Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all 376 articles
Browse latest View live

மலையகத் தலைமைகளின் முரண்பாடுகள் சம்பள உயர்வுக்கு பெரும் தடைக்கல்.

$
0
0
தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வுப் பிரச்சினை முடி வின்றி தொடர்கின்றது. சம்பளப் பேச்சுவார்த்தையில் பிரதான பங்கை வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தாம் முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையிலிருந்து கீழிறங்காது அதனையே முன்னிறுத்தி வந்ததுடன், அதனை ஏனைய இரு தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் வலியுறுத்தி வந்தன.மறுபுறம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என ஆரம்பம் முதலே முதலாளிமார் சம்மேளனம் கூறிவருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தவிர்த்து வருகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் பிதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க முனைந்தபோதிலும் அதுவும் முடங்கியுள்ளது. அமைச்சர்கள் இருவரும் பிரதமருடன் பேசித் தீர்வுக்கு வந்தாலும் அதனை இ.தொ.கா ஏற்காவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

இதேவேளை, அரசாங்கத்துடன் இல்லாத ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, அமைச்சர்களாக இருக்கும் பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் பெற்றுத்தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகமே. தோட்டக் கம்பனிகளின் பிரச்சினை ஒருபுறமிருக்க மலையகத் தலைமைகளின் முரண்நிலைகளும் சம்பள உயர்வுக்கு இன்னுமொரு பாரிய தடைக்கல்லாக எழுந்துள்ளது. இதனால் இன்றைய சம்பளப் பிரச்சினை இன்னும் சில காலங்களுக்குத் தொடரலாம் என்பது கண்கூடு.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கேற்ப வாழ்வதற்கான சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தற்போதைய நிலையில் நியாயமான கோரிக்கையாக காணப்பட்டாலும் அது அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் விலைவாசிக்கு நிகரானதாக அமையாது.

 எனவே, ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒரு முறை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அதிகரிக்கப்படும் சிறிய சம்பள அதிகரிப்பானது ஒருபோதும் தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதியதானதாக அமையாது.
எனவே இவ் யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு மாற்று உபாயங்களை இப்போதே அடையாளம் கண்டு அமுல்படுத்த முனைவது காலத்தின் தேவையாகத் தோன்றியுள்ளது.

இன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாஙகம் நிவாரணமாக தோட்டக்கம்பனிகளுக்கு கடன் உதவியை வழங்கினாலும் முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்வராது. எனவே, ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த சம்பள அதிகரிப்பிற்கே தோட்டக் கம்பனிகள் இணங்கும். இதனை தோட்டத் தொழிலாளர்களும் நன்கு புரிந்துள்ளனர்.

காலத்திற்கு காலம் தேயிலைத் தொழிற்றுறையில் ஏற்படும் நெருக்கடியானது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. மாறாக, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கென்யா, இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம், சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பொதுமையானதாகக் காணப்படுகின்றது. தேயிலை தொழிற்றுறை முழுமையாக சந்தை கேள்வியுடன் தொடர்புள்ளதாக இருக்கின்றது.

 தேயிலைப் பண்டமானது மனித தேவைக்கு அத்தியாவசியமான பண்டமல்ல. மாறாக உதிரிப் பானமாகும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகையில் மக்கள் தேயிலைப் பானத்தை பருகாமல் இருக்கலாம் அல்லது குறைவாகப் பருகலாம். இதேவேளை, நாடுகளில் காணப்படும் பணவீக்கம், உள்ளூர் மற்றும் நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் என்பனவும் தேயிலையின் விலையை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.

 உதாரணத்திற்கு எமது நாட்டினை விட அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, தமது தேயிலைக்கான சந்தையை உள்ளூரிலேயே கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் தேயிலை உற்பத்தி இந்தியாவின் சந்தைக் கேள்விக்கு போதுமானதல்ல.

ஆயினும் இந்திய சந்தையில் தேயிலையின் விலை கடந்த பல மாதங்களாகக் குறைந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் தேயிலையின் விலையை தீர்மானிக்கின்றது. இதனால் தேயிலையின் விலை இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும் சம்பள அதிகரிப்பைக் கோரி பல போராட்டங்களை ஆங்காங்கே மேற்கொண்டு வந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கேரள மாநிலத்தின் மூனார் பகுதியின் “கண்ணன் தேவன்” தோட்டத்தைச் சேர்ந்த தோட்டப் பெண்கள் ஒன்றுகூடி 231 ரூபாவாக உள்ள நாட்சம்பளத்தை 500ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தன்னிச்சையான போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இப்போராட்டத்தை அவர்களது நான்கு தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததுடன் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரின. ஆனால் தொழிற்சங்கங்களின் மறுப்பை எதிர்த்து 7000 பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களில் 85 சதவீதமானோர் தமிழ் பெண் தொழிலாளர்களாவர். ஒரு மாதம் தொடர்ந்த போராட்டத்தில் ஈற்றில் எதிர்க்கட்சியும் அரசாங்கமும் தலையிட்டு 100 ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்குமாறு கோரினர். அதாவது 331 சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வந்தனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் இதனை ஏற்க மறுத்தனர்.

இப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை.

எனவே, தேயிலைத் தொழிற்றுறை இலாபகரமான தொழிற்றுறையாகவும் மற்றும் தேயிலைக்கான கேள்வி பரவலாகக் காணப்பட்டாலும் உள்ளக வெளியாக பொருளாதார தாக்கங்களுக்கு உட்பட்டதாகவே இத்தொழிற்றுறை காணப்படுகின்றது. இதனால் ஆரம்பம் முதலே தோட்டத் தொழிலில் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதுடன் மானிய அடிப்படையில் உணவுப் பொருட்கள், ஆரம்ப மருத்துவ வசதி மற்றும் வீடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

ஆனால், இன்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாறாக சுதந்திரத் தொழிலாளர்களாக தோட்டத் தொழிலாளர்கள் நிலைமாற்றம் அடைந்துள்ளதுடன், அவர்களது அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்க்கை சுற்றோட்டத்தில் பாரிய மாற்றம் அடைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கைச் சுற்றோட்டமும் அடிப்படைத் தேவைகளும் மாறுபட்டுள்ளதால் அவர்களது வருமானமும் அதிகரிக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. வெறுமனே தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தொழிலிலிருந்து மட்டும் பெறும் சம்பளத்தின் மூலம் தமது குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே ஒட்டுமொத்தமாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குத் தோட்டத் தொழிலாளர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தோட்டத்தில் வாழும் மலையக மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சமூக அசைவியக்கம் ஏற்பட்டுள்ளது. முழுமையாக தோட்டத்தொழிலாளரை மட்டும் கொண்டிருந்த தோட்ட வாழ் மலையக சமூகம் இன்று பல வர்க்கத் தட்டுக்களை கொண்டமைந்துள்ளது. இவ்வளர்ச்சி மேலும் முன்னோக்கி நகருமே தவிர பின்னோக்கி நகராது.
அதாவது தோட்டத் தொழிலை மட்டும் நம்பியிருக்கும் பட்டாளம் உருவாகாது, மாறாக தோட்டத்தை விட்டகன்று தொழில் தேடிச் செல்லும் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்.

 எனவே மாற்று வருமான வழிகளைத் தேடி செல்ல வேண்டிய நிலைக்கு புதியத் தொழிலாளர்கள் சமூகம் ஆளாகியுள்ளது. மறுபுறம் முதலாளித்துவ கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தோட்டக் கம்பனிகளும் நிரந்தரத் தொழிலாளர் பட்டாளத்தை வைத்திருப்பதை தவிர்க்க ஆரம்பித்துள்ளது.

இதன் வெளிப்பாடாக குத்தகைத் தொழிலாளர்கள், நாட் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், அளவுத் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இன்று தோட்டத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்டுள்ளனர்.

இப்பின்புலத்தில் சில தோட்டக்கம்பனிகள் தேயிலைக்காணிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மதுரட்ட தோட்டக் கம்பனி தமது தோட்டத் தொழிலாளருக்கு சேவைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை தோட்டத் தொழிலிலிருந்து முழுமையாக நீக்கி விட்டு அவர்களுக்கு இருவருட குத்தகையின் அடிப்படையில் தலா 2 ஏக்கர் தேயிலைக் காணியை வழங்கியிருகின்றது. குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த பணத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்து அதிலிருந்து பெறும் தேயிலைக் கொழுந்தினை தோட்டத் தொழிற்சாலைக்கு வழங்க முடியும். அதேபோல் ஏனைய சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் போல் சுந்திரமாக எந்தவொரு தொழிற்சாலைக்கும் அவர்களது கொழுந்தை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகம் கண்காணிப்பு வேலையை மட்டும் மேற்கொள்ளும்.

இதேவேளை எல்பிடிய கம்பனி தோட்டத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்திக்கொண்டே அதிக விளைச்சல் தராத தேயிலைக் காணிகளில் காணப்படும் தேயிலைச் செடிகளில் தலா 3000 தேயிலைச் செடிகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கியுள்ளது. அத்தேயிலை மரங்களை பராமரிப்பதற்கான உரம் மற்றும் தேவையான மருந்துவகைகளை கம்பனி வழங்கி கண்காணிக்கும்.
தேயிலை மரங்களைப் பெற்ற குத்தகையாளர் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே வழங்க வேண்டும். தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றிற்கான விலைய தோட்ட நிர்வாகமே நிர்ணயிக்கும். இவ்வாறு கம்பனிக்கு கம்பனி மாறுபட்ட குத்தகைத் திட்டங்களை கம்பனிகள் அமுல்படுத்தி வருகின்றன.

இன்றைய முதலாளித்துவம் தொழிலாளியை எட்டு மணிநேர கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை இலாபத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கின்றது. அதாவது எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது நட்டமாகின் அதனை தவிர்த்து குத்தகை முறைக்கு செல்லும், சில சமயம் எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது இலாபமாகின் குத்தகையை முறையை கைவிட்டு எட்டு மணித்தியால வேலைநேரத்தை அறிமுகப்படுத்தும்.

இன்றை சூழலில் குத்தகையாளர் முறையையே தோட்டக் கம்பனிகள் பின்பற்ற முனைந்துள்ளன. தோட்டக் கம்பனிகள் அறிமுகப்படுத்தும் குத்தகை முறை தோட்டத் தொழிலாளர்களது வருமானத்தை அதிகரிக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் உடனடி வருமானத்தைக் கருத்திற்கொண்டு குத்தகை முறையை ஏற்றுக்கொள்கின்றனர்.
இம்முறை மூலம் தொழிலாளர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட்டு நில உரிமையற்ற சிறு உற்பத்தியாளர்களாக மாறுகின்றனர்.

சில திட்டத்தின்படி தொழிலாளர்களாகவும் குத்தகையாளர்கள் என்ற இரண்டு பாத்திரத்தையும் வகிக்கின்றனர். இதன் சாதக பாதகத் தன்மையை சிலகாலம் கழித்தே அடையாளம் காணமுடியும்.

 இன்றைய நிலையில் தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இல்லை. ஆகையால் அமுல்படுத்தப்படும் குத்தகை முறை திட்டங்களை ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தும்படி மலையக தொழிற்சங்க அரசியற் தலைமைகள் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது தோட்டக்காணிகளை பகிர்ந்தளிக்கும் போது குறைந்த பயன் தரும் காணிகளை மட்டும் பகிர்ந்தளிக்காது அதிக விளைச்சல் தரும் காணிகளையும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் ஆகக்குறைந்தது நான்கு ஏக்கர் தேயிலை காணிகளை ஒரு குடும்பத்திற்கு வழங்க கோரவேண்டும்.

மேலும் குத்தகைக் காலம் குறைந்தபட்சம் 20 முதல் 30 வருட குத்தகை காலத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும். இதேவேளை அரசாங்க சிறு தேயிலை உடைமையாளருக்கு வழங்கும் மானியங்கள் மற்றும் சேவைகளை இவர்களுக்கு வழங்கும்படி கோர வேண்டும். அத்துடன் அவர்களது விருப்பின் பேரில் அதிக விலைதரும் தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்தை வழங்கும் உரிமையை வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியும்.

