் தொழி­லா­ளர்கள் உட­ன­டி­யாக குறிப்­பிட்ட இடத்­தி­லி­ருந்து வெளியேற்றப்பட்டு அம்­பிட்­டி­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டனர். இவர்­க­ளுக்­கான அனைத்து வச­தி­க­ளையும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சுப் பதுளை மாவட்டப் பணி­யகம் மேற்­கொண்­டுள்­ளது.
 
அத்­துடன், ஹப்­புத்­தளைப் பகு­தியின் உட­வே­றியா தோட்­டத்தின் 50 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள், அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு, பாது­காப்­பான இடங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.
கால­நிலை மாற்­றத்­தினால் பதுளை மாவட்ட மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள்

0
0
கொத்மலை, இரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க இன்று மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.

1960 ஆண்டு காலப்பகுதியில் பெரிய மஸ்கெலியா பகுதியிலிருந்து தற்போது மண்சரிவு ஏற்பட்டிருந்த கயிறுகட்டி தோட்டத்திற்கு குடியிருப்பாளர்களாக வந்திருந்த பரம்பரையை சார்ந்த 7 பேரைக் காவுக்கொண்ட வெதமுல்ல லிலிஸ்லேண்ட் என்று அழைக்கப்படும் கயிறுகட்டி தோட்டத்திற்கு 1948 ஆண்டில் வெள்ளையர் காலப்பகுதியின் பின்னர் நீர் மறைப்புக்காக பெரிய மஸ்கெலியா எடம்ஸ்பீக் தோட்டம் உட்படுத்தப்படுகையில் அங்கிருந்து வெளியேறிய மக்களே அனர்த்தம் ஏற்பட்ட வெதமுல்ல  தோட்டத்தில் 1966 ஆண்டு குடியமர்ந்தனர்.

கே.கே.காளியப்பாபிள்ளை தோட்டம் என அழைக்கப்பட்ட வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் பதியப்பட்ட பரம்பரையினரே அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு வெதமுல்ல பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி உதவியை மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு வழங்குகின்றது. 3 மாதத்திற்குள் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

காலா­வ­தி­யான திரி­போஷா

0
0
கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் கர்ப்­பிணித் தாய்­மா­ருக்கும் பாலூட்டும் தாய்­மா­ருக்கும் காலா­வ­தி­யான திரி­போஷா சத்­து­ணவுப் பொதிகள் வழங்­கப்­ப­டு­வ­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் கண­பதி கன­கராஜ் குற்றம் சாட்­டினார்.
மாகாண சபை அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குற்றம் சாட்­டினார்.
இங்கு அவர் மேலும் கூறு­கையில், கினி­கத்­தேனை பகு­திக்கு சென்­றி­ருந்த போது அங்கு சில கர்ப்­பிணித் தாய்­மாரும் பாலூட்டும் தாய்­மாரும் தமக்கு வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட திரி­போஷா சத்­து­ணவுப் பொதி­க­ளுடன் என்னை சந்­தித்து கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் காலா­வ­தி­யான திரி­போச சத்­து­ணவு வழங்­கப்­ப­டு­வ­தாக தெரிவித்­தனர்.
அத்­துடன் என்­னிடம் சில காலா­வ­தி­யான பொதி­க­ளையும் வழங்கி சரி­யான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறும் கோரினர். அவர்கள் என்­னிடம் கொடுத்த காலா­வ­தி­யான திரி­போஷா பொதி­களை இந்த சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வ­தோடு இவற்றை சுகா­தார அமைச்­ச­ரிடம் ஒப்­ப­டைக்­கிறேன்.
மத்­திய மாகாண சுகா­தாரத் துறையில் இது­போன்ற பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­வதை கடந்த காலங்­க­ளிலும் நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறேன். அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் காலா­வ­தி­யான, மக்­களின் சுகா­தா­ரத்­திற்கு பங்கம் ஏற்­ப­டுத்­து­கின்­ற­வற்றை வழங்­கு­கின்­ற­போது அதனால் மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற பாத­க­மான விளை­வு­களை சுகா­தார அமைச்சு கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். இவ்­வா­றான நிலை தொட­ரு­மானால் சுகா­தார துறையில் மக்கள் நம்­பிக்கை இழந்­து­வி­டு­வது மட்­டு­மல்­லாமல், அவர்கள் மன­ரீ­தி­யிலும் உடல் ரீதி­யிலும் பாதிப்­ப­டைவர்.
கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட காலா­வ­தி­யான திரி­போஷா பொதி­களை மீள­ப்பெற்று உரி­ய­வர்­க­ளுக்கு நிவா­ர­ணத்தை வழங்க வேண்டும். கினி­கத்­தேனை வைத்­தி­ய­சாலை உட்­பட மத்­திய மாகா­ணத்தில் உள்ள ஏனைய வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் காலா­வ­தி­யான திரி­போஷா பொதிகள் களஞ்­சியப் படுத்­தப்­பட்­டி­ருந்தால் அவற்றை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வேண்­டு­கிறேன்.
இவ்­வி­டயம் தொடர்பில் மத்­திய மாகாண சகா­தார அமைச்­சர் கூறுகையில் இவ்விடயம் தொடர்பில் பூரண விசாரணைக்கு தான் உத்தரவிடுவதாகவும் அடுத்த மாகாண சபை அமர்வில் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலதிக பிரதேச சபைகள்

