பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென்று நியமனம் பெற்ற உதவி ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடு க்கப்படுமாயின் முதலில் மகிழ்ச்சியடைபவன் நானாகவே இருப்பேன். ஆனால் உதவி ஆசிரியர்களுக்கு 23 ஆயிரத்து ஐநூறு ரூபா என்றடிப்படையில் கூடுதல் சம்பள த்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி வருவது உண்மைக்குப் புறம்பானதாகு மென்று இ.தொ.கா வின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மடுல்சீமை, ஊவா பரணகமை, அப்புத்தளை போன்ற இடங்களில் நடைபெற்ற இ.தொ.கா. வின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் இ.தொ.கா. உப தலைவர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்பேசுகை யில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து அவர் பேசுகையில்;
‘‘கடந்த ஆட்சியின் போது இ.தொ.கா. எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பலனாக மூவாயிரம் உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்க அரசு இணக்கம் தெரிவித்திருந்தது. அதற்கமைய புதிய ஆட்சயின் போது ஒரு தொகுதி உதவி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நியமன ங்களில் ஊவா மாகாணத்தில் 599 பேர் உள்வாங்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 23 ஆயிரத்து ஐநூறு ரூபா என்ற அடிப்படை யில் கூடுதல் சம்பளம் பெற்றுத் தருவதாக மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருந்தார்.அவ்வுதவி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட சம்பளமும் வர்த்த மானி அறிவித்தலில் குறிப்பிட்டிருந்தப டியே வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு கூடுதல் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடுப்பதாக கூறப்படும் கூற்று க்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதாகும். புத்திஜீவிகளான ஆசிரியர் சமூகத்தையே ஏமாற்றியிருக்கும் இவர்கள் பாமர மக்களை எவ்வகையில் ஏமாற்றுவார்கள் என்பது அம் மக்களுக்கே தெரிந்த விடயமாகும்.
கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான உண்மை நிலையினையறிய சம்பந்தப்பட்டவர்களை அணுகி வினவியபோது, ‘‘நியமனங்கள் வழங்கப்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள பிரகாரம், சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. கூடுதல் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பது குறித்து எத்தகைய தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை” என்று கூறினர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர் வினை இ.தொ.கா. பெற்றுக் கொடுப்பது உறுதியாகும். பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் இ.தொ.கா. அக் கோரிக்கையை முன்வைக்காது. தோட் டக் கம்பனிகளின் ஆதரவாள ர்களாக செயல்பட்டுவரும் மலையக தொழிற்சங்கங்கள் சில ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை வழங்க மறுக்கும் கம்பனியாளர்களை எதிர்க்காமல் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்க முனையும் இ.தொ.கா. வை எதிர்க்கவும், விமர்ச னம் செய்யவுமான செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.பெருந்தோட்ட மக்கள் குறித்து அக்கறை யுடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்ப டும் ஒரே அமைப்பு இ.தொ.கா. மட்டுமேயாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற் கும் இ.தொ.கா. விற்கும் இடையில் பூரண நல்லுறவுகள் தொடர்ந்த வண்ணமேயு ள்ளன. அந் நல்லுறவுகளின் பயனாக மேலும் மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும், தோட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒவ் வொரு தோட்டப் பிரிவிற்கும் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என் றார்.