அவ்வாறு செய்ய முடியாவிடின் அனைத்து தோட்டங்களையும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்படி கோரி தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஒரு நாளைக்கு ரூபா 1500 வழங்கி அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சம்பள உயர்வு பொறிமுறையை உருவாக்கிக் கொள்ளும் முறைமையை அறிமுகப்படுத்தும்படி கோர வேண்டும்.

இவ்விரண்டு மாற்று உபாயங்களில் ஏதாவது ஒன்றினை அமுல்படுத்தும்படி மலையகத் தலைமைகள் அரசாங்கத்தை கோராவிடில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை என்றும் தொடரும் நெருக்கடியாக அமைவதுடன் தொழிலாளர் ஒருபோதும் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியாது.

இந்நெருக்கடியை தொழிற்சங்கங்கள் கருத்திற் கொண்டு செயற்படாவிடின் எதிர்வரும் காலத்தில் மூனார் தொழிலாளர்கள் போல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

நன்றி- தினகரன்

தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

$
0
0
கடந்த ஒன்பது (9) மாதங்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் காணப்பட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக் கம்பனிகளும், முதலாளிமார் சம்மேளனமும் கடைப்பிடித்து வரும் உதாசீனப் போக்கைக் கண்டித்து, தொழிலாளர்களைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறக்கும் முஸ்தீபில் அனைத்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்களும் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பெருந்தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.நேற்று முன்தினம் (6ம் திகதி) காலை 9.30 மணியளவில் மாத்தளை தொழிற்சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கைத் தோட்ட சேவையாளர் சங்க அலுவலகத்தில் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் பி.ஜி. சந்திரசேனவின் தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் விசேட செயற் குழுக் கூட்டத்தில் தொழிற் சங்கப் போராட்டத்தில் இறங்குவது தொடர்பாகத் தீவிரமாக ஆராயப்பட்டதாகவும், எஸ். இராமநாதன் மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறியதாவது,

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு விடயத்தில் தலையிட்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறும், தவறும் பட்சத்தில் மலையகத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபடுத்த நேரிடும் எனவும் கடிதங்கள் மூலம் ஜனாதிபதி, பிரதமர், தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்டக் கம்பனிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிப்பதென இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது என்னுடன் எஸ். முத்தையா, ஐயாத்துரை, பி. தேவகுமார், என்.எம்.ஆர். சிறில், எஸ். கந்தையா, போரசிரியர் விஜேகுமார், நாத் அரமசிங்ஹ, மேனகா கந்தசாமி, மற்றும் ஏ. முத்துலிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவித்த எஸ். இராமநாதன் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற பின்னர் தோட்டக் கம்பனிகள் தொழிற் திணைக்களம், மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியும் தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தித் தராது பிடிவாதமாக இருந்து வருகின்றன.

இது தொடர்பாக தொழிலாளர்கள் ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களிலும் மெதுவாகப் பணி செய்யும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பிலும் கொழும்பில் 4 ஆம் திகதி இக்கூட்டத்தில் முகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை ஒன்றைத் தோட்டக் கம்பனிகளுடனும் தொழிற்சங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு விடுத்த கோரிக்கைக்கும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

தொழிலாளர்களைத் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பட்சத்தில் அதற்கு முன்னதாக சகல அரசியல் சமூக தொழிற்சங்க அமைப்புகளுடனும் கலந்து பேசி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இ¡மநாதன் மேலும் தெரிவித்தார்.

-தினகரன் -

தேவைகளை நிறைவேற்ற முடியாவிடின் தோட்ட மக்களிடம் ஏன் வாக்கு கேட்கின்றீர்கள்

$
0
0
மலையக தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளை கம்பனிகளே நிறைவேற்ற வேண்டும் என்றால் ஏன் தேர்தலில் அம்மக்களிடம் வாக்கு கேட்கின்றீர்கள்? அம்மக்களை கம்பனிகளுக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என நேற்று சபையில் ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மலையக தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். எனவே அவர்களையும் மனிதர்களாக மதிக்கும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் தொடர்பான அமைச்சுக்களின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மலையக தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரை சேர்ந்தவர்களே என்பதனை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் அவர்கள் தொடர்பில் எந்த விதமான அக்கறையும் காட்டப்படுவதில்லை.

இன்றும் அவர்களது நாள் சம்பளம் ரூபா 450 ரூபா. அத்தோடு கொடுப்பனவுகள் இணைந்தாலும் ரூபா 620 கிடைக்கின்றது. இத்தொகையை கொடுப்பனவாக பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியுமா? ஏன் அம்மக்களுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுகிறது.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்று வறுமைக் கோட்டில் வாழும் சுகாதார உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டஇ இந்நாட்டின் அடிமைப்படுத்தப்பட்டஇ ஓரங்கட்டப்பட்ட மக்களாக வாழ்கின்றனர்.

இம்மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுமாறு அரசை கேட்டால் தோட்ட கம்பனிக்காரர்களே அதற்கு பொறுப்புஇ அவர்களிடம் கேளுங்கள் என்கிறீர்கள். அப்படியென்றால் தேர்தலில் அம் மக்களின் வாக்குகளை ஏன் கேட்கின்றீர்கள்.

அம் மக்களது வாக்குகளையும் கம்பனிக்காரர்களுக்கே கொடுங்கள் என்று சொல் லலாமே. மலையகத் தோட்டத் தொழி லாளர்கள் அடிமைகள் என்ற நிலைப் பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஏனைய உழைக்கும் வர்க்கத்தினர் அனு பவிக்கும் உரிமைகள் அவர்களுக்கும் வழங் கப்பட வேண்டும் என்றார்.

மாமழை மீட்டெடுத்த மனித நேயம்!

$
0
0
சென்னையில் குடியிருப்பவருக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைக் கூடத் தெரியாது. வெளியூர்க்காரர்கள் இதனை கிண்டலுக்காக சொன்னாலும், பெரும்பான்மையான இடங்களில் உண்மை இதுதான்.

 வணக்கம் வைத்தாலோ, புன்முறுவல் பூத்தாலோகூட பதிலுக்கு அப்படி செய்வதையே விரும்பாத அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் உண்டு. அவர்களிலும் சிலர் சொத்து எழுதிக் கேட்ட பங்காளியைப்போல முறைத்து விட்டோ, முகத்தைத் திருப்பிக் கொண்டோ போவார்கள். மொத்தமும் ஒரே நாளில் தலைகீழானது.

 திரைப்படங்களில் பார்த்த, திகில் கதைகளில் படித்த காட்சிகள் கண்ணெதிரே நடந்தன. கொஞ்சமும் இரக்கமற்ற அரக்கனைப் போல கொட்டித்தீர்த்தது மழை. இதைப் பேய் மழை என்று சொல்வதெல்லாம் மிகச் சாதாரண வார்த்தை. நேற்றுவரை சாக்கடைகளாக மட்டுமே இருந்த ஆறுகள் எல்லாம் பழிதீர்க்கும் வேகத்தில் பாலங்களை மீறி சென்னைக்குள் பாய்ந்தன. சுற்றிலும் தண்ணீர்க்காடு. எனினும், குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை.

 ஒரு பாக்கெட் அல்லது ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என கண்கள் ஏங்கின. பாலுக்காக அழுத பிள்ளைகளின் கண்ணீர் வற்றிப்போனது. இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் நகர முடியவில்லை. பேருந்துகள் இல்லை. பிதுங்கி வழியும் மின்சார ரயில்கள் செல்வதற்குத் தண்டவாளங்களே தெரியவில்லை. சென்னையின் இருபெரும் ரயில் நிலையங்களான சென்ட்ரலும், எழும்பூரும் மொத்தமாக இயக்கத்தை நிறுத்திக் கொண்டன.

 மீனம்பாக்கத்தில் நின்றிருந்த விமானங்கள் பொம்மைகளைப் போல மிதந்தன. ஏற்கெனவே புறநகர்வாசிகளுக்கு மட்டும் பழக்கமாயிருந்த படகுகளும், பரிசல்களும் பெருநகரத்திற்கான ஏக போக போக்குவரத்து சாதனங்களாயின. பார்த்து, பார்த்து வாங்கிய வீடுகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தாதாவைப் போல புகுந்த தண்ணீர் பலரையும் வெளியேற்றியது. மாதத் தவணையிலும், கடன் அட்டையிலும் வாங்கிய பொருள்கள் எல்லாம் கண் முன்னே மிதந்து சென்றன.

 படகில் தப்பிபோகும் போதே கீழே மூழ்கிக் கிடக்கும் கார்களை ஏக்கத்தோடு பார்த்துச் செல்வது தவிர, வேறெதுவும் செய்ய முடியவில்லை. கையில் பணம் வைத்துக்கொண்டு பொருள்கள் வாங்குவதைக் கெளரவக் குறைச்சலாக மாற்றியதன் இன்னொரு முகத்தை ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் உணர்ந்தார்கள்.

 மணிக்கணக்கில் நின்ற பிறகும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியவில்லை. அதுவும் கிடைக்காமல் அல்லாடியவர்களும் உண்டு. வீட்டில் ஆயிரம் ரூபாய்கூட வைத்திருக்க வேண்டியதில்லை, எல்லாவற்றுக்கும் அட்டை போதும் என்ற தாராளமயமாக்கலின் வரம் பல் இளித்து நின்றது.

 மின்சாரம் தொலைந்த கணங்கள் உயிர் இருக்கும்போதே நரகத்தில் தூக்கிப்போட்டன. உயிரைப்போல இறுக்கிப் பிடித்து வைத்திருந்த செல்லிடப்பேசிகள் செயலிழந்தது இதன் உச்சம். செல்லிடப்பேசி இன்றி எங்கும் செல்ல முடியாது, எதுவும் செய்ய முடியாது என்பதும் பொய்த்துப்போனது.

 செல்லிடப்பேசிக்கு மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்ற மின்சாரம் இல்லை. மாற்று வழிகளில் சார்ஜ் ஏற்றினாலும் பேசுவதற்கு சமிக்ஞை (சிக்னல்) கிடையாது. கைவிடப்பட்ட குழந்தைகளைப்போலக் கிடந்த பழைய தொலைபேசிகள் இருக்கிற இடங்களைத் தேடி ஓடினார்கள். வெளியூர்களில் இருந்து தவித்த உறவுகள் ஒருபக்கம் என்றால், சென்னைக்குள்ளேயே வெவ்வேறு பகுதிகளில் இருந்த சொந்தங்களையும் நட்பையும் தொடர்பு கொள்ள முடியாமல் மிரண்டு கிடந்தனர்.

 இருமல், தும்மல் என ஒன்று விடாமல் பதிவேற்றும் முகநூல் பக்கம் போக முடியாதது பலருக்கு சோகத்திலும் ஆகப்பெரும் சோகம்.

சுற்றி என்ன நடக்கிறது என்று உணர முடியாத பயங்கரத்தில் பக்கத்து வீட்டுக்காரனைக்கூடத் தெரியாத சென்னையின் இன்னொரு முகம் வெளிப்பட்டது. மாமழை மீட்டெடுத்த அந்த மனித நேயத்தின் வடிவங்கள் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தன.

 உணவு, உறைவிடம், உடை, தண்ணீர் என தத்தளித்தவர்களுக்கு வாரிக்கொடுத்த பலர், நேற்று வரை யாரென்றே தெரியாதவர்கள். அரசுகளுக்கோ, அதிகாரிகளுக்கோ அவர்கள் யாரும் காத்திருக்கவில்லை. இயன்றவர்கள் முடிந்ததை எல்லாம் செய்து கொடுத்தார்கள். இவர்களில் பலர் பெரிய கோடீஸ்வரர்கள் இல்லை. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தவர்கள்.

 அங்கங்கே குழுக்களாகச் சேர்ந்தார்கள். போக்குவரத்து வழிகாட்டுதலில் தொடங்கி, நீச்சலடித்து காப்பாற்றியது வரை அவரவர் சக்திக்கு ஏற்ப, எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆளுக்கு ஒரு வேலை செய்தார்கள். பேரிடர் துயரத்திலும் பெரும் ஆறுதல் தந்தது இந்த மனிதம்தான். இதுபோக, இனம், மதம், மொழி, சாதி, பாலினம் எல்லாவற்றையும் ராட்தச மழை ஒரே அடியில் சமமாக்கியது. எஞ்சியது இரண்டே பிரிவு. மிதந்தவர்கள். மிதக்காதவர்கள். அவ்வளவுதான்.

