Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all 376 articles
Browse latest View live

தொழிலாளர்களுக்குரிய 100 கோடி ரூபா கோரி சட்ட நடவடிக்கை

$
0
0
அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சுமார் 100 கோடி ரூபாவை கோரி சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சருமான முத்துசிவலிங்கம் பி.பிசிக்கு தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபநிதி, மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன கடந்த 10 முதல் 15 வருடத்துக்கு மேலாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளன. 

அரசின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் கீழ் இயங்கும் இந்தத் 15 தோட்டங்களும் முறையாக இயங்காதபடியாலேயே தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் வைப்பிலிடப்படாமல் இருந்துள்ளதாக முத்து சிவலிங்கம் குறிப்பிடுகிறார். 

கண்டி, ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை முன்மாதிரியாகக் கொண்டு, ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்து சுமார் 100 கோடி ரூபா அளவான தொழிலாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கிறது

இதேவேளை, அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான, பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் முத்து சிவலிங்கம்  அவ்வாறு இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மலையகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கக் கூட்டணியில் நீண்டகாலமாக பங்காளிக் கட்சியாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ; ரூபா பெருநாள் முற்பணம் வழங்க வேண்டும்- ஆர். யோகராஜன்

$
0
0
சம்பள உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்காக பத்தாயிரம் ரூபாய் பெருநாள் முற்பணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். 

2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பெருந் தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நாட் சம்பளமாக 405 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்கு பெருநாள் முற்பணமாக 4500 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இன்று தோட்டத் தொழிலாளி ஒருவர் 620 ரூபாய் நாட் சம்பளம் பெறுகிறார்கள். எனவே, அவர்களுக்கு ஏன் பத்தாயிரம் ரூபாய் முற்பணம் வழங்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே பெருந்தோட்டத் தொழிலாளிகளின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு 405 ரூபாவாக இருந்த நாட் சம்பளம் 2011 ஆம் ஆண்டு 515 ரூபாவாகவும் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி 620 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டது. எனவே 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 53 சதவீத சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளிகளின் 53 சதவீத சம்பள அதிகரிப்பிற்கேற்ப 7500 ரூபாய் பெருநாள் முற்பணத்தினை வழங்கலாம். ஆனால், அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கமையவே பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன்.

கடந்த ஏப்ரல் மாதம் அவசர அவசரமாக கூட்டு ஒப்பந்தத்தினை மேற்கொண்டவர்கள் இந்த தீபாவளி முற்பணத்தினை தற்போதைய கால சூழலுக்கேற்ப பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென புரியவில்லை.

மலையகத்தில் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்த கடும் மழையினால் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தையே அந்த மாதங்களில் பெற்றனர். ஆகையால், அப்போது அவர்கள் கடன்களைப் பெற்று தமது செலவுகளை சமாளித்தனர். இவ்வாறான நிலையில் பெருநாள் முற்பணமும் குறைவாக கிடைத்தால் அவர்களால் தீபாவளியை கொண்டாட முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி- வீரகேசரி

திட்டமிடப்பட்ட கருத்தடைகளை தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் - லோரன்ஸ்

$
0
0
மலையகத்தில் சனத்தொகை அதிகரிப்பு அண்மை காலமாக குறைவடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 1.7ஆக உள்ள நிலையில் மலையகத்தில் இது 0.7 வீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையகத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்கும் அம்மக்களின் இருப்பினை சீர்குலைப்பதற்கும் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அபிவிருத்தி எனும் பெயரில் மக்களை இடம்மாற்றுதல் திட்டமிட்ட குடியேற்றங்களை தாபித்தல் என்பன அவற்றுள் சிலவாகும். இதனடிப்படையில் கட்டாய கருத்தடை திட்டமும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக பெண்களின் விருப்பமின்றி சில இடங்களில் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அறிய முடிகின்றது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நடவடிக்கைக்கு துணை போகின்றமையானது வருந்தத்தக்க விடயமாகும். ஆசை வார்த்தைகளைக் கூறி அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி மலையக பெண்களை கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கி வரும் செயல் ஒரு மனித உரிமை மீறலாகும். அதிகமானோர் கருத்தடை செய்து கொள்வார்களானால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடுகின்றன. சொந்த நலன்களுக்காக ஒரு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

கட்டாய கருத்தடையின் காரணமாக பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுகின்றன. எனினும் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் அலட்சிய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர். பிரச்சினையின் உக்கிர தன்மையை அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டாயக் கருத்தடையின் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.