0
0
நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் மேல­திக பிர­தேச சபைகள் உரு­வாக்­க­ப்பட வேண்டும். நாட்டில் பிற பகு­தி­களில் ஆறா­யிரம் பேருக்கு ஒரு பிர­தேச சபை இருக்கும் போது நுவ­ரெலியா மாவட்­டத்தில் மாத்­திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிர­தேச சபை இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது மலை­யக தமி­ழ­ருக்கு கடந்த  இரு­பத்­தி­யெட்டு வரு­டங்­க­ளாக இழைக்­கப்­பட்­டுள்ள  ஜன­நா­யக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சக­வாழ்வு விட­யத்­துக்கு முர­ணா­னது. எனவே இந்த  மிக நீண்ட கால அநீதி இப்­போ­தா­வது நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும் என தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி-­ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வ­ரு­மான மனோ கணேசன்  எம்.பி. உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­கு­ழுவில் தெரி­வித்­துள்ளார்.  
 
இது தொடர்பில்  கூறி­ய­தா­வது,இந்த முக்­கி­ய­மான விவ­காரம் தொடர்பில் ஏற்­க­னவே ஒரு கருத்­தொ­ரு­மைப்­பாடு இருக்­கின்­றது. எனவே உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­குழு, நுவ­ரெலியா மாவட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளையும், மாவட்ட செய­லாளர் மற்றும் அதி­கா­ரி­க­ளையும் அழைத்து கலந்­து­ரை­யாடி, புதிய பிர­தேச சபை­களை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உரு­வாக்க வேண்டும். இது எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள அடுத்த உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளுக்கு முன்னர் நடை­பெற வேண்டும். எனது இந்த கோரிக்­கையை,  உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­குழு உறுப்­பி­னர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இந்­நி­லையில் வெகு விரைவில் நமது அமைச்­ச­ரவை உப­கு­ழுவை சந்­திக்கும் முக­மாக, நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், நுவரெ­லியா மாவட்ட செய­லாளர் மற்றும் அதி­கா­ரிகள் ஆகி­யோ­ருக்கு அழைப்பு அனுப்­பு­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்த  மிக நீண்ட கால அநீதி நிவர்த்­திக்­கப்­பட வேண்டும் என்­பது தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிலைப்­பா­டாகும். இது தொடர்­பான முடிவு கூட்­ட­ணியின் கடந்த செயற்­குழு கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் செய்து முடிக்கப்பட வேண்டிய இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

தல­வாக்­கலை ரத்­னீ­ல­கல வாசி­க­சாலை கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்கு வழங்கவும்

0
0
மேல்­கொத்­மலை மீள்­கு­டி­யேற்­றத்­திட்­டத்தின் கீழ் தல­வாக்­கலை ரத்­னீ­ல­கல குடி­யி­ருப்­புத்­திட்­டத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள வாசி­க­சாலை கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்குக் கைய­ளிக்­கு­மாறு மலை­யக தொழி­லாளர் முன்­னணி கோரிக்கை விடுத்­துள்­ளது.
 
மேல் கொத்­மலை நீர்மின் திட்­டத்தின் கீழ் இடம்­பெ­யர்ந்த ஹொலிரூட், ரத்­னீ­ல­கல பிரிவை சேர்ந்த தொழி­லா­ளர்­களின் நலன் கருதி அமைக்­கப்­பட்ட புதிய குடி­யி­ருப்புத் தொகு­தியில் புதிய வாசி­க­சாலை கட்­டடம் ஒன்று அமைக்­கப்­பட்­டது.
 
குடி­யி­ருப்­புக்கள் 2009 ஆம் ஆண்­டி­லேயே மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­பட்டு விட்ட போதிலும் வாசி­க­சாலை கட்­டடம் இது­வரை மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.
எனவே தாம­த­மின்றி மேற்­படி கட்­டடத்தை மக்­களின் பாவ­னை க்­காக கைய­ளிக்­கு­மாறு தோட்ட நிர்­வாகி மேல் கொத்­மலை திட்ட அதி­காரி, மாவட்ட மற்றும் பிர­தேச செய­லா­ளர்கள் மின்­சக்தி எரி­பொருள் அமைச்சர் ஆகி­யோ­ருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை மாநில நிர்வாக அதிகாரி எஸ். வரதராஜன் தெரிவித்தார்.