 அதேநேரத்தில், வானம் நிகழ்த்திய துயரம், நமக்கு சிலவற்றைப் பாடமாக சொல்லி இருக்கிறது. அவற்றை, இப்போதே அழுத்தந்திருத்தமாக மனதில் பதியவைக்கவில்லை என்றால், வெள்ள நீரோடு சேர்ந்து அதன் வேகமும் வடிந்து போய்விடும். முதலில் இது ஒன்றும் வரலாறு காணாத மழை இல்லை.
 சமீபத்திய ஆண்டுகளில் நாம் பார்த்ததில்லையேத் தவிர பாட்டன், பூட்டன் காலத்திலேயே இப்படியான மழை இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் கணக்கீட்டு அளவுகளும், முன்னெச்சரிக்கை ரமணன்களும் இவ்வளவு நவீனமாக இல்லை. இருந்தாலும் அவற்றை எல்லாம் சமாளிக்க ஏற்ற வகையில், தமிழர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இயைந்திருந்தது.

 ஒவ்வோர் ஆண்டும் கோடைக் காலத்தில் கூரை வீட்டை கீற்றோ, பனை ஓலையோ வேய்ந்து செப்பனிடுவார்கள். அதற்கு மேல் வைக்கோல் போட்டு, அம்மிக்கல்லைத் தூக்கும் ஆடி மாத காற்றடித்தாலும் பறக்காத அளவுக்கு பக்குவப்படுத்துவார்கள்.

 ஐப்பசி மாத அடைமழைக்கு முன்பாக அரிசி உள்ளிட்ட தானியங்கள் சேகரமாகிவிடும். புரட்டாசியில் மழைத் தொடங்கி, கார்த்திகை கடைசியில் ஓய்ந்து, பனி ஆரம்பிக்கும் வரையில் தேவையான எரிபொருள்கள் வீட்டுப் பரணில் பத்திரமாக இருக்கும். மழை நேரத்தில் காய்கறிகள் கிடைப்பது கடினம் என்பதால், அப்போது குழம்பு வைப்பதற்குத் தேவையான மாங்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய் என வித விதமான வற்றல் வகையறாக்கள் சித்திரை வெயிலில் சரடாக காய்ந்து பானைகளில் காத்திருக்கும்.
 இத்தகைய, திட்டமிட்ட வாழ்வியல் முறையால்தான் ஒரு நாள்கூட விடாமல் மாதம் முழுக்க கொட்டிய மழையிலும் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்கள். கோணிப்பையை மழைக் கோட்டாக மாற்றி சுற்றிச் சுழன்றுள்ளார்கள். இன்றைக்கு லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களின் வீடுகளிலும் மாதத்தின் முதல் நாளில் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல் தத்தளித்த காட்சிகளை என்னவென்று சொல்வது.. அடச்சே - என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் - எவ்வளவு சம்பாதித்து என்ன செய்ய - அன்றாடங்காய்ச்சிகளான ஏழை - பாழைகளே தேவலாம் போலிருக்கிறதே.

 தனி மனிதர்கள் மட்டுமல்ல, தன்னை நம்பியிருக்கும் கால்நடைகளுக்கான வைக்கோல் படப்பு போடுவதையும்கூட நுணுக்கமாக செய்தார்கள். அதன் மேலடுக்கு தாண்டி சொட்டுத்தண்ணீர் உள்ளே இறங்காது. எல்லாவற்றுக்கும் மேலாக நீர்நிலைகளை நம்முடைய தாத்தாக்கள் கையாண்ட விதமே தனி. குளம், ஏரி, ஊருணி எல்லாம் அந்தந்த ஊர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. விவசாய வேலைகள் முடிந்த காலத்தில் அவற்றை எல்லாம் தூர் எடுத்தார்கள். வீட்டுக்கு ஓர் ஆள் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். முடியாதவர்கள் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். இதற்கென குடி மராமத்து வரி போடுவார்கள். ஆறுகள், வாய்க்கால்களும் செடி, கொடிகள் அகற்றப்பட்டு தண்ணீர் வரும் பாதை தரமாக தயாராகிவிடும். வயல் வெளிகளுக்கு, ஏரி - குளங்களுக்கு நீர் வருவதை உறுதி செய்வது போல, எல்லா ஊர்களிலும் வடிகால்களும் வெள்ளம் வந்தால் தண்ணீரை வடித்தெடுக்கும் வகையில் தூர் வாரப்படும்.

 சென்னையில் ஓடும் ஆறுகளின் பெயர்கள்கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் கூவம் என்று சொல்வதைப்போல, கிராமங்களிலும் பாசன வாய்க்காலுக்கும், வடிகாலுக்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறை வளர்ந்து நிற்கிறது. அதன் விளைவைத்தான் இப்போது எதிர்கொண்டிருக்கிறோம்.

 ஆமாம், கனவு போல நடந்து முடிந்திருக்கிற கோரத்தாண்டவம் சென்னைக்கு மட்டுமானதல்ல. ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான ஆகப் பெரிய எச்சரிக்கை மணி. இதன்பிறகும் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் - அனுபவத்திலிருந்து பாடம் கற்காவிட்டால்...?

மீனம்பாக்கத்தில் நின்றிருந்த விமானங்கள் பொம்மைகளைப் போல மிதந்தன. ஏற்கெனவே புறநகர்வாசிகளுக்கு மட்டும் பழக்கமாயிருந்த படகுகளும், பரிசல்களும் பெருநகரத்திற்கான ஏக போக போக்குவரத்து சாதனங்களாயின.பார்த்து, பார்த்து வாங்கிய வீடுகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தாதாவை போல புகுந்த தண்ணீர் பலரையும் வெளியேற்றியது.

-கோமல் அன்பரசன்-

நன்றி- தினமணி

மலையகத் தமிழர்கள்; தொடர்ந்துவரும் மனித உரிமை மீறல்கள்

$
0
0
இலங்கையின் மலையகத் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் இரண்டு நூற்றாண்டுகளாக இடம் பெற்றுவருகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் சமவாயம் பிரகடனப்படுத்தப்படும் முன்னரே மனித இனத்தின் பிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட மக்களினங்களில் ஒன்றாக மலையகத் தமிழர்கள் காணப்பட்டார்கள்.

இலங்கையின் சுதந்திரம் நோக்கிய பயணத்தில் ஆங்கில கல்விகற்ற மத்தியதர வர்க்கங்களும், தமிழ் சிங்கள பிரபுத்துவ வர்க்கங்களும் தமது அமைக்குடிகளாக மலையகத் தமிழர்களை கருதினார்களேயன்றி அம்மக்களினத்தின் அடிப்படை உரிமைகள், மனிதஉரிமைகள், ஜனநாயக உரிமைகள் பற்றி எண்ணிப்பார்க்கவும் தயங்கினர்.

1833களில் ஆரம்பமான காலனித்துவ கால அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் படிப்படியாக முன்னோக்கிச் சென்று, 1947ஆம் ஆண்டில் சேர் வில்லியம் சோல்பரி யாப்பாக பரிணமித்ததுடன் தொடர்ந்த மலையகத் தமிழருக்கெதிரான நிகழ்வுப்போக்குகள், இன்றைவரை வெவ்வேறுபட்டு பரிமாணங்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மலையகத் தமிழர்களின் மனித உரிமைகளை மீறுவதில் சகல ஆளும் குழுமங்களும், வர்க்கங்களும், இனப்பிரிவுகளும், பிரபுத்துவ, முதலாளி சக்திகளும், வலதுசாரிகள், இடதுசாரிகள், சந்தர்ப்பவாதிகள், தமிழ் தேசியவாதிகள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற விசித்திரத்தை இலங்கை தீவில் மட்டும் காணமுடிகின்றது.

1931ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் மலையகத் தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இன்றுவரையும் உள்ளூராட்சி மன்றங்கள், மலையகத் தமிழருக்கு தோட்டத் தொழிலாளருக்கு எத்தகைய சேவையும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அதனை மீறி சேவை செய்த மத்திய மாகாணத்தின், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள உடப்பளாத்தை பிரதேசசபை, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கவால் கலைக்கப்பட்டது.

இலங்கைத்தீவின் 275,000 மக்கள் தொகை கொண்ட நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகமே இலங்கையில் ஆகப்பெரியதாகும். இது மஹரகம பிரதேச செயலகத்தோடு ஒப்பிடுகையில் 30 பிரதேச செயலகங்களை கொண்டிருக்க வேண்டிய பிரதேசமாகும். அதேபோல இலங்கையில் 425 பேருக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவு காணப்படும் போது நுவரெலியா மாவட்டத்தில் 9500 பேர் வசிக்கும் கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் ஒரு கிராம சேவகர் பிரிவே காணப்படுகின்றது. இது பாரதூரமான அரசியல், உரிமை மீறலாகும்.

மேலும், 1948ஆம் ஆண்டு பிராஜா உரிமை பறிப்பு, 1949ஆம் ஆண்டின் தேர்தல் திருத்தச் சட்டம், 1958ஆம் ஆண்டின் சிங்கள மொழிச் சட்டம், 1952ஆம் ஆண்டின் நேரு – கொத்தலாவலை உடன்படிக்கை, 1964ஆம் ஆண்டின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம், 1987ஆம் ஆண்டின் ஜே.ஆர் – ரஜீவ் உடன்படிக்கை என்பனவும் பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்களின் அரசியல், குடியியல் உரிமைகளை மீறிய செயற்பாடுகளாகும்.
மலையகத் தமிழர்களின் காணியுரிமை, வீட்டுரிமை என்பன இன்றுவரை அங்கீகரிக்கப்படாமை, தொழில் உரிமைகள், பெண் தொழிலாளர் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு, தொழில்சார் நலன்களின் பாதுகாப்பு என்பன மீறப்படுவதன் மூலம் அவர்களின் குடியியில் உரிமைகள் மீறப்படுகின்றன. ஏழு தலைமுறையாக நிரந்தர சம்பளம் ஒன்றைத் தீர்மானிக்கப்படாமை பாரதூரமான பொருளாதார உரிமை மீறலாகும்.

1958ஆம் ஆண் இனவெறி தாக்குதல், 1972 காணிச்சீர்திருத்தச் சட்டம், மலையக மக்களின் வாழ்வாதரம் அழிக்கப்பட்டமை, 1977, 1981, 1983, 1984, 1988ஆம் ஆண்டுகளில் மலையகத் தமிழருக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அரச ஆதரவுடன் கூடிய இனவெறி தாக்குதல்கள் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், சொத்து அபகரிப்புகள் மூலமாகவும் பாரிய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கல்வி வாய்ப்புகளில் காட்டப்படும் பாரபட்சம், உயர்கல்வி மறுப்பு, சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சிறுவர் பாதுகாப்பின்மை, போசாக்கின்மை, வறுமை, என்பன மலையகத் தமிழருக்கெதிராக இன்று நிகழ்காலத்தில் நிலவும் மனித உரிமை மீறல்களாகும்.

சுகாதார, மருத்துவ நலன்களை வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சம், தாய் சேய் பாதுகாப்பு, பாராமரிப்பு, பாலியல் சுரண்டல்கள், குடும்ப சமூக அமைப்புசார் ஒடுக்கு முறைகள் என்பன 21ஆம் நூற்றாண்டின் அடிமைக்குழுமம் ஒன்றையே பிரதிபலிக்கின்றன எனலாம். இலங்கை மலையகத் தமிழரை பொறுத்தவரை அவர்களின் அரசியல் உரிமைகள், குடியியல் உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், பொருளியல் உரிமைகள் என எந்நிலை நின்று நோக்கினாலும் அவையனைத்தும் வரலாறு பூராவும் மீறப்பட்டு வந்திருப்பதனையும், மீறப்பட்டு வருவதையும் காண முடிகின்றது.

இந்நிலைமை மேம்படுத்தும் எத்தகைய ஆக்கபூர்வமான பிரயத்தனமும் மேற்கொள்ளப்பட வில்லையென்பது வெட்கக்கேடான உண்மையாகும்.