வரவு–செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் -ஆ. முத்துலிங்கம்

$
0
0
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆ. முத்துலிங்கம் தெரிவித்துள்ளார். 

அது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி, மற்றும் வீட்டுரிமை தொடர்பான விடயத்தினை அதி முக்கிய கோரிக்கையாக முன்வைத்து மலையக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தங்கை கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் எத்தகைய தயக்கத்தினை காட்டாமல் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். 

இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசும் தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் பாகுபாட்டையும் புறக்கணிப்பையுமே மேற்கொண்டு வந்திருக்கின்றது. இந்த நாட்டின் மேம்பாடுகளை கருத்திற்கொண்டு பெருமளவிலான அந்நிய செலாவணியை தோட்டத் தொழிலாளர்களே பெற்றுக்கொடுத்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு உரிய இடத்தை இந்த நாட்டை ஆட்சி செய்த அரசுகள் வழங்கவில்லை. 

அண்மைக்காலமாக ஏழு பேர்ச் விஸ்தீரணமுள்ள காணியில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட போதும் அவ்வீடுகளுக்கான உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அப்பிரச்சினை தொடர் கதையாக நீண்டு செல்கிறது. 

கடந்த வருடம் ஜனாதிபதியினால் முன்ழொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மலையகப் பெருந்தோட்டங்களின் 35 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியினால் கூறப்பட்டது. 

இந்த விடயமாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்கு சமர்ப்பித்த மகஜரில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குல நிலம் தானும் சொந்தமாக இல்லாதுள்ளது. ஆகையினால் பகிர்ந்தளிக்கப்படும் தரிசு நிலங்களில் தோட்டத் தொழிலாளர்களையே உள்ளடக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கின்றோம். 
கடந்த மத்திய மாமகாண சபைத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி காணி மற்றும் வீட்டுரிமை விடயத்தில் தோட்டத் தொழி;லாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென்று தனது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றி வைக்கும் வகையில் நுவரெலியா பெருந்தோட்ட மக்கள் தமது வாக்குகளினால் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியுள்ளனர். 

பெருந்தோட்டங்களின் எதிர்காலம் கேள்விகுறியாக இருக்கும் இவ்வேளையில் தொழிலாளர்களின் காணி மற்றும் வீட்டுரிமை கோரிக்கையானது உறுதிப்படுத்தப்படல் வேண்டும். 
ஆகையினால் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கவாதிகள் அனைவரும் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு பூரண அழுத்தங்களை கொடுக்க வேண்டும். அதன் மூலம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்ட அறிக்கையில் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான விடயம் உள்ளடக்கப்படல் வேண்டும். ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியில் பங்காளிகளாக இருக்கும் மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் மேற்படி விடயங்கள் தொடர்பாக கூடிய அக்கறை காட்ட வேண்டும். இது தொடர்பாக தொழிலாளர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும் என்றார்.

Article 0

$
0
0
அரசாங்கம் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாண தமிழ்க் கல்வி அமைச்சினை பறித்து விட்டது 

மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகளை கட்டிக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் மேடைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். ஆனால் தேர்தல் முடிந்ததும் மத்திய மாகாண தமிழ் கல்விக் அமைச்சு பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் இரட்டை வேடம் தெட்டத் தெளிவாகியுள்ளது  ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
 பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மலையக மக்களின் வாக்குகளை வெற்றிலைச் சின்னத்திற்கு திசை திருப்பிக்கொண்ட இந்த அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியினால் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாண தமிழ்க் கல்வி அமைச்சினை பறித்து அவர்களை அவமதித்துள்ளது. எனவே மக்கள் இந்த அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை உணர்ந்து எதிர்வரும் தேர்தல்களில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர் 

இது தொடர்பாக ரவி கருணாநாயக்கா மேலும் கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி சகல இன மக்களும் பயன் பெறும் வகையில் எவ்வித பாரபட்சமும் இன்றி அதனை செயற்படுத்தியது குறிப்பாக மலையக மக்களின் நலன்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் செவிமடுத்து மதிப்பளித்தது. அதன் விளைவாகவே தமிழ்க் கல்வி அமைச்சென்ற ஒன்றை உருவாக்கி ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதனை தமிழர்களுக்கு வழங்கியது.