பஸ்சுக்காக காத்திருக்கும் நயாபான மக்கள்

0
0
“இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா வேலைகளையும் செஞ்சிக்கனும். கொஞ்சம் பேர்க்கு கரன்ட் இருக்கு, கொஞ்சம் பேர்க்கு இல்ல. மழை வந்துச்சினா ஒரு சட்டி பானைய அல்லது வாலிய எடுத்து வச்சிட்டு தான் தூங்குவம். இங்கு எதுவுமே எங்களுக்கு சொந்தம் இல்ல. வீட்டு தின்னைய தான்டினா பிள்ளைங்களுக்கு விளையாட கூட இடம் இல்ல. வீட ஒடச்சி கட்டவோ, வீட்டுக்கு முன்னால இருக்கிற மரத்த வெட்டவோ எதுக்குமே எங்களுக்கு உரிம இல்ல”– என்று தன்னுடைய ஊர் மக்கள் வாழும் வாழ்க்கை குறித்து (மலையக மக்களின் வாழ்க்கை) என்னிடம் மனம் வெறுத்த நிலையில் பேசிக்கொண்டிருந்த தவனேஸ் என்ற இளைஞனின் பேச்சை கேட்டுக் கொண்டே நான் அந்த மண்டபத்தினுள் நுழைந்தேன்.

மலையகம் என்றாலே அழகுக்கு குறைவில்லை. மலைகளும் மலை சார்ந்த தோட்டங்களும் எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் அவ்விடத்திற்கு செல்லத் தோன்றும். ஒவ்வொரு முறையும் நான் வேலைப்பார்க்கும் நிறுவனத்தின் வேலைத்திட்டத்திற்காக கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் போவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நயாபான என்ற தோட்டத்திற்கு போக நேர்ந்தது. கம்பளை நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கும் தோட்டமே இது.

கம்பளையில் எனது நண்பனை சந்தித்து நான் போகவிருக்கும் தோட்டம் குறித்து தெரிவித்தேன். “அங்கு போக பஸ் இல்லை”– உடனே அவன் வாயில் இருந்த பதில் இது. சரி ஆட்டோவுல போவோம் என்று புறப்பட்டோம். பயணிக்க ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர்தான் அந்தத் தோட்டத்தை நெருங்கினோம்.

ஒருமாதிரியாக தோட்டத்தைச் சென்றடைந்தோம். அங்கு நண்பரின் உதவியுடன் வேலைத்திட்டத்திற்காக கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இளைஞர்கள் வந்திருந்தனர். இடைவிடாமல் பெய்துகொண்டிருக்கும் மழையினால்தான் வரவில்லை போல. மழை கொஞ்சம் ஓய ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்.

இளைஞர்கள் அனைவரும் வருகை தந்ததன் பின்னர் என்னுடன் வருகை தந்த சக நண்பர் நாங்கள் வந்ததற்கான காரணத்தை கூறி கலந்துரையாடலை ஆரம்பித்தார். தோட்டத் தலைவரும் தபால் உத்தியோகத்தர் ஒருவரும் அமர்ந்திருந்தார்கள்.

நண்பர் வந்த நோக்கத்தை கூறி சிறிது நேரத்திலேயே உங்களுடைய தோட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினைகள் என்ன என்று கேட்டார். சுமார் 25 இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் இருந்து மனோஜ் என்ற இளைஞன் எழும்பினான். வயது 18 இருக்கும், இம்முறை தான் உயர்தர பரீட்சை எழுதுகிறானாம். எழுந்த வேகத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டான், எங்களுடைய தோட்டத்தில் இருக்கும் பிரதான பிரச்சினையே பஸ்தான் என்று ஆரம்பித்தான்.

“எங்கட தோட்டத்துக்கு சிடிபி பஸ் வந்து 20 வருஷங்களுக்கு மேல ஆகுது. எங்களுக்கு தெரிஞ்சி இந்த ஊருக்கு சிடிபி பஸ் வந்ததே இல்ல. அப்படியே பஸ் வந்தாலும் ஒரு நாள், ரெண்டு நாள் மட்டும்தான் வேல செய்யும். இல்லன்னா வார பஸ் வழியில எங்கையாவது ஒடஞ்சிடும். அங்க இருந்து நாங்க வீல் புடிச்சிதான் எங்க ஊருக்கு வரனும். ஒரே ஒரு பிரைவட் பஸ் இங்க வேல செய்து. காலைல 6.30 மணிக்கு ஊர்ல இருந்து இந்த பஸ்ஸ எடுப்பாங்க, அதுவும் சனம் நெரஞ்சா மட்டும் தான். அப்படியே போனாலும் பாரதெக சந்தி வரைக்கும்தான் போகும். அதுக்கு மேல பஸ் இல்ல. நுவரெலியா பக்கம் பஸ் வந்தா, அதுலதான் போகனும். ஒரு நாளைக்கு ரெண்டுதரம் தான் இந்த பஸ்சும் வேல செய்யும். 6.30 மணிக்கு போர இந்த பிரைவட் பஸ்சுலதான் கம்பல கண்டினு எல்லா இடங்களுக்கும் வேலைக்கு போறவங்க போவாங்க. அந்த பஸ்லயே தான் கம்பள, புஸ்ஸல்லாவைல இருக்க தமிழ் ஸ்கூலுக்கு போர பிள்ளைங்களும் போகனும். சில நேரங்கள்ல பஸ் நெரஞ்சிட்டா ஸ்கூல் போர பிள்ளைங்களுக்கு அந்த பஸ்ல போகவே கிடைக்காது, இந்த நிலைதான் இப்பவரைக்கும் எங்களுக்கு இருக்கிற பிரச்சினை”.