பொன்.பிரபாகரன்

நன்றி- மாற்றம் இணையம்

நிலைமாற்றுகால நீதி: மலையக மக்கள் சார்பில் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை செயன்முறைக்கான பரிந்துரைகள்

$
0
0
நிலைமாற்று கால நீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசிக்கும் செயன்முறையில் மலையக மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்களது விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மலையக சமூக ஆய்வு மையம் வௌியிட்டுள்ள ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கீழே காணலாம்.

நிலைமாற்று கால நீதி தொடர்பில் பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கும் செயன்முறையை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இன, மத, மொழி, பால்நிலை, பிரதேசம் கடந்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயற்பாடுகளை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவின் செயல் வடிவம் வெவ்வேறானதாக இருக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பில் மலையக மக்கள் சார்பில் மலையக சமூக ஆய்வு மையத்தின் பரிந்துரைகள் இதுவாகும்.

இலங்கையில் நிலைமாற்று கால நீதியை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயன்முறையின்போது (Victim Consultation Process) இந்நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக பின்வரும் விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
  1. பிரதிநிதித்துவம்
I பாதிக்கப்பட்டோர்கலந்தாலோசனை செயல்முறையினை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவில் மலையக சிவில் சமூக பிரதிநிதி ஒருவரும் உள்வாங்கப்படல் வேண்டும்.
II இக்குழுவில் 50% பிரதிநிதித்துவம் பெண்களைக் கொண்டதாக உறுதி செய்யப்படல் வேண்டும்.
  1. சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
  2. இணைப்புக் குழுவின் விடய பரப்புக்குள் மலையகத் தமிழர்களின் பின்வரும் விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
I 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு.

II 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிப்பு.

III 1964ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலமும், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மூலமும் இம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத்தின் பேரில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட விவகாரம்.

IV 1958ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை மலையகப் பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளினால் ஏற்பட்ட பாதிப்புகள் (உயிர் மற்றும் சொத்துடமை) மற்றும் அதன் விளைவாக வட கிழக்குப் பிரதேசங்களில் குடியேறிய மலையகத் தமிழ் மக்களினுடைய உரிமைகள்.

V வடக்கு கிழக்கில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அந்தப் போரின் விளைவாக மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள். குறிப்பாக சந்தேகத்தின் பேரில் மலையகத் தமிழர்கள் கைதுசெய்யப்படல், தடுத்து வைத்தல், மனோ நீதியாக அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள்/ வடுக்கள் போன்றவை.

VI 200 வருடகால வரலாற்றை இந்த நாட்டில் கொண்டுள்ள மலையகத் தமிழரின் காணியுரிமை அற்ற நிலையும், அவர்களின் வீட்டுரிமைப் பிரச்சினையும்.

VII அரசியல் யாப்பில் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள தமிழ்மொழி மலையகப் பிரதேசங்களில் முறையாக அமுல்படுத்தப்படாமை.

VIII அன்று முதல் இன்று வரை மலையகத் தமிழர்கள் ஐதாக வாழும் மாவட்டங்களில்/ பிரதேசங்களில் மலையகத் தமிழரின் இனத்துவ அடையாளங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் அல்லது இனத்துவ அடையாளங்களை அழித்தல் என்ற விவகாரம்.

IX மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில், குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாய கருத்தடைகள்.

X திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் பொருளாதார வளங்களை சூறையாடுதல் போன்ற வழிமுறை ஊடாக மலையகத் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியமை.
  1. இடம்
சாட்சியங்களை பதிவுசெய்வதற்கும், உண்மைகளை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பு இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவது போன்று சமவாய்ப்பு மலையகத் தமிழருக்கும் வழங்கப்பட வேண்டும். இதற்காக இந்த இணைப்புக் குழுவின் (Coordinating Committee) விசாரணைகள் மலையகத்தில், குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, தெனியாய போன்ற நகரங்களிலும் மீரியாபெத்தை பிரதேசத்திலும் இடம்பெறல் வேண்டும்.
  1. காலமும் அவதானிப்பும்
மக்களுக்கு உண்மைகளையும், சாட்சியங்களையும் வழங்குவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செயற்பாடுகளை நிறைவுசெய்ய முடியாத பட்சத்தில் கால எல்லை நீடிக்கப்பட வேண்டும். குறுகிய கால எல்லைக்குள் நிறைவுசெய்ய வேண்டுமாயின் இணைப்புக் குழுவின் ஆளணி வலுவை அதற்கேற்ப அதிகரிக்கப்படல் வேண்டும்.

மக்களின் உண்மைகளையும், சாட்சியங்களையும் பதிவுசெய்யும் இடங்களுக்கு சர்வதேச அவதானிப்பாளர்களுக்கும், உள்நாட்டு அவதானிப்பாளர்களுக்கும் எவ்வித தடையுமின்றி அவதானிப்புகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
  1. மொழி
உண்மைகளை கண்டறியும் போதும், சாட்சியங்களைப் பதிவு செய்யும்போதும் எந்தவொரு தனிநபரும் இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பால்நிலை அடிப்படையிலோ, மத ரீதியாகவோ வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படக்கூடாது. பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் தமது தாய் மொழியினை பயன்படுத்தி கருமங்களை ஆற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

மலையக சமூக ஆய்வு மையம்

நன்றி- மாற்றம் இணையம்

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

$
0
0
நுவரெலியா, வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின்  கீழ் இயங்கும் அல்மா  கிரேமன்ட் தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளமைக்கும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரங்களை அகற்றுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து தொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி ஹைபொரஸ்ட், சில்வர்கண்டி புறுக்சைட் சந்தி, சென்ஜோன்ஸ், கந்தப்பளை ஊடக நுவரெலியா தொழிற்திணைக்களம் வரை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தொழிற்சாலையை மீளத்திறந்து, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் தொழிலாளர்களின் வேலையை உறுதிப்படுத்துமாறும் பேரணியில் ஈடுபட்டவர்கள் தொழிற் திணைக்களத்திடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர். 

கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் குறித்த தொழிற்சாலையை மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்திருந்ததாக தெரியவருகிறது. எனினும் நேற்று (13) தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரங்களை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தொழிலாளர்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. 

குறித்த தொழிற்சாலையை நம்பியே தினமும் சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் கிலோ தேயிலை பறிக்கப்படுவதாகவும், எனினும் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் பறித்த தேயிலையை  வேறு தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழப்பதோடு, அவர்களது மாத வருமானம் 50 வீதமானக குறைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


தொழிற்சாலையை நம்பியிருந்த சுமார் 50 தொழிலாளர்கள் முற்றாக தொழிலை இழந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிற்சாலையை மீளத் திறக்கும் பட்சத்தில் ஏற்கனவே மூடப்பட்டுள்ள பிரம்லி,  குருந்துஓயா மற்றும் கோணப்பிட்டிய ஆகிய தொழிற்சாலைகளை நம்பி பறிக்கப்படும் தேயிலையையும்  இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வந்து உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பள பேச்சுவார்த்தை எதிர்வரும் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு

$
0
0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை  தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை(15) நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பமான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்களினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் முதலாளிமார் சம்மேளனத்தின் தரப்பினர்கள் எவ்வித பதில்களும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், உபதலைவர் மாரிமுத்து, ஜோதிகண்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக விஜயகுமார், உரூத்திரதீபன், தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பாக இராமநாதன், முருகையா மற்றும் பொருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் சார்பாக 22 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொழிற்சாலையை திறக்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

$
0
0
நானு­ஓயா எடின்­புரோ தோட்­டத்தில் 300 இற்கு மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் நேற்றுக் காலை 08 மணி­முதல் 10 மணி வரை தேயிலை தொழிற்­சா­லைக்கு முன்­பாக ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். தோட்­டத்தில் இயங்­கி­வந்த தேயிலைத் தொழிற்­சாலை 03 மாதங்­க­ளுக்கு முன்பு தோட்ட நிர்­வா­கத்தால் இயந்­தி­ரங்­களை திருத்­து­வ­தாக கூறி தற்­கா­லி­க­மாக மூடப்­படும் என தொழி­லா­ளர்­க­ளுக்கு தெரி­விக்கப்பட்டுள்­ளது. ஆனால் 03 மாதங்கள் கடந்த போதி­லும்  ­இ­து­வரை எவ்­வித நட­வ­டிக்கையை எடுக்­க­ப்ப­ட­வில்லை எனவும் தற்­போது தோட்ட நிர்­வாக அதி­கா­ரி­க­ளிடம் தொழி­லா­ளர்கள் கேட்­ட­போது அதற்கு பணம் இல்­லை­யென தெரி­விப்­ப­தாக ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்ட தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். 
 
தோட்­டத்தில் நல்ல வரு­மா­னத்­தினை தரக்­கூ­டிய தேயிலை மலைகள் தோட்ட நிர்­வா­கத்தால் முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாமல் கைவிடப்­பட்டுள்­ள­தா­கவும் இத்­தே­யிலை மலை­களை துப்­பு­ரவு செய்­வ­தற்கு கம்­ப­னி­யிடம் பணம் இல்லை. இதன் கார­ண­மா­கவே துப்­பு­ரவு செய்­ய­மு­டி­யாத நிலை இருப்­ப­தாக தோட்ட நிர்­வாகம் தெரி­விப்­ப­தாக தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். தோட்ட நிர்­வா­கத்தால் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய சலு­கை வழங்­க­ப்ப­டு­வ­தில்லை. தோட்­டத்தில் உள்ள பொது­மக்­களின் சுகா­தார விட­யங்­களை முறை­யாக செய்து கொடுப்­ப­தில்­லை­யென தெரி­வித்தே இவர்கள் ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர். தொழிற்­சா­லை ­உ­ட­ன­டி­யாக திறக்­கப்­ப­டா­விட்டால் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் தொழி­லா­ளர்கள் தெரி­வித்­தனர். இவ் ஆர்ப்­பாட்­டத்தில் அதி­க­மான பெண்கள் கலந்­து­கொண்­டமை ொண்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பள உயர்வு வழங்காவிடின் தோட்டங்களை கையளியுங்கள்

$
0
0
தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்க்ஷ்மன் கிரியெல்ல தோட்ட கம்பனிகளை வலியுறுத்தியுள்ளார்.
பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் லக்க்ஷ்மன் கிரியெல்லவின் தலைமையில் நடைபெற்றது. இங்கு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட அமைச்சர், சிலர் தோட்டங்களினூடாக கிடைக்கும் வருமானம் போதாது என்று கூறிக்கொண்டு லாபத்தை மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
புதிய அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கமைய அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கியிருக்கிறோம்.இவர்களுக்கு மட்டுமன்று நாட்டிற்கு அமைதியாக சேவையாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு துரிதமாக  சம்பள உயர்வு வழங்குமாறு தோட்ட கம்பனிகளிடம் வலியுறுத்துகிறேன். இல்லாவிட்டால் சகல தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தெரிவிக்கிறேன். நாம் எந்த சவாலையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சில தோட்ட உரிமையாளர்கள் தோட்டங்களை நிர்வகிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வெள்ளைளைக்காரர்களின் காலத்தில் ஒவ்வொரு கம்பனிக்கும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் வீதமே தோட்டங்களுக்குக்கு இருந்தன.ஆனால் இன்று நிலைமை முற்றாக மாறியிருக்கிறது.
 சில தோட்ட உரிமையாளர்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் காணியிருக்கிறது. சிலர் தோட்டங்களினூடாக கிடைக்கும் வருமானம் போதாது என்று கூறிக்கொண்டு லாபத்தை மறைக்கின்றனர்.தோட்டங்களினூடாக வருமானம் கிடைக்காவிட்டாலோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ சகல தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளியுங்கள்.
 பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப் பேற்க தயாராாக உள்ளனர். அவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள். பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது.
தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தோட்ட கம்பனிகளிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருப்பதன் ஊடாக மக்கள் ஆணை குறித்து தெளிவாகிறது.குரோத அரசியலை கைவிட்டு நாட்டை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு சகல அரசியல்வாதிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.

கலப்புத் தேர்தல் முறை - சிறுபான்மை பிரதிநிதித்துவங்களுக்கு ஆபத்து!