இவ்வாறு மலையக தமிழர்களை மதித்து அவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சின் ஊடாக அவர்கள் கணிசமான முன்னேற்றத்தினையும் அடைந்துள்ளார்கள் என்பதை யாவரும் அறிவர். ஆனால் இந்த அரசாங்கம் அந்த அமைச்சினை பறித்து தந்திரோபாயமாக தமது காய் நகர்த்தலை மேற்கொள்கிறது.

மலையக மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு அமோக ஆதரவளிப்பவர்கள். எனவே அவர்களின் மனோநிலையை நன்கு அறிந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியோரின் தேர்தல் பிரசார மேடைகளில் ஏறி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அதன் மூலமாக மத்திய மாகாண தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு திசை திருப்பப்பட்டன.

இவ்வாறு ஜனாதிபதி பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கியமையினாலேயே இம்முறை மத்திய மாகாணத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஒன்பது தமிழ் உறுப்பினர்களுக்கும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

தமது நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பிலேயே இம்முறை மலையக மக்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் அரசாங்கம் வெற்றி பெற்றதும் தமது சுயரூபத்தை காட்டியுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவது இந்த அரசாங்கத்துக்கு புதிதான விடயமல்ல. ஆனாலும் இம்முறை மலையக மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு புதிய யுக்தியை கையாண்டிருக்கிறது அவ்வளவுதான். எனவே மலையக மக்கள் மீண்டும் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாறக்கூடாது.

நாட்டின் தேசிய பிரச்சினை விடயத்தில் இதே விதமான செயற்பாட்டினையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வினை வழங்கத் தயார் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது 13ஆம் திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை கூட பறிப்பதற்கே முயற்சிக்கிறது.

இவ்வாறு கபடத்தனமாக செயற்பட்டு வரும் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்கோ வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கோ எவ்வித நன்மையும் செய்யப்போவதில்லை என தெரிவித்தார்

மலையகத்திலிருந்து அரச நிர்வாக சேவையில் உள்வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு – வாமதேவன்

$
0
0
பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கென ஒரு அமைச்சு ஆணை கொண்டதாக இருக்கும்போது அந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்ததுறைக்கென செலவழிக்கப்படும். பொதுவான அமைச்சுகளின் வரவு செலவு திட்டங்களில், வேலைத்திட்டங்கள் தோட்டப்புற பள்ளிக்கூடங்கள், தோட்ட சுகா தாரம், தோட்ட வீடமைப்பு என குறிப்பிடப் பட்டு நிதி ஒதுக்கப்பட்ட வேண்டும். உதாரண மாக நீர் வழங்கல் வடிக்காலமைப்பு அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் சபையில் தோட்டத்துறைக்கான தனியான ஒதுக்கீடுகள் இல்லை. இதனால் அந்த அமைச்சின் நடவடிக்கைகள் தோட்டப்புறங்களை முறையாக போய்ச் சேருவதில்லை.

தோட்டத்துறையின் அபிவிருத்திக்கென ஒரு அமைச்சு இல்லாத நிலையில் ஏனைய தொடர்புடைய அமைச்சுகளின் வரவு செலவு திட்டங்களில், தோட்டத்துறைக்கென்று ஒதுக்கீடுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும். அப்போதுதான். தோட்டத்துறையின் சமூக அபிவிருத்திக்கு இந்த ஆண்டு இவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என மதிப்பிடமுடியும்.

அமைச்சு ஒன்று இல்லாத நிலையில் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் ஆகியன தற்போது கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படு கின்றன. டிரஸ்ட் நிதியமானது, தோட்டத் துறையின் வீடமைப்பு, நீர் சுத்திரிகரிப்பு வசதிகள், சிறுவர் பராமரிப்பு, சுகாதாரம் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்து கின்றது. தொலை நோக்காக தோட்டங்களில் வாழ்க்கைத் தரத்தினை தொடர்ச்சியாக முன்னேற்றுவதற்காக நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை சிறப்பான முறையில் வழங்குவதன் மூலம் தலைமை அபிவிருத்தி தாபனமாக விளங்குகிறது. தோட்ட முகாமைத்துவ தொழிற்சங்கம் அரசாங்கம் ஆகிய முத்தரப் பினரின் பிரதிநிதிகளின் வழிகாட்டலில் நிதிப்பற்றக்குறை காரணமாக மட்டுப்படுத் தப்பட்ட சேவைகளை மேற்கொள்கின்றது.