மூச்சுவிடாமல் பேசியவன், கொஞ்சம் நிறுத்தி மீண்டும் ஆரம்பித்தான். பஸ் பிரச்சினையால் நிறைய பாதிக்கப்பட்டவன் போல.

“கம்பல டவுன்ல இருந்து 15 கி.மீ தூரத்துலதான் நாங்க இருக்கம். ஸ்கூல் பிள்ளைங்க பஸ்ஸ விட்டுடா வீல்ல தான் போகனும். அப்டியே போரதுனாலும் 300 ரூபா குடுத்து தான் போகனும். எந்தனாலும் வீல்ல போர அளவுக்கு எங்கட அம்மா அப்பாவுக்கு வருமானம் இல்ல. இதனால ஊர்ல இருக்க பெரியவங்க டிப்போல போய்ட்டு பஸ் கேட்டாங்க, பலமுறை கேட்டும் கூட, பஸ் இல்ல அல்லது பஸ் டிரைவர் இல்ல எண்டு சாக்கு போக்கு சொல்லி அனுப்பிடுராங்க. தொடர்ந்து இதுதான் நடக்குது, நாங்களும் எவ்வளவோ பேசி பார்த்துட்டம், ஒரு முடிவும் இல்ல. இப்போ மாத்திரம் இல்ல, பல வருடமா தொடர்ந்து இருக்கிற பிரச்சின இது தான்”என்று முடித்தார் அந்த இளைஞன்.

குளிருக்கு பஞ்சம் இல்லாத தோட்டம் போல. மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. கண் முன்னே இருக்கும் இளைஞர்களை தெளிவாக பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பணி மூட்டம். மாலை 3.00 மணியே ஆகினாலும் கூட மாலை 6.00 மணியை போல இருள் சூழ்ந்து கொண்டது.

இவ்வாறு மனோஜ் பேசி முடிக்கும் போதே தபால் உத்தியோகத்தர் சுமார் 28 வயது மதிக்க தக்க நபர் இன்னும் ஒரு முக்கியமான பிர்ச்சினை இருக்கு என்று பேச ஆரம்பித்தார்.

“இந்த தோட்டத்துல இருக்க பிரதான பிரச்சினை வேலை இல்லாத பிரச்சினைதான். இங்க இருக்குர இளைஞர்களோட அம்மா, அப்பா எல்லாருமே தோட்டத்துல தான் வேலை செய்றாங்க தொடர்ந்து 22 நாள் வேலை செஞ்ஞா மாத்திரம் தான் 600 ரூபா சம்பளம் கொடுப்பாங்க. 21 நாள் வேலை செஞ்ஞாலும் கூட 450 ரூபா தான் கிடைக்கும். அதுவும் தோட்டத்த பொருத்தவரைல ஒவ்வொரு மாதமும் 22 நாள் வேலை இருக்கும் என்டு சொல்லவே முடியாது”.

“கடந்த மாதம்தான் நாங்க ரொம்பவே கஷ்டத்த அனுபவிச்ச மாசம். இந்த அரசியல் வாதிங்க பேச்ச கேட்டு இங்க உள்ளவங்க எல்லாருமே மெதுவா வேலைய செஞ்சிட்டு போனாங்க. கட்டாயமா சம்பளத்த கூட்டுவாங்க என்ற நம்பிக்கைல. ஆனா, சம்பளம் கூட்டப்படவும் இல்ல, மெதுவா வேலை செஞ்சவங்க யாருக்குமே கடைசி வரைக்கும் அந்த மாதத்துக்கான சம்பளமும் கிடைக்கவே இல்ல”.

“எங்கட தோட்டத்துல இருந்து வெளியில டவுனுக்கு வேலைக்கு போரதுனாலும் பஸ் பிரச்சினைதான். ஒரு நாள் போனா ஒரு நாள் போக கிடைக்காது, பஸ் இருக்காது. தொழில், வீடு, கல்வி என எல்லா வகையிலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தோட்டமே இந்த நயாபான தோட்டம்”என்று கூறி முடித்தார் தபால் உத்தியோகத்தர்.

