Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all articles
Browse latest Browse all 376

இந்தியாவின் ஏழை முதலமைச்சர்

$
0
0
முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று பீரியட்கள் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என் றால் நம்பமுடிகிறதா? அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.

தற்போது 64 வயதாகும் மாணிக் சர்க்கார் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்எல்ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர். மூன்று ஐந்தாண்டுகள் முதல்வராய் இருந்த அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதல்வராகியுள்ளார். அதிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் சீட்டுகள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார்.சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.

அவரின் மொத்த சொத்தின் மதிப்பே ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத்தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம். அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு ரூ. 46,000-தான். இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வீடோ, வாகனமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான். சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது.முதலமைச்சருக்கு என்று ஒரு சம்பளம் உண்டல்லவா? அதையும் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார்.

கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ.5000 தருகிறது. ‘இந்த பணமும் எனது மனைவியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது’ என்கிறார் சர்க்கார்.
 
‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி.‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்: தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.

2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார். சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியிலேயே சர்க்காரை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர். சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.

Viewing all articles
Browse latest Browse all 376

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


Baywatch (2017) Tamil Dubbed Movie HD 720p Watch Online


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


சித்தன் அருள் - 1613 - அன்புடன் அகத்தியர் - அம்பாஜி சக்தி பீடம்!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1167 - பொதிகை மலையும், திரிகூட மலையும்!



Latest Images