$
0
0
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போதைய நிலைவரத்தின்படி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதமே நடத்தப்படுமென அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெற்றாலும் தேர்தல் முறைக்கு கொண்டு வரப்படவுள்ள விகிதாசார, தொகுதி வாரி என்பன கலந்த திருத்தத்திற்கு அதாவது உத்தேச அரசியலமைப்பிற்கான 20வது திருத்தச் சட்டத்தின் படியே நடத்தப்படும் என்று அமைச்சரவையின் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி சபை தேர்தல் விசேடமாக வட்டார (வார்ட்) முறையின் அடிப்படையிலேயே நடைபெறும்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பற்றி பேசப்படும் சூழ்நிலையில் இரண்டு பிரதான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஒன்று ஒரு உள்ளூராட்சி சபை பிரதேச எல்லைக்குள் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை ஒப்பீட்டு ரீதியில் உறுதி செய்து வருவது விகிதாசார பிரதிநிதித்துவ முறை ஆகும்.

விகிதாசார முறையும் தொகுதிவாரி முறையும் கலந்த தேர்தல் முறை அறிமுகம் செய்யப்படும்போது எண்ணிக்கையில் சிறுபான்மையான சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவடைய அல்லது இல்லாமல் போகக்கூடும். அதிலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வட்டாரங்களிலிருந்து உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்படின் சிறுபான்மை சமூகத்தினர் அந்த வட்டாரத்தில் செறிவாக வாழாத விடத்து அவர்களின் பிரதிநித்துவம் இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும்.

இரண்டாவது பிரச்சினையாவது உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்திற்குரிய புவியியல் பிரதேச எல்லைக்குள் பெருந்தோட்டக் குடியிருப்புகள் அடக்கப்படாதபடியால் அவை அமைந்துள்ள பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதற்கு தடைகள் இருக்கின்றன.

பிரதேச சபைகள் என்ற உள்ளூராட்சி அமைப்பிற்குள்ளேயே பெருந்தோட்டப் பகுதிகள் உள்ளடங்குகின்றன. அதற்கான தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளடங்கலான மலையக மக்கள் வாக்களிப்பதை மட்டுமே உரிமையாக கொண்டுள்ளனர்.

பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 33 பிரதானமாக தோட்டக் குடியிருப்புகளை பிரதேச சபைகளின் அபிவிருத்தி வேலைகளை உட்கிடையாக தடுக்கிறது. இச்சட்டம் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்ட போது (1987 இல்) அப்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த மலையகத்தவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அவர்கள் அப்பிரிவினூடாக தோட்டப் பிரதேச அபிவிருத்திகளுக்கு போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு மட்டுமன்றி அடுத்தவர்களின் அபிப்பிராயங்களுக்கு செவிசாய்க்காமை பண்பாட்டின் வெளிப்பாடுமாகும்.

அடுத்தவர்கள் சரியான கருத்துக்களை முன்வைத்தாலும் அதனை பொது மக்கள் நன்மை கருதி கூட ஏற்காத தான்தோன்றித்தனமே அவர்களிடம் காணப்பட்டது. அந்த மலையக எம்.பிக்களிடம் 1986, 1989 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பிரசாவுரிமை சட்டத்திருத்தங்கள் பற்றிக்கூட தெரிவிக்கவில்லை.

மலையகப் பகுதிகளில் மூன்று அல்லது நான்கு பிரதேச சபைகள் மலையகத்தில் உறுப்பினர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளது. தலைவர்கள், பிரதித் தலைவர்களாக மலையகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் தோட்டப் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள அவர்களுக்கு பிரதேச சபைகளின் கீழ் அதிகாரமோ ஆணையோ கிடையாது.

தோட்டப் பகுதிகளின் சில இடங்களில் பாதைகளும், பாலங்களதும் பிரதேச சபைகளுக்கூடாக அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்காக செலவழிக்கப்பட்ட நிதி அவற்றுக்கென ஒதுக்கப்பட்டதல்ல. மாறாக வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும்.

இந்த நிலைமை மாற வேண்டுமெனின் பிரதேச சபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அதாவது தோட்டப் பகுதிகளை பிரதேச சபை அபிவிருத்தி திட்டங்களிலிருந்து உட்கிடையான ஒதுக்க வைத்திருக்கும் பிரிவு 33 ஐயும் அதனோடு தொடர்புடைய பிரிவுகளையும் திருத்த வேண்டும். தோட்டப் பகுதிகளிலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்றும் தோட்டக் குடியிருப்புகளை சட்டபூர்வமான மக்கள் குடியிருப்புகளில் ஒன்றான அங்கீகரிப்பதாகவும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

தோட்டக் குடியிருப்புகளை இலங்கையின் குடியிருப்புகளில் ஒன்றாக அங்கீகரித்தால் அபிவிருத்திகளை ஈர்த்துக் கொள்ளும் தகுதி மலையகத் தமிழ் மக்களுக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் மலையகத் தமிழ், மக்கள் ஏனைய பிரஜைகளுக்கு அல்லது சமூகங்களுக்கு சமமாக நடத்தப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.

வாக்களித்து தாங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் ஆளும் பிரதேச சபைகளின் பயனாளிகளாக தாங்கள் அங்கீகரிக்கப்படாவிட்டால் தங்களது வாக்குரிமையால் என்ன என்பதுடன் வாக்குரிமை இருந்தும் இல்லாத நிலையில் இருப்பதாக மலையகத் தமிழ் மக்கள் விசனமடைந்துள்ளனர்.
இலங்கையின் அரசியல் பிரதிநிதித்துவ முறையில் உள்ளூராட்சி சபைகளை மக்களுடன் நேரடி தொடர்புடைய மக்கள் நாளாந்த தேவைகளுக்கான நாளாந்த அலுவல்களுக்கான சபையாக இருக்கின்றன.

தோட்டக் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்படவில்லை. (அவை நகரக் குடியிருப்புகளாக இருக்க முடியாது) அவ்வாறு கிராமக் குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும் வேறு விசேடமான இன்னொரு குடியிடிருப்பாகவாவது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மலையகத் தமிழ் மக்களுக்கென தோட்ட உட்கட்டமைப்பு என்ற அமைச்சொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இல்லாமலாக்கப்பட்டது. தற்போது புதிய கிராமங்கள் உருவாக்குதல் அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதன் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திணைக்களங்கள் எதுவும் இல்லை. அவ்வமைச்சு காணி, வீடமைப்பு போன்ற அமைச்சுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டின் ஏனைய மக்களை ஏறக்குறைய நூறாண்டு காலத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதனால் இச்சமூகத்திற்கு விசேட ஏற்பாடுகள் அவசியமாகிறது.

அந்த அடிப்படையில் புதிய கிராமங்கள் உருவாக்கும் அமைச்சு சுதந்திரமாக செயற்படுவதற்கு அதிகாரங்களும், திணைக்களங்களும், நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.
அதனூடாக மலையகத் தமிழ் மக்களுக்கு சொந்த வீடுகள், காணிகள் கிடைப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டு உட்கட்டமைப்புகளுடன் பிரத்தியேக குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெருந்தோட்டங்களின் பெரும்பாலானவை தனியார் கம்பெனிகளால் முகாமை செயற்படுகின்றன. இதனால் தோட்ட எல்லைக்குள் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதை கம்பெனிகள் நிர்வாகங்கள் அதிகமாக விரும்பவில்லை. அவை தோட்ட குடியிருப்புகள், தோட்ட உட்கட்டமைப்பு போன்றன அவற்றின் பிரத்தியேக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென விரும்புகின்றன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் தோட்டக்காணிகளின் பூரணமான சொந்தம் அல்லது உரித்து தோட்டக் கம்பெனிகளிடமே இருக்கின்றன. நீண்டகால குத்தகைக்கு அல்லது முகாமை செய்வதற்கு தோட்டங்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள கம்பெனிகள் இந்நாட்டின் இன்னொரு மக்கள் பிரிவினரான மலையகத்தில் மக்களுக்கு பிரதேச சபைகளினூடான அபிவிருத்திகள் சென்றடைவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முரண்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று மலையகத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளின் அபிவிருத்திகள் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

ஆகவே பிரதேச சபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உரிய திருத்தங்களை செய்து மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ, பொருளாதார சமூக உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நன்றி- தினகரன்

அமரர் பெ.சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம்

$
0
0
மலையகத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு மலையக தமிழ் மக்களின் குறிப்பாக, மலையக தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு, காணிப்பிரச்சினை மிக முனைப்பாக பேசப்படுகின்ற கால கட்டமிது. வீட்டுரிமையும், காணியுரிமையும், மலையகத் தலைவர்களினதும், மலையக அமைப்புக்களினதும் மலையக தமிழ் மக்களினதும் ஏகோபித்த கோரிக்கையாக மாறியுள்ள இன்றைய கால கட்டத்தில், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும், மலையக தலைவர்களின் தனித்துவமானவருமான பெ.சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்படுவது சாலப் பொருத்தமானதாகும்.

மலையக வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பாக மலையக மக்களினதும், சந்திரசேகரன் உட்பட மலையக தலைவர்களினதும் கவனம் கடந்த இரு தசாப்தங்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பான பிரச்சினைக்கு உந்து சக்தியாக அதனை தேசிய, சர்வதேச மயமாக்குவதற்கு மீறியாபெத்தை மண்சரிவு அவலம் மிக முக்கிய உந்துசக்தியாக விளங்கியது. இந்த நிகழ்வே மலையக மக்களின் காணியுரிமை, வீட்டுரிமை தொடர்பாக இன்னொரு பாய்ச்சலை ஏற்படுத்தியது.

முதன் முதல் மலையக தமிழ் மக்களுக்கு மலையக வரலாற்றில், இலவசமாக காணியுரிமையும் வீட்டுரிமையும் வழங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஏற்பட்டது. மீறியபெத்தை அனர்த்தம் மலையக வீடமைப்பில், லயன்முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தோட்ட நிருவாகங்களுக்கும் அரசுக்கும் ஏற்படுத்தினாலும், இந்தத் தோட்டப்புற வீடமைப்பு அல்லது மலையக வீடமைப்பு, காணியுரிமை என்ற விடயத்தில் மலையக மக்கள் முன்னணியினதும், அதன் தலைவர் பெ.சந்திரசேகரன் தனி நபர் பாத்திரமும், ம.ம.முயின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடமுடியாதது.

ஆனால் படிப்படியாக இந்த காணியுரிமை, வீட்டுரிமை விடயங்களில் தலைவர் சந்திரசேகரனினதும், மலையக மக்கள் முன்னணியினதும் பங்களிப்பு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருது புலப்படுகின்றது.

அண்மையில் வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பான ஒரு ஆய்வு கலந்துரையாடல் நடைபெற்றபோது மலையகத்தின் காணியுரிமை வீட்டுரிமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதிலுள்ள தடைகள், பிரச்சினைகள் மற்றும் கட்டப்பட்ட வீடுகள் தொடர்பாக ஆய்வாளரொருவர் ஆவணத்தையும் சமர்ப்பித்தார். அப்போது மலையகத்தில் மூத்த தலைவர் ஒருவரின் பெயர் சிலாகித்து பேசப்பட்டு, மறைந்த தலைவர் சந்திரசேகரனின் பெயர் குறிப்பிடப்படாத போது, கட்டுரையாசிரியர் அதனை சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட ஆய்வு கலந்துரையாடலை ஒழுங்கு படுத்தியவருக்கு சந்திரசேகரனின் பாத்திரத்தை மறக்க வேண்டிய, மறுக்க வேண்டிய தேவை இல்லாத போதும், ஒரு விடயம் தெளிவாக தெரிகின்றது.

மலையக வீட்டுரிமை, காணியுரிமை விடயங்களில் ம.ம.மு தலைவர் பெ. சந்திரசேகரனின் பெயர் படிப்படியாக மறைந்தும், மறைக்கப்பட்டும் வருகின்றது. மலையக வீடமைப்பில் காணியுரிமையைப் பொறுத்தவரையில், மறைந்த தலைவர் சந்திரசேகரனின் பெயர் மறக்கமுடியாது. அது மலையக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்றாகும். மலையக வீடமைப்பு பற்றி ஆய்வு செய்யும் போது, எந்த ஆய்விலும் மறைந்த தலைவர் சந்திரசேகரனின் வீடமைப்பு திட்டத்திற்கு நிச்சயமாக ஆய்வில் ஒரு அத்தியாயம் ஒதுக்கப்படும். சந்திரசேகரனின் பாத்திரத்தை புறந்தள்ளிவிட்டு மலையக காணியுரிமை, வீட்டுரிமை வரலாற்றை பார்க்க முடியாது.