இவ்வாறு பிரச்சினைகளையும் வினவிக் கொண்டு எங்களுடைய வேலைத்திட்டத்தினையும் தெளிவுபடுத்திக் கொண்டு எவ்வித எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்காமல் நாங்கள் அவ்விடத்தில் இருந்து விடைபெற்று, அருகில் இருக்கும் இரு தோடங்களுக்கும் சென்றுவிட்டு மாலை 4.00 மணியளவில் நயாபான தோட்டம் ஊடாகவே சென்றோம்.

அப்போது நயாபான தோட்டத்திற்குச் செல்லும் பஸ்ஸைக் கண்டேன். அசைந்து அசைந்து மனித வேகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் அதிகபட்சமாக 25 அல்லது 30 பேர் மாத்திரமே செல்ல முடியும். ஆனால், 60இற்கும் அதிகமானோர் அடைப்பட்டு, தொங்கிக்கொண்டு செல்வதைக் கண்டேன். அளவுக்கு அதிகமான சுமையுடன் செல்லும் அந்த பஸ்வண்டியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே எங்களை தாண்டி சென்றது. இதுதான் இந்த நயாபான தோட்ட மக்களின் பிரதான பிரச்சினை.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். நயாபான மக்கள் விதிவிலக்கல்ல. ‘மாற்றம்’ அரசில் அங்கம் வகித்துள்ள மலையக அரசியல்வாதிகள் இவற்றையும் தேடிப்பார்ப்பார்களா?

எம். பிரதீபன்

தோட்ட அதிகாரியின் தாக்குதலால் தாய், மகன் வைத்தியசாலையில்

0
0

வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தோட்ட அதிகாரியின் தாக்குதல் காரணமாக அதே தோட்டத்தை சேர்ந்த திலகேஷ்வரி (வயது 40), செலக்ஷன் (வயது 16) ஆகிய இருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி ஓய்வூதிய கடிதங்களைப் வழங்கும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
 
மத்துரட்ட பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் இத்தோட்டத்தில் மொத்தமாக 385 தொழிலாளர்கள் தொழில்புரிகின்றனர். ஒரு தொழிலாளிக்கு தலா 1,000 தேயிலை மரங்கள் வீதம் பிரித்து தருவதாகக் கூறி, அதற்கு தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 272 தொழிலாளர்களிடமிருந்து தோட்ட நிர்வாகம் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்;ளது. இதில் 150 தொழிலாளர்களுக்கு 14 நாட்களுக்கான காசோலைகளும் வந்து விட்டன. இவர்களில் சிலர் இதற்கு உடன்படாததால் தோட்ட நிர்வாகம் அவர்களை பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
 
இவ்வாறிருக்க தனி வீடொன்றில் வசித்து வரும் திலகேஷ்வரி என்ற பெண்ணின் வீட்டுக்கு நேற்று சென்ற தோட்ட அதிகாரி, கணக்கப்பிள்ளை மற்றும் தோட்ட குமாஸ்தாக்கள் தேயிலைச் செடிகளை பிடிங்கியதாக கூறி இப்பெண்ணிடம் முரண்பட்டுள்ளனர். இதன்போது தோட்ட அதிகாரி அப்பெண்ணை தாக்கியுள்ளார். தனது தாயை தோட்ட அதிகாரி தாக்குவதை கண்ட அப்பெண்ணின் மகன் அதனை தடுக்க முற்பட்டபோது அச்சிறுவனையும் தோட்ட அதிகாரி மற்றும் கணக்கப்பிள்ளை ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
இவர்களின் தாக்குதலில் காயமடைந்த இருவரும் உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணக்கபிள்ளையை பொலிஸார் கைதுசெய்த போதும் ஒரு சில மணித்தியாலங்களில் விடுவித்துள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் மேலிடத்துக்கு மாற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, தோட்ட அதிகாரியை தாக்கியதாக கூறி தொழிலாளி ஒருவரை வலப்பனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.மாவுவா தோட்டத்தில் இத்தகைய சம்பவங்கள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதும் தொழிலாளர்களின் சந்தாவை பெறும் எந்த தொழிற்சங்கங்களும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்தோட்டத்தை கைவிட்டதை போன்று தொழிற்சங்கங்களும் நடந்துகொள்வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயம்

0
0
உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களில், தற்­போ­துள்ள மிகச் சொற்­ப­மான தமிழ் பிர­தி­நி­தித்­து­வங்கள் கூட கைந­ழுவிப் போகக்­கூ­டிய அபாயம் இருப்­ப­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார். ஞாயி­றன்று மாத்­தளை இ.தொ.கா. அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற தோட்டக் கமிட்டித் தலை­வர்­களின் கூட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மாவட்டப் பிர­தி­நிதி எஸ்.கம­ல­நா­தனின் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் அவர் மேலும் பேசிய போது.
 