2005ம் ஆண்டின் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என அரசாங்கம் மற்றும் அமைச்சு, தொண்டமான் குடும்பப் பிரதிநிதிகளின் மேற்பார்வையில் பாராளுமன்ற சட்ட மூலமாக ஞாபகார்த்த மன்றம் நிறுவப்பட்டது. அட் டனில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலை யம், நோர்வூட் நகரில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், றம்பொடையில் அமைந்துள்ள கலாசார மண்டபம், என்பவை இம்மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தோடு அது பிரஜா சக்தி மற்றும் நவசக்தி என்ற பெயரில் செயற்றிட்டங்களை சில தோட்டங்களில் செயற்படுத்தி வருகின்றது. ஏறக்குறைய ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் ரூபா கால்நடை அமைச்சிலிருந்து பெறப்பட்டு, இச்செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்து கின்றன.

அத்தோடு பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றன. அதேபோல உள்ளூர் நிறுவனங்களான பிரிடோ, முன்பள்ளிக்கூட அபிவிருத்தி, கண்டி சமூக அபிவிருத்தி நிலையம், மற்றும் மனித அபிவிருத்தி தாபனம் போன்றவை மனித உரிமைகள், சமூக அணிதிரட்டல் மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களை வலுவூட்டல் போன்ற செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றன. இந்த வகையில் பாம் பவுண் டேசன், மொனராகலை மக்கள் அபிவிருத்தி நிலையம் போன்ற பல்வேறு தாபனங்கள், வாழ் வாதார பயிற்சி போன்ற துறைகளில் செயல் படுகின்றன. மலையக அபிவிருத்தி மன்றம் போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகளும், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் பல்வேறு அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றும் இந்த மக்கள் ஏனைய இனக்குழுக்களோடு சமத்துவ நிலையில் இருக்கிறார்கள் எனக் கூறமுடியாது. அபிவிருத்தி வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னைய வரலாற்றில் கிட்டத்தட்ட 30-40வருடங்களுக்கு பிந்தியே, உள்நுழைந்த காரணத்தினால், இவர்கள் குறித்து பொதுவான அபிவிருத்தி குறிக்காட்டிகளான வறுமை நிலை, போஷாக்கு, சுகாதார, கல்வி, சிறுவர் பெண்கள், பலவீனமான முதியோர் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை ஒப்பிடுகையில் ஏனைய சமூகத்தோடு இவர்கள் சமத்துவ நிலையில் இல்லை. தேயிலை இரப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட இச்சமூகம், நாட்டின் ஏனைய பகுதிக்கு திறனற்ற தொழிலாளர்களை வழங்குகின்ற ஒரு ஒதுக்காகவே காணப்படுகிறது.

உயர்கல்வியைப் பொறுத்தவரை பல்கலைக் கழக அனுமதி ஆண்டொன்றிற்கு 20- 25000 மாக அமைகையில், 5%அல்லது 7 கொண்ட மலையக மக்கள் 200 க்கும் குறைவான எண்ணிக்கையில் 1% வீதத்திற்கு குறைவானவதாவே அமைந்துள்ளது. இலங்கை யில் தங்களுக்கென்ற ஒரு பல்கலைக்கழகம் இல்லை என்று சமூகமாக இருப்பது, இந்த மக்களே. 10 ஆண்டு திட்டத்திலே இது குறித்து ஒரு சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என குறிக்கப்பட்டிருந்தாலும் அந்த நடவடிக்கை இன்னும் முன்னெடுக் கப்படவில்லை.