ஆகவே அவரது 6வது சிரார்த்த தினம் எதிர்வரும் 2016 ஜனவரி முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும்போது, காணி வீட்டுரிமையில் அவரது பங்களிப்பு நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட மூத்த தொழிற்சங்க, அரசியல்வாதி 1977ம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் 17 வருடங்கள் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்தபோதும், கொட்டக்கலையில் சௌமியபுரத்தில் 20 வீடுகளையும், ரொசால்லை மாணிக்கவத்தையில் 20 வீடுகளுமாக 17 வருடங்களில் 40 வீடுகளையே வீடமைப்பில் இலங்கையில் சாதனை நிகழ்த்தியதாக கூறப்படும் பிரேமதாச ஆட்சிக் காலத்தில் நிர்மானித்திருந்தார். அது மாத்திரமன்றி தோட்டப்புற வீடமைப்பு பற்றி அவருக்கு ஒரு தொலைநோக்கு இருக்கவில்லை.

லயன்முறை ஒழிக்கப்படவேண்டுமென்று பலராலும் வலியுறுத்தப்பட்டபோது அவர் லயன் வீடுகளையும், அதனை சூழவுள்ள காணிகளையும், தோட்டத் தொழிலாளருக்கு உரிமையாக்க வேண்டுமென்று கோரியிருந்தார். ஆனால் 1994ம் ஆண்டிலிருந்து 1998ம் ஆண்டுவரை சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தில் வீடமைப்பு நிர்மானத்துறை பொது வசதிகள் அமைச்சின், தோட்டப்புற வீடமைப்பு பிரதியமைச்சராக இருந்த மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் கிட்டத்தட்ட 20,000 வீடுகளுக்கான காணிகளை பெற்று தனித்தனி வீடுகள் காணியுரிமை, வீட்டுரிமையுடன் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

 எந்த புள்ளிவிபரமுமின்றி எழுந்தமானமாக அவர் இந்த நான்கு வருடங்களில் (94- முதல் 98 வரை) ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிமுடித்தார் என்று துணிந்து கூறலாம். அவர் கட்டிய வீடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்வீடுகள் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அமைக்கப்படவில்லை. காலி, மாத்தறை, மொனராகலை, பதுளை, கண்டி, மாத்தளை குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி, போன்ற பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் கூறுவது போல மலையகம் என்றால் நுவரெலியா மாத்திரம் என்று அர்த்தப்படுத்துவது போல் அல்லாமல் பல மலையக மாவட்டங்களில், கொழும்பு மாவட்டத்தில் கூட தோட்டப்பகுதிகளில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. தனது குறுகிய கால வாழ்க்கையில் மூத்த மலையகத் தலைவர்களால் சாதிக்க முடியாதவற்றை சாதித்தவர் மறைந்த தலைவர் சந்திரசேகரனாவார்.

 அமரர் பெ.சந்திரசேகரன் மலையக மக்களின் மிக அடிப்படையான பிரச்சினைககளான காணி, வீட்டுரிமை மட்டுமன்றி, 1948ம் ஆண்டிலிருந்து இழுபறியாக 2003ம் ஆண்டுவரை இழுத்தடிக்கப்பட்ட பிரஜா உரிமை பிரச்சினை தொடர்பாகவும், இந்திய கடவுச்சீட்டு பெற்று இந்தியா செல்ல விரும்பாத ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் கடவுச்சீட்டு பெற்றவர்களின் பிரச்சினையிலும் துணிகரமாக குரல்கொடுத்து வந்தார்.

1991ம் ஆண்டு தலவாக்கலையில் இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களின் கடவுச்சீட்டை சேகரித்து எரித்து, அதன் காரணமாக 02 வாரங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிவந்தது.

இதன் பிறகு நாடற்றோர் பிரச்சினையை தீர்ப்பதிலும் பிரஜா உரிமை பிரச்சினையை முற்று முழுதாகத் தீர்ப்பதிலும் இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டியது, தலைவர் சந்திரசேகரன் மலையக மக்களின் மிக அடிப்படையிலான பிரச்சினைகளில் துணிவாகவும் தீர்க்க தரிசனத்துடனும் செயல்பட்டவர்.

மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் தனி நபர் என்ற அடிப்படையில், மலைய மக்களின் பிரச்சினையில் கூடுதலான அக்கறை கொண்டவராகவும் மலையக மக்கள் முன்னணி என்ற அடிப்படையில், மலையக மக்கள் பிரச்சினைகளில் தலைமைப் பாத்திரம் ஏற்றவராகவும்செயல்பட்டார்.

இதில் மலையக மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினையும் பிரஜா உரிமை பிரச்சினையும், மிக முக்கியமானது. இதில் வீட்டுரிமை காணியுரிமை பிரச்சினையை பொறுத்தவரையில் மலையகத்தில் ஏனைய தலைவர்களைவிட, முன்னோடியாக செயல்பட்டவர் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. இவ்வகையில் அமரர் சந்திரசேகரனின் பங்களிப்பு காத்திரமானது. 

அ. லோறன்ஸ்

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது காலத்தின் கட்டாய தேவை

$
0
0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் சேமநலன்கள் தொடர் பாக  தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மிடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்படு ம்  கூட்டு ஒப்பந்தம் வரலாற்றில் முதல் தடவையாக ஒன்பது மாதங்கள் கடந்தும் கைச்சாத்திட முடியாத நிலை இன்னும் தொடர்கிறது. 

ஏனைய தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடாமல் புள்ளிவிபரச் சான்றுகளை ஆராயாமல் தன்னிச்சையாக இ.தொ.கா. எடுத்த முடிவின் விளைவுதான் இந்தக் காலதாமதத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. அன்று கம்பெனிகளுக்கு பெருந்தோட்டங்களை தாரை வார்க்கும்போது இ.தொ.கா. வும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், கூட்டுத்தொழிற்சங்கமும் வாழ்க்கைச் செலவுப் புள்ளியை நிறுத்த துணை போகாமல் இருந்திருந்தால் இன்று தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்திருக்கும். 

2013 ம் ஆண்டு ஒரு அ.மெ டொலர் 90 ரூபாவிலிருந்து 140 ஆக கூடியுள்ளது.இதன் மூலம் பணவீக்கமும், பணப்பெறுமதி குறைப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இன்று மக்களுடைய வாழ்க்கைச்சுமை கூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பலவிதமான சம்பள முறையை உருவாக்கியுள்ளது. 

தோட்டங்கள் தனியார் மயமாக்களின் பின்னர் வாழ்க்கைச் செலவுப் புள்ளியினை நிறுத்தி முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இச் சம்பள முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. 

1) அடிப்படைச் சம்பளம்
2) பெயரளவிலான சம்பளம்
3) கேள்விக்குட்படுத்தப்பட்ட சம்பளம்
அடிப்படைச் சம்பளம்

2001 தொடக்கம் 2009 வரையும் அடிப்படைச் சம்பளம் 33 வீதமாக கூட்டப்பட்டது. ஆனால் 2011 தொடக்கம் 2013 வரை இது 18 வீதமானது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது இந்த 18 வீதமும் உண்மையான சம்பள உயர்வு அல்ல. இன்று அடிப்படைச் சம்பளமாக அரச துறையில் 20086 +10000 வழங்கப்படுகின்றது. அதேபோல தனியார் துறையில் 9660 + 2500 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆனாலும் தனியார் துறையினருக்கு இவ் அடிப்படைச் சம்பளம் போதாது எனவும் 15000 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனவும் போராடுகின்றனர். ஆனால் தோட்ட தொழிலாளர்கள் 20 நாட்கள் வேலை செய்தால் கிடைக்கும் சம்பளமும், 25 நாட்கள் வேலை செய்தால் கிடைக்கும் சம்பளமும் பின்வருமாறு.
450 x 20 = 9000.00
450 x 25 = 11250.00

இதிலிருந்து தெரிவது என்னவெனில் ஏனைய தொழிலாளர்களை விட தோட்டத் தொழிலாளர்களுக்கு 66 வீதம் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. அடிப்படைச் சம்பளத்திற்கு மட்டும்தான் ஈ.பி.எப், ஈ.ரி.எப். வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் பின்போடப்பட்டு வருவது கம்பெனிகளுக்கே ஆதாயமாகின்றது. புதிய ஒப்பந்தத்தில் கூட்டப்பட்ட தொகைக்கு ஊழியர் சேமலாப நிதியும், ஊழியர் நம்பிக்கை நிதியும் கிடைக்க வாய்ப்பில்லை. அதே சமயம் கூட்டப்பட்ட தொகை நிலுவை மொத்தமாக கிடைக்கப்போவதில்லை. நிலுவைக்கான வட்டியும் சேர்க்கப்படப் போவதில்லை. இவை கம்பெனிகளுக்கே இலாபத்தைக் கொடுக்கும்.
 
நிறை அதிகரிப்பு

1970ல் 14 இறாத்தல் கொழுந்து பறிக்கவேண்டும் என்றிருந்த நிலை படிப்படியாக 14 கிலோவாக மாறி இன்று ஒரு நாட்சம்பளத்திற்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் 3 முறை கொழுந்து நிறுக்கும்போது ஒவ்வொரு முறைக்கும் 2 கிலோ வீதம் கழிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் 5 கிலோ கழிக்கப்படுகிறது. ஆகவே ஒருநாட் சம்பளத்திற்கு தொழிலாளி ஒருவர் 24 கிலோ கொழுந்தெடுக்க வேண்டியுள்ளது. 

24 கிலோ பச்சை கொழுந்து தேயிலையில் 6 கிலோ கறுப்புத் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ தேயிலை “டஸ்ட் நம்பர் 1” 600 ரூபாவாக விற்கப்படுகிறது. அதனடிப்படையில் தொழிலாளியொருவர் நாளொன்றுக்கு ரூபா 3600 கம்பெனிகளுக்கு உழைத்துகொடுக்கிறார். சந்தையில் 50 கிராம் தேயிலைப் பொதி ஒன்றின் விலை 55 ரூபாவாகவுள்ளது. அதன்படி ஒரு கிலோ தேயிலையின் விலை ரூபா 1100. பதனிடப்பட்ட பச்சைத் தேயிலை ஒரு கிலோ 1000 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை 1.8 கிராம் வீதம் பைகளுக்குள் அடைக்கப்படும்போது அதன் எடை 2 கிராமாக மாறுகின்றது.- 

20 பைகளை கொண்ட பெட்டியொன்றின் எடை 40 கிராமாக உள்ளது. இதன் சந்தை விலை ரூபா 150 ஆகவுள்ளது. அதன்படி ஒரு கிலோ (25 பெட்டிகள்) ரூபா 3750இற்கு விற்கப்படுகின்றது. தேயிலை சிறிய பக்கெட் ஒன்று 10 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இதன்மூலம் ஒரு கிலோ தேயிலை ரூபா 5000இற்கு விற்கப்படுகின்றது. ஏலத்திலோ இடைத்தரகர்களோ இன்றி நேரிடையாக தொழிற்சாலைகளிலும் தேயிலை இதே விலைகளின் அடிப்படையில் விற்கப்படுகின்றது. 

இதனால் கம்பெனிகள் நோகாமலே இலாபம் பெறுகின்றனர் என்பதே உண்மையாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்போது இதன் விலை 8 மடங்காக அதிகரிக்கின்றது. உற்பத்தியில் மட்டுமல்லாது சந்தைப்படுத்தல், மதிப்புக்கூட்டல் என்ற தலங்களிலும் இதே கம்பெனிகள்தான் பின்னணியில் இயங்குகின்றன. ஆகவே கம்பெனிகளுக்கு நட்டம் என்ற நிலை ஏற்பட வாய்ப்பேயில்லை. தொழிலாளருக்கோ நுகர்வோருக்கோ எவ்வித இலாபமுமில்லை. 