கடந்த காலங்­களில் பெரும்­பான்மை இன அர­சியல் கட்­சிகள் தான் பல­வ­கை­யான திரு­கு­தா­ளங்­களைச் செய்து நமது மக்­களின் வாக்­கு­களைச் சித­ற­டித்து அவர்கள் நன்­மை­ய­டைந்து வந்­தனர். ஆனால் எதிர்­காலம் அப்­படி இருக்கப் போவ­தில்லை.
 
நம்­ம­வர்­களே தமது பலத்தைக் காட்­டு­வ­தாக முயற்­சி­களில் இறங்கி அதன் மூலம் நமது மக்கள் மத்­தியில் நிலவும் ஒற்­று­மையை சீர்­கு­லைத்து அவர்­களின் வாக்­கு­க­ளையும் சித­ற­டிக்கும் கைங்­க­ரி­யத்தில் இறங்கும் அபாயம் இருக்­கி­றது. ஆகவே பெருந்­தோட்­டங்­க­ளி­லுள்ள நமது மக்கள் மிகவும் விழிப்­பாக இருந்து பிரி­வி­னைக்கு வழி­வ­குக்கும் சக்­தி­களை ஓரங்­கட்ட முன்­வர வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.
 
தொழி­லா­ளர்கள் குடும்­பங்­க­ளுக்கு ஏழு பர்ச்சஸ் காணி வழங்கும் திட்­டத்தை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவ­தில்லை. தோட்­டங்கள் திட்­ட­மிட்டு காடு­க­ளாக மாற்­றப்­பட்டு வரு­கின்­றன. அப்­படி நிர்­வா­கத்தால் கைவி­டப்­பட்­டுள்ள காணி­களை ஒரு குடும்­பத்­துக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் தொழி­லா­ளர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்­ப­தையே நாங்கள் தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஆகவே நமது கோரிக்கை தொட­ரவே செய்யும் என்று குறிப்பிட்டார்.

அபாய அறிவித்தல்

0
0
பதுளை மாவட்டத்தில் மண் சரிவு, மலை சரிதல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும். இதனால் அம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50,000 மக்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  
இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை மாலை மிகக் குறுகிய நேரத்தில் 80- 100 மி.லீ வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பதுளை மாவட்டம் மட்டுமன்றி நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் மேற்படி அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் பிரதீபு பொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.  
காற்றுடன் கூடிய மலை நாட்டின் பல பாகங்களிலும் பெய்யக்கூடுமென வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
தொடர்ச்சியான மழையினால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தை அண்டிய மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யுமானால் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும்  என தெரிவிக்கின்றனர். இதேவேளை நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன உட்பட மலையகத்தின் பல பகுதிகளில் அதிக பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை செலுத்வோர் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
இறம்பொடை, வெதமுல்ல கயிறுக்கட்டி தோட்டத்திலுள்ள 2ஆம் லயன் குடியிருப்பிலிருந்து 7குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி லயன் குடியிருப்புத் தொகுதியின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழும் அபாயமுள்ளதாக தெரிவித்தே குறித்த 7குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயம்

0
0
இலங்கையில் மட்டுமே உள்ளதாக கூறப்படும் அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம தெரிவித்தார்.

"கொள கொடையா"என்றழைக்கப்படும் மீனினம், 4 அரியவகை பச்சோந்திகள், 10 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 11 வகையான முலையூட்டிகளே இவ்வாறு அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளன.

இவை, மகாவலி கங்கையை சூழ அமைந்துள்ள சிறிய சிறிய தீவுகளில் வாழ்ந்து வருவதாகவும் இக்கங்கையில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் இராசாயன பதார்த்தங்கள் காரணமாக அவை அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்

0
0
தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி ஆறு மாதங்கள் ஆகியும் புதிய ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால், தொழி­லாளர்­க­ளுக்கு சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.

மேலும் தீபா­வளிப் பண்­டிகை காலத்தில் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலையும் நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்கின்­றது. எனவே, தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மலை­யக மக்கள் முன்­னணி உப தலைவர் செல்­லையா சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்­கையில், தீபா­வளிப் பண்­டிகை நெருங்கி வரும் வேளையில் பருப்பு, சீனி முத­லான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்ணம் இருக்­கின்­றது. இதனால் குறைந்த வரு­மானம் பெறு­கின்ற தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரும் பொரு­ளா­தாரச் சுமைக்கு முகங் கொடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
 
கடந்த வரவு செலவுத் திட்­டத்தில் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும், தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்ட சம்­பள உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இந்த சம்­பள அதி­க­ரிப்பு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. மேலும், அவர்­க­ளுக்கு கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து கிடைக்க வேண்­டிய சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.
 