இங்கு இலவச உயர் கல்விக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை அடைந்த இயலுமையின் குறைவு என்றே அல் லது உரிமை மறுப்பு என்ற வகையில் பார்க்க வேண்டும். இந்த மக்களுக்காக பல்கலைக்கழகம் என்ற கோரிக்கையும் ஒரு உரிமை அடிப்படை யில் அணுகப்பட வேண்டும்.
அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்த நிலையில், அரச நிர்வாக மட்டத்தில், இம்மக்களின் ஈடுபாடு இல்லாமலிருப்பது கவனத்திற்கும் வேதனைக்குரிய ஒன்றாகும். சில விசேட ஏற்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கத்துறையில் சேர்க்கப்பட்ட பெருந் தோட்ட சமூக, தொடர்பாடல் வசதிப்படுத்தும் உத்தியோகத்தர் 300 பேரும் தபால் ஊழியர் 300 பேரும் கிராம சேவை உத்தியோகத்தர் 200 பேரும் என்ற எண்ணிக்கை தவிர சாதாரணமாக, பொதுப்பரீட்சை மூலமாக அரசாங்க துறைக்கு உள்வாங்கப்படுவோர் தொகை குறைவாகவே காணப்படுகின்றது. இந்த மக்களைச் சார்ந்த உயர் அரசாங்க உத்தியோகத்தர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. அமைச்சு செயலாளர்களாக இதுவரை இலங்கை நிர்வாக சேலையில், எத்தனை பேர் என்று தேட வேண்டிய நிலை? திட்டமிடல் சேவையில் மூன்று பேர் வெளிநாட்டு சேவையில் 3 பேர் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில், இன அடிப்படையில் ஆட் சேர்ப்பு கொள்கை காரணமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அபிவிருத்தி உரிமைகளை பொறுத்தவரை முக்கியமானதும், அடிப்படையாகவும் அமைந்துள்ளமை வீட்டுரிமையும், நிலவுரிமை யுமாகும். ஏனைய மக்கள் குழுக்களோடு ஒப்பிடுகையில் வீட்டுரிமை நிலவுரிமையற்ற வர்களாக இருப்பவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமானோர் இவர்களே. வீட்டுரிமை, என்பது தொழில் செய்யும் வரைக்கும் அனுபவிக்கக்கூடிய ஒன்றே. ஒரு குடும்பத்தில் ஒருவரேனும் தொழில் செய்யும் வரை வீட்டை சொந்தம் கொண்டாடலாம். ஒரு வரும் வேலை செய்யாத போது உரிமை மாற்றக் கூடிய உறுதி இல்லாமையே அடிப்படைப் பிரச் சினையாக காணப்படுகின்றது. வீட்டுக்கடன் பெற்று வீடுகளை கட்டி முடித்தவர்களுக்கும் இன்னும் உறுதிகள் வழங்காமலிருப்பது, ஓர் உரிமைப் பிரச்சினையாக சுட்டிக்காட்டப்படுகின்றது. வீட்டுரிமையோடு இணைந்தவொன்று வீடுகளை ஒட்டி ஒரு சிறிய நிலப்பரப்பு வீட்டுத்தோட்டங் களாக தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாவித்து வந்தமையாகும். இத்தகைய நிலைமை உருவாகும்போது தோட்ட மக்களுக்கு கிராம மக்களை போல சமமான நிலையில் உருவாகும்போது தோட்ட மக்களும் கிராம மக்களைப் போல சமமான நிலையில் தங்களது வாழ்வாதாரத்தை பேண முடியும் என்பதே, இந்த கோரிக்கையின் தாற்பரியமாகும்.

2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 50,000 வீட்டுத் தொகுதிகள் அமைப்பதற்கான முன்மொழிவு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தோட்டப்புற வீடமைப்பில் பெரும்பாலும் தனி வீடுகள் விரும்பப்பட்டன. நெரிசல் மிகுந்த லயத்து வாழ்வு முறையலிருந்து தனி வீடுகளே பெரும்பாலும் மறைந்த சந்திரசேகரன் வீடமைப்பு பிரதி அமைச்சராக இருந்த காலத்திருந்து பின்பற்றப்பட்டு வந்த ஒன்றாகும். பின்னர் கைவிடப்பட்டு மீண்டும் தனி வீடுகளே மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் மாடி வீடுகள் உள்ளடக் கியதான இந்த முன்மொழிவு நில உபயோகம் மற்றும் உரிமைகள் என்பவை குறித்த அடிப் படையில் கவனம் செலுத்த வேண்டிய வொன்றாகும். மலையக மக்களின் அபிவிருத்தி நிலையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடு கையில் சமத்துவமற்ற நிலையில் இருப்பதோடு இந்த சமூகத்திற்குள்ளேயே பல பிராந்திய ரீதியாக வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மத்திய மாகாணம் அதிலும் நுவரெலியா மாவட்டம் மக்களின் செறிவு அதனூடாக பெறப் படக் கூடிய அரசியல் பிரதி நிதித்துவம் காரண மாக உயர்நிலையில் இருக்கும் அதேவேளை தெற்கு மாகாணத்தில் குறிப்பாக காலி மாவட்