உள்நாட்டில் ஒரு தனிநபர் சராசரி வருடமொன்றிற்கு 1.33 கிலோ தேயிலையை நுகர்கின்றார். இலங்கையின் சனத்தொகை 21 மில்லியன் என எடுத்துக்கொண்டால் 279,300,000 (28 மில்லியன்) கிலோ தேயிலை வருடமொன்றிற்கு விற்பனையாகின்றது. இதன்படி ஒரு கிலோ ரூபா 600 வீதம் எதுவித வரியுமின்றி விற்கப்படுவதன் மூலம் வருடத்திற்கு 16.800 மில்லியன் ரூபா வருவாயாக பெறப்படுகின்றது. மொத்த தேயிலை உற்பத்தியில் இது 10 வீதமும் இல்லை. மிகுதி 90 வீதமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
 
ஏற்றுமதி வருமானம்

2014ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இதில் தேயிலை மூலமாக 1.7 பில்லியன் அமெரிக்க டொலரும், 35 வீதம் இறப்பர் மூலம் 460 மில்லியன் அமெரிக்க டொலரும், 65வீதம் உள்நாட்டு தெங்கு பொருட்கள் மூலம் 538 மில்லியன் அமெரிக்க டொலரும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. இதைத் தவிர குத்தகைக்கு காணி வழங்கல், இரத்தினக்கல் அகழ்வதற்கு குத்தகைக்கு விடுதல், மரங்களை விற்பனை செய்தல், போன்ற பல்வேறு வழிகளிலும் வருமானத்தை தேடுகின்றனர்.

அதுமட்டுமல்ல சாலை ஓரங்களில் தேயிலை நிலையங்களை அமைத்து தேநீர், தேயிலை என வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்திலேயே தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக ஒரு முகாமையாளர் கூறினார். ஆகவே நஷ்டத்தில் இயங்குகின்றோம் என்று அங்கலாய்ப்பதில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
 
விடுமுறை நாட்கள்

இலங்கையில் கூடிய நாட்கள் வேலை செய்து குறைந்த சம்பளம் பெறும் ஒரு சமூகமொன்று உள்ளதென்றால் அது மலையகத் தொழிலாளர்களேயாவர். வருடத்திற்கு 4 நாட்கள்தான் சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படுகின்றது. இதைத் தவிர ஆகக்கூடிய வேலை நாட்களுக்கு 17 நாட்கள் சம்பளத்துடன்கூடிய போனஸ் விடுமுறை வழங்கப்படுகின்றது. பொதுத் துறையினருக்கு 171 நாட்கள் விடுமுறையும், தனியார் துறையினருக்கு 119 நாட்கள் விடுமுறையும் மாதச் சம்பளத்துடன் அளிக்கப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளருக்கு ஆகக்கூடியது 21 நாட்கள்தான் சம்பளத்துடன்கூடிய விடுமுறை உரித்தாகின்றது. 347 நாட்கள் வேலைக்கு செல்லும் கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. கடின உழைப்பை பொறுத்தவரை ஒரு மனிதனால் 300 நாட்களுக்குகூட முழுமையாக ஈடுபட முடியாது.
 
ஒன்றரை நாட்சம்பளம்

ஒரு சில மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் போயா, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வேலை வழங்கப்படுகின்றது. ஏனைய நாட்களில் 18 கிலோ பறிக்க வேண்டியவர்கள் இத்தினங்களில் 25 கிலோ கொழுந்தெடுக்கவேண்டும். எடை போடும்போது 6 கிலோ கழிக்கப்பட்டால் மொத்தம் 31 கிலோ கொழுந்தெடுக்கவேண்டும். அடிப்படைச் சம்பளம் 450 உம் அதனுடன் அந்தச் சம்பளத்தின் பாதியும் சேர்த்து ரூபா 675 கொடுக்கப்படுகின்றது. வேறு கொடுப்பனவுகள் இதனுடன் சேர்க்கப்படுவதில்லை.

இந்த நாட்களில் இவர்கள் 7.75 கிலோ கறுப்புத் தேயிலையை பெற்றுக்கொடுக்கின்றனர். இதன்மூலம் நிறுவனத்திற்கு ஒருவர் 4650 ரூபாவை ஈட்டிக்கொடுக்கின்றார். மேதின போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட 8 மணித்தியால வேலை, ஞாயிறு ஓய்வு போன்ற நன்மைகளை இழப்பது பற்றி தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். மே தினத்தன்றும் வேலைக்குப் போவது அவர்களின் உரிமையை கேளிக்குள்ளாக்குகின்றது என்பது பற்றியும் அவர்கள் சிந்திக்கவேண்டும்.
 
மேலதிக கொழுந்து

வருமானத்தை கூட்டுகின்றது என்ற எண்ணத்தில் மேலதிகமாக கொழுந்தெடுக்கும் தொழிலாளருக்கு ஒன்று புரிய வேண்டும். வழக்கமாக பெயருக்கு எடுக்கும் கொழுந்துக்கு (18 கி) ரூபா 620 கிடைக்கின்றது. அதன்படி ஒரு கிலோவிற்கு 34.4 ரூபா கிடைக்கின்றது. மேலதிக கிலோவிற்கு ரூபா 20 கிடைக்கின்றது. இதனால் ஆதாயம் பெறுவது கம்பெனிகள்தான். உழைப்பு சூறையாடப்படுவதேயன்றி ஊதியம் அதிகரிப்பதில்லை. புதிய சம்பள ஒப்பந்தத்தில் மேலதிக கிலோவிற்கு 40 ரூபா வழங்கப்படவேண்டும்.
 
ஒப்பந்தங்கள் தேவையா?

சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்வாங்கப்பட்டுள்ளது. 80 வீதமான தொழிலாளர்களால் இதைப் பெற முடிவதில்லை. இதனால் கம்பெனிகளுக்கே ஆதாயமாகும். அத்துடன் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த ஒப்பந்தத்தில் உள்வாங்கப்படுவதில்லை. இதனால் தொழிற்சங்க பிளவுகளும் அவற்றிற்கு இடையே முரண்பாடுகளும் ஏற்படும். தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்துப்போகின்ற நிலைமைக்கும் இது வித்திடுகிறது. ஆகவே இந்த தேவையற்ற அநீதியான முறைமையை தொடர்வது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகவேயிருக்கும். 

தொழிலாளர்கள் இன்று தங்களுக்கு 800 ரூபா அடிப்படைச் சம்பளமும் வாழ்க்கைச் செலவு புள்ளியை மீண்டும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இம்மாதத்திற்குள் இந்த கோரிக்கை உள்வாங்கப்பட்டு தீர்வுகாணப்படாவிட்டால் போராட்டங்களில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் சம்பள ஒப்பந்தங்களுக்கு தேவையிருக்காது. விலைவாசி உயரும்போது சம்பளமும் தானாக கூடும்.
 
அரசாங்கம்

நல்லாட்சி, வெளிப்படையான செயற்பாடுகள், கணக்கு காட்டுதல் எனக்கூறிவரும் அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினையில் தலையிட வேண்டும். ஆரம்பத்தில் 19 வீதமான தங்கள் பங்குகளை அரசாங்கம் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது 100 வீதமான பங்குகளை அநேகமான கம்பெனிகள் தம்மகத்தே வைத்துக்கொண்டுள்ளன என்பதுதான் உண்மை. ஆகவே பெருந்தோட்ட சட்டபூர்வமான அதிகாரச் சபை ஒன்றை நிறுவி கம்கெனிகள் கூறும் நட்டம் உண்மையானதா என்று ஆராய வேண்டும். 

இந்தக் கம்பெனிகள் தங்கள் அங்கத்துவ கம்பெனிகளுக்கு கொடுக்கும் நிருவாக முகவர் கட்டணம் எவ்வளவு? உயர் மட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கும் சலுகைகளும் (வாகனம், பங்களா,வெளிநாட்டுப்பயனங்கள்) சம்பளமும் எவ்வளவு என்பது தொழிலாளருக்கத் தெரியாது. இவை உற்பத்திச் செலவில் காட்டபபடுகின்றது. அதனால் உற்பத்திச் செலவு அதிகரித்தும் இலாபம் குறைக்கப்பட்டும் காட்டப்படுகின்றது என்பதும் அவர்கள் அறியாத ஒன்று. குறுந்தோட்டத் தொழிலாளருக்கு இந்தச் செலவுகள் எதுவுமில்லை.
 
அணுகுமுறையில் மாற்றம் 

 பெருந்தோட்டத்துறையை தக்கவைப்பதானால் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். ஒரு குடும்பத்திற்கு 1ஹெக்டயர் வீதம் 35 வருட குத்தகை அடிப்படையில் தேயிலைக் காணிகள் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலமாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலமாக தற்போது ஒரு ஹெக்டயருக்கு 1300 கிலோ உற்பத்தியை 3000ம் கிலோவாக அதிகரிக்க முடியும். வேற்றுக் காணிகளில மாற்றுப் பயிர்களை பயிர் செய்ய முடியும். 

தனிப் பணப்பயிர் நாட்டில் கால நிலை மாற்றத்துக்கு ஏதுவாகின்றது. அதுமட்டுமல்ல மேல் மண் அரிப்புக்கும் வித்திடுகிறது. இதனால் பாரிய மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் தோன்றுகிறது. பாரிய அளவில் பயன்படுத்தும் கிருமிநாசினிகள், இரசாயன கலவைகள் மண் வளத்தைக் குறைப்பதுடன் நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றது. ஆகவே சிறு தோட்டங்களின் நிருவாக அமைப்பு முறையை அமுல்படுத்தி சம்பளம் முதல் அனைத்து இயற்கை அனர்த்தங்களில் இருந்தும் விடுபட முடியும். 

இது தொடர்பான விழிப்புணர்வை தொழிலாளருக்கு வழங்குவதும் கூட்டுறவு அமைப்பு முறையில் பயிற்சி அளிப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது. நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் வரை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இழுத்தடிக்கப்படு​ேமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி நடக்குமானால் தொழிலாளர் வெளியிடங்களுக்கு வேலைக்காக செல்லும் நிலையில் அதிகரிப்பு ஏற்படும். 

ஒரு கால கட்டத்தில் வேலைக்கு ஆளே இல்லாத நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் இதில் உடனடியாக தலையிட்டு எதிர்வரும் மாத்திற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். முன்பிருந்தது போல் முக்கூட்டு ஒப்பந்தமாக, தொழிலாளரின் அருமையையும் காணியின் பெருமையையும் உணர்ந்த ஒப்பந்தமாக வெளிவர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியும்

$
0
0
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும். அதனை மறுக்­கின்ற அல்­லது 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்க முடி­யா­தென்றும் தோட்­டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் என்றும் பெருந்­தோட்டக் கம்­ப­னிக்­கா­ரர்கள் கூறு­வார்­க­ளே­யானால் தோட்­டங்­களை ஒப்­ப­டைத்­து­விட்டு தாரா­ள­மாக அவர்கள் வெளியேறிச் செல்­லலாம் என்று உயர் கல்வி, நெடுஞ்­சா­லைகள் போக்­கு­வ­ரத்து அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல புஸல்­லாவை நக­ரத்தை அண்­மித்த பிர­தே­சங்­களில் நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்கும் அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் தொடர்­பா­கவும் புதிய பாதை­க­ளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும்  இடம்­பெற்­ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே  தெரி­வித்தார். இங்குமத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ். இரா­ஜ­ரட்ணம், நகர வர்த்­த­கர்கள், பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர். அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்கு தோட்டக் கம்­ப­னி­க­ளுக்கு வச­தி­களும் போதிய பணமும் இருக்­கின்­றது. ஆகவே 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும்.
 
அதனால் தொழி­லா­ளர்­களின் காலத்­தையும் நாட்டின் காலத்­தையும் வீணாக்­காமல் கட்­டாயம் 1000 ரூபா சம்­ப­ளத்தை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று கம்­ப­னி­க­ளுக்கு கூறு­கிறேன். தற்போது தோட்­டங்­களை குத்­கைக்கு பெற்று முறை­யாக நிர்­வ­கித்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பளம் வழங்க தயா­ரான நிலையில் பல நிறு­வ­னங்கள் போட்டி போட்­டுக்­கொண்டு இருக்­கின்­றன. அவர்­களைக் கொண்டு தோட்­டங்­களை நிர்­வ­கித்து தோட்ட மக்­களின் வாழ்­வா­த­ாரத்தை உயர்த்த முடியும். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும். அதனை மறுக்­கின்ற அல்­லது 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்க முடி­யா­தென பெருந்­தோட்டக் கம்­ப­னிக்­கா­ரர்கள் கூறு­வார்­க­ளே­யானால் தோட்­டங்­களை கொடுத்­து­விட்டு தாரா­ள­மாக வீடு செல்­லலாம். 
 