அதற்­காக தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் கம்­ப­னி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் அனைத்தும் தோல்­வியிலேயே முடிவடைந்­துள்­ளன.இந்­நி­லையில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி தீபா­வளிப் பண்­டி­கையைக் கொண்­டாடும் தோட்டத் தொழி­லா­ளர்கள் புத்­தாடை கொள்­வ­னவு செய்­யவும், பண்­டி­கைக்குத் தேவை­யான பல­கா­ரங்­களைத் தயா­ரிக்­கவும் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்கி வரு­கின்­றார்கள்.பண்­டிகை காலத்­துக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் அனைத்­தி­னதும் விலை­வாசி திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது. இதனால் ஏற்­க­னவே, பொரு­ளா­தாரச் சுமையில் சிக்கித் தவிக்கும் தொழி­லா­ளர்கள் மேலும் சுமைக்கு ஆளாகி இருக்­கின்­றார்கள். கம்­ப­னி­க­ளுக்கும், தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடையில் இடம்­பெறும் பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து இழு­பறி நிலையில் காணப்­ப­டு­கின்­றது. எனவே, கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இன்­றைய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்க பெரு­ம­ளவில் நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்த
 
மக்­க­ளுக்கு நிவா­ரணம் கிடைக்கும் வகையில் அர­சாங்கம் தலை­யிட்டு நியா­ய­மான சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்­லையா
சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்துள்ளார்.

வறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் அவசியம்

0
0
இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்

உலகிலிருந்து வறுமை நீங்க வளர்முக நாடுகள் தனி மனித வருமான உயர்விற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதார உயர்வானது அந்த நாடுகளில் வாழ்கின்ற குடிமக்கள் யாவரும் போதிய அளவு அத்தியாவசிய அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் சுத்தமான குடிநீர் போதியளவு கல்வி அறிவு வீதி கட்டமைப்பு வசதி, நவீன தொலைத்தொடர்பு வசதி ஆகியவைகளுடன் தனிமனித சுதந்திரம் போன்றவைகளில் தன்னிறைவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஜோசப் ரெசின்சி உலகிலிருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டுமென தனது வாலிப வயதிலிருந்து குரல் கொடுத்து வந்ததுடன் அதற்கான சமூகம் தழுவிய வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டார். இதன் பலனாக 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக வறுமை ஒழிப்பு தினமாக அக்டோபர் 17 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி உள்ளது. ஜோசப் ரெசின்சி என்பவரே உலகில் முதன் முதலில் வறுமை ஒழிக்கப்படல் வேண்டுமென போராடி அதை உலகளவில் சமூகமயக்கியவர் எனலாம்.

இதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை தனது அங்கத்துவ நாடுகளை ஒன்றிணைந்து உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் தனிமனித பொருளாதார உயர்விற்குமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்.

உலகில் வறுமையான நிலையின் மனித இனம் வாட்டம் பெற போர், இயற்கை சீற்றங்கள், காலநிலையில் சடுதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின்மை, அடிமைத்தனம் போன்றவைகளுடன் அரசியல் ரீதியான தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன.

வறுமை அல்லது பட்டினி என்பது ஒரு தனிமனிதன் ஒரு நாளைக்கு 1800 கலோரி உணவுக்கு குறைவாக உட்கொள்கின்றான் என்பதே அர்த்தமாகும். போஷாக்கற்ற அல்லது சீரான நேரம் தவறிய உணவு முறைகளால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது. இன்று ஆபிரிக்காவில் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் நிற்கின்றார்கள். அங்கு மனித இன அழிவு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இன்று குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரிடையே வறுமையைக் குறைப்பது சவால்மிக்க ஒரு பணியாகும். இது அரசாங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள முழுமொத்தச் சமூகமும் எதிர்நோக்க வேண்டிய சவாலாகும். உலகிலிருந்து வறுமையை நீக்கவென உலக வங்கி உட்பட பல நாட்டு நிதி நிறுவனங்கள் பல ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை மிகத் தீவிரமாக செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் வறுமை முற்றாக அல்லது பாதியளவு குறைக்கப்பட்டிருக்கின்றதா என்பது ஆய்வு செய்ய வேண்டியது.

எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரை தனிமனித வருமானம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் அவ்வப்போது கூறிவந்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் வெளியிட்ட சிறு குழுக்கள் முறை நூலில் எமது நாட்டின் வறிய மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்சமயம் அத்தொகை நாட்டின் மொத்த சனத்தொகையில் 15 வீதத்தை விடக் குறைவாக காணப்படுகின்றது என மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் எழுதியுள்ளார். இதிலிருந்தும் தற்கால நல்லாட்சி அரசின் வேலைத்திட்டங்களின் மூலமாகவும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மிகச் சீராக தூரநோக்கான செயல்திட்டத்துடன் முன்னெடுத்து வருகின்றது என சுட்டிக்காட்ட முடியும்.

கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் ஆட்சி செய்த நேரத்தில் மக்களின் உணவிற்குத் தேவையான பொருட்களை பகிர்ந்தளித்தார்களே தவிர தூரநோக்கான பொருளாதார அபிவிருத்தியை மக்களுக்காகச் செய்யவில்லை. தங்களது நாட்டின் பொருளாதாரம் வெள்ளைக்கார மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகளை வசதிவாய்ப்புக்களுக்கு ஏற்புடைய தொழில் துறைகளையே ஏற்படுத்தி இருந்தனர்.

இதனால் தான் வறிய நாடுகள் செல்வந்த நாடுகள் என்ற இருபெரும் பிரிவுகள் தோற்றம் கண்டது. மக்களை வறுமை நிலையில் வைத்துக் கொள்ளவே விரும்பி அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் இந்த மானிய உணவு விநியோகம் தொடர்ந்து வந்த அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அன்று மக்களுக்கு இலவசமாக ஒரு சேர் அரிசி இரண்டு சேர் (படி) அரிசி என்பன பெரும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மானிய விநியோகம் செல்வாக்கு பெற்றிருக்கின்றது. இன்றும் இதை சமுர்த்தி கொடுப்பனவு ஊடாக மக்கள் பெற்று வருகின்றார்கள்.

எந்தவொரு மானிய இலவச விநியோகத்திற்கும் பணம் வழங்கப்பட முடியாது என உலக வங்கி சிவப்புக் கொடியை காட்டுகின்றது. கடன் வாங்கும் போது கைக்கொள்ளப்படும் இறுக்கமான நடைமுறை அரசியல் நீரோட்டத்தில் மாற்றம் காணுகின்றது.

வறுமை ஒழிக்கப்படுவதற்கு சிக்கனம் சேமிப்பும் கண்டிப்பாக தனிமனிதரிடத்திலும் நாட்டிலும் இருத்தல் அவசியம். பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் முக்கியம் என கண்டறியப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு வங்கியினை நிறுவிய முன்னோடிகள் என்ற பெருமை ஆளுநர் சேர். நாபர் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்களையே சாரும்.

இலங்கையில் சேமிப்பு வங்கியானது 6.8.1832 ல் தாபிக்கப்பட்டது. அன்று சேமிப்பு கணக்குகள் பணத்திற்கு பதிலாக தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

எனவே ஒரு நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாட்டில் உற்பத்தி தொழில் துறை சார்ந்த திட்டங்கள் உருவாக்கத்துடன் நல்ல தூரநோக்கான அரசுகள் நாட்டில் இருத்தல் அவசியம். லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியினால் மிக விரைவாக வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.

வறுமை என்பது என்றைக்கும் நிலையானதல்ல. வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடத்த வேண்டியிருக்கும் ஒரு தற்காலிக வாய்ப்பு மட்டுமே. சிலர் இவ்வாய்ப்பை துரிதமாக கடந்து முன்னோக்கி செல்வதோடு மற்றும் சிலர் சில நாட்கள் கடந்து தாமதித்தேனும் பொருளாதார மீட்சிபெறுகின்றான். உலக மக்கள் சமூகம் வறுமையை எதிர்த்து நின்று உழைத்தால் இதை விரட்டி அடிக்கலாம் என்று கூறமுடியும்.

குளவி தாக்குதலில் 51 பேர் பாதிப்பு; 11 பேர் வைத்தியசாலையில்

0
0
புல்லாவ ஸ்டெலன்பேர்க் தோட்டம், வீடன் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களை குளவி தாக்கியதில் 51 பேர் பாதிப்புக்குள்ளாகினர். 

இவர்களில் பெண்கள் 50 பேரும், தோட்டக் கணக்குப்பிள்ளை ஒருவரும் அடங்குவர். 

இவர்களில் 11 பேர் பாரிய பாதிப்புக்குள்ளாகி 7 பேர் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

3 பேர் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் நேற்று (16-10-2015) பகல் வேலையில் இடம் பெற்றுள்ளது. 

குறித்த பெண்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பிரதேசத்தில் கழுகு ஒன்று பாம்பு ஒன்றை இறைக்காக பெற்றுக் கொள்ள முயற்சித்த போது கழுகின் சிறகு அருகில் இருந்த குளவி கூட்டில் பட்டதால் குளவுக் கூடு கலைந்ததாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
0
நாட்டில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்ட்ட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 8 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தவிர சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பரவலாக மழை பெய்துவருகின்றமையால் மண்மேடுகள் மற்றும் உயர் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கேட்டுள்ளார்.
-News1st-
Viewing all 376 articles
Browse latest View live