நாட்டில் நல்­லாட்சி நடை­பெ­று­வதால் ஊட­கங்­க­ளுக்கு தற்­போது செய்­திகள் இல்லை. முன்னர் அப்­படி அல்ல. தினந்­தோறும் கடத்­தல்கள், கொலைகள். வெள்ளை வேன் கலா­சாரம் என அனைத்தும் இருந்­தன. அப்­போது செய்தி இருந்­தது. தற்­போது அவை இல்லை. 1977 ஆம் ஆண்டு கிளி­நொச்­சியில் விஞ்­ஞான பிரி­விற்­கான பல்­க­லை­க்க­ழக பிரிவு அமைப்­ப­தற்கு அடிக்கல் நாட்டப்­பட்டு 30 வரு­டங்­க­ளுக்கு பின் 2015 ஆம் ஆண்டே திறக்­கப்­பட்­டது. 
 
பல்­க­லை­க்க­ழகம் அமைத்து திறக்க 30 வரு­டங்­க­ளுக்கு மேல் காலம் செல்ல காரணம் யுத்தம் இடம்பெற்று வந்தமையாகும். இதனால் இளைஞர், யுவதிகள் பலர் இறந்துள்ளனர். இவ்வாறான நிலைமைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாகவே ஜனாதிபதியும் பிரதமரும் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் புதிய நாட்டை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

நன்றி- வீரகேசரி
 

தோட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

$
0
0
கொத்­மலை எல்­பொடை தோட்டத் தொழி­லா­ளர்கள் நேற்று திங்­கட்­கி­ழமை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்­கையை குறைக்கும் நட­வ­டிக்­கையை கண்­டித்தே இப் பணிப் பகிஷ்­க­ரிப்பு இடம்­பெற்­றது. எல்­பொடை தோட்டம் நான்கு பிரி­வு­களைக் கொண்ட ஒரு தோட்­ட­மாகும். இத்­தோட்­டத்தின் பரப்பும் அதி­க­மா­னது. இங்கு ஒரு தோட்டப் பிரிவில் 5 தொடக்கம் 6 உத்­தி­யோ­கத்­தர்கள் ஏற்­க­னவே கட­மை­யாற்­றி­யுள்­ளனர். எனினும் அண்மைக் கால­மாக உத்­தி­யோ­கத்தர் குறைப்பு கணி­ச­மாக இடம்­பெற்­றது. இதன் கார­ண­மாக தோட்­டங்களை பரா­ம­ரிப்­பது முதல் நிர்­வாக ரீதி­யான செயற்­பா­டுகள் வரை அனைத்து மட்­டங்­க­ளிலும் திருப்­தியற்ற நிலைமை மேலெ­ழுந்­துள்­ளது.
 
மேலும் தேயிலைச் செடிகள் முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாமை கார­ண­மாக உற்­பத்தி வீழ்ச்சி நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் சில தேயிலை மலைகள் காடாக இருப்­ப­தா­கவும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து சுட்­டிக்­காட்­டு­கின்றார். அத்­தோடு கம்­ப­னி­யி­னரின் சில முறை­யற்ற போக்­குகள் எல்­பொடை தோட்­டத்தின் எதிர்­கா­லத்தை கேள்விக் குறி­யாக்கி இருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரிவிக்­கின்றார்.
 
தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதன் கார­ண­மாக தாம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­வ­தாக தொழி­லா­ளர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இதனால் பாரிய பின்விளை­வுகள் ஏற்­படும் என்­பதும் அவர்­களின் கருத்­தாக உள்­ளது. இந்­நி­லையில் தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதை கண்­டித்து தொழி­லா­ளர்கள் காலை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். இந்­நி­லையில் இ.தொ.கா. வின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து தோட்ட நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டார். இப் பேச்­சு­வார்த்­தையின் போது விரைவில் கம்­ப­னி­யி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தாக தோட்ட நிர்­வாகம் செல்­ல­முத்­து­விடம் உறு­தி­ய­ளித்­தது. இதனை தொடர்ந்து பணிப் பகிஷ்­க­ரிப்பு கைவி­டப்­பட்­டது. தோட்ட நிர்வாகம் தோட்ட உத்தியோகத்தர்களின் வெற்றிடத்தை விரைவில் உறுதியளித்தவாறு நிரப்பவில்லையாயின் எதிர்காலத்தில் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மெத்தகந்த தோட்ட மக்களுக்கு பலவந்தமாக காணிகள்

$
0
0
பலாங்கொடை மெத்தகந்த தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் அமைத்துகொடுத்தக்கப்படவுள்ள வீடுகளுக்கு தோட்ட நிர்வாகம் காணிகளை ஒதுக்கி கொடுப்பதற்கு முன்வராவிட்டால் அத்தோட்டத்திலே பலவந்தமாக காணிகளை பிரித்துகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். 

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், இரத்தினபுரி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலாங்கொடை பிரதேச செயலாளர் சம்பிக நிரோஷ் தர்மபால, 'மெத்தகந்த  தோட்டத்தில் மண்சரிவால பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் அவர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான போதிய காணிகளை மேற்படி தோட்ட நிர்வாகம் வழங்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க முடியாதுள்ளது'என்றார்.   

'மேற்படி தோட்டத்தில் போதிய காணிகள் கிடைக்குமாக இருந்தால் விரைவில் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும். எனவே காணிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று  அவர் கூறினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே  சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மஹிபால ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'தோட்ட மக்கள்  வியர்வை சிந்தி, அரும்பாடுபட்டு கம்பனிக்கு இலாபத்தை பெற்று கொடுக்கின்றார்கள். ஆபத்தான நிலைமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம்  முன்வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடையூராக உள்ளன. 

குறிப்பாக தோட்ட மக்கள் தமக்கான மலசலகூடங்களை அமைத்துகொள்வதென்றாலும் அதற்கான இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை என நான் அறிந்துகொண்டேன். பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தோட்ட தொழிலாளர்களும் மனிதர்கள்தான். அவர்களின் முன்னேற்றத்துக்கு தோட்ட நிர்வாகம் தடையாகவுள்ளது.   தோட்ட மக்கள் குறித்து தோட்ட நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை. இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வராவிட்டால் மக்களால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் என்ற வகையில்,  மெந்தகந்த தோட்ட மக்களுக்கு அந்த தோட்டத்திலே காணிகளை பலவந்தமாக பெற்றுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்'என அவர் கூறினார்.

மலையக பல்கலைக்கு கெட்டப்புலாவில் காணி

$
0
0
புதிய ஆட்சியில், மலையகத்தின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கவும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகக் கல்லூரியை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாவலபிட்டி, கெட்டபுலா தோட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றை நிர்மாணிப்பாதற்காக 5 ஏக்கர் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நுவரெலியா மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான மாணவர்கள், ஆங்கில மொழியில் கல்வி கற்பதற்காக புதிய பாடசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. 2016 தொடக்கம் 2020ஆம் ஆண்டுக் காலத்துக்கான புதிய கல்விக்கொள்கையில், மலையகக் கல்வி அபிவிருத்தி தொடர்பில் தேசிய கல்வி நிறுவனம் புதிய நடைமுறைகளையும் அதற்கான பிரிவையும் ஆரம்பிக்கவுள்ளது'என்றார். 'அதேபோல் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு, ஆளனி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்தரத்தில்  கணித, விஞ்ஞானப் பிரிவுகளை அபிவிருத்தி செய்யவும் அதற்கான ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்தாக அவர் மேலும் கூறினார்.

சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டும்

$
0
0
மலையக இளைஞர் - யுவதிகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் - யுவதிகளும் ஒன்றிணைந்து, உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டுமெனவும் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலவிய யுத்தம் காரணமாக நாம் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எமது மக்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலை அன்று இருந்ததன் காரணமாக நாங்களும் மிகுந்த பயத்துடன் வாழக்கூடிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினோம்'என்றார். 'தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மலையக இளைஞர், யுவதிகளையும் வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்து, அதன்மூலம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு முன்வரவேண்டும். 

மலையக இளைஞர்களுடைய பிரச்சினைகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுடைய பிரச்சினைகளும் வேறுபட்டவை. ஆனாலும், நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டால் அனைத்துவிதமான விடயங்களையும்; வெற்றிகொள்ள முடியும்.  நாங்கள் தற்போது சமூக ரீதியாக ஒன்றுபட்டு செயற்படுகின்ற நிலைமை உருவாகியுள்ளது. அதனால், வடக்கு - கிழக்கு இளைஞர்களை இணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.மலையக இளைஞர்களை ஒன்றிணைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்'என்றும் அவர் கூறினார்.  '

மலையகத்தை பொறுத்த வரையில் எமக்கு கல்வி ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. மலையகத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான குறைபாடுகள் நிலவுகின்றன. அவ்வாறான விடயங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து எமக்கு உதவி செய்ய முடியும். இந்த நாட்டில் நாம் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும்; செயற்பட்டால்  மாத்திரமே எமது இலக்கை அடைய முடியும். மலையகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்பு தற்போது ஓர் அமைப்பாக அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். 

எதிர்காலத்தில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் கனிந்து வருகின்றது. அதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே, எதிர்கால எமது இளைஞர்கள் ஒற்றுமையாக செயற்படுவதற்காக நாம் இன்று அதற்கான அடித்தளத்தை இடவேண்டும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழு ஒத்துழைப்பையும் எமக்கு வழங்க வேண்டும்'என அவர் கூறினார்.

பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தீ விபத்து

$
0
0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இன்று பிற்பகல்  12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.
பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹேவா­ஹெட்­டையில் மண்­ச­ரிவு

$
0
0
அங்­கு­ராங்­கெத்த ஹேவா­ஹெட்டை தோட்­டத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை ஏற்­பட்ட பாரிய மண்­ச­ரிவு, தாழி­றக்கம் மற்றும் பாறைகள் புரண்­டதன் கார­ண­மாக 25 தொழி­லாளர் குடும்­பங்­களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்­கப்­பட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

சுமார் ஐந்து ஏக்கர் நிலப்­ப­ரப்பில் இவ்­வாறு நிலத்­தா­ழி­றக்கம், மண்­ச­ரிவு, வெடிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­துடன் மலை­யி­லி­ருந்து கற்­களும் புரண்டு கொண்­டி­ருக்­கின்­றன. சீரற்ற கால­நி­லை­யுடன் தொடர்ச்­சி­யாக மழை பெய்­வதன் கார­ண­மா­க இடம்­பெ­யர்ந்த மேற்­படி 65 பேரும் ஹேவா ஹெட்டை விவே­கா­னந்தா தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நேற்­று­முன்­தினம் வியா­ழக்­கி­ழமை பாரிய சத்­தத்­துடன் பாறை ஒன்று உருண்டு வந்­ததைத் தொடர்ந்து நேற்­றைய தினமும் பாராங்­கற்கள் வரத் தொடங்­கின. இதே­நேரம் மண்­ச­ரிவும், நில­வெ­டிப்பும், நிலத்­தா­ழி­றக்­கமும் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்­தி­ருந்­த­ன.
நிலை­மை­யு­ணர்ந்து உட­ன­டி­யாக செயற்­பட்ட தோட் ட முகா­மை­யாளர் மக்­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார். கிராம உத்­தி­யோ­கத்தர் வி. நந்­த­குமார் மற்றும் அங்­கு­ராங்­கெத்த பிர­தேச செயலாளர் பரதிப் சும­ன­சே­கர உள்­ளிட்டோர் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அவ­சர அவ­சிய உத­வி­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதே­வேளை சம்­பவ இடத்­திற்கு வரு­கை­தந்­தி­ருந்த இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் கண்டி உப.தலைவர் சின்­னையா வேலு மற்றும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் மானில பிரதிநிதி கறுப்பையா ராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் நிலைமைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அங்கு தொடர்ந்தும் சீரற்ற காலநிலையே காணப்பட்டு வருகின்றது.
Viewing all 376 articles
Browse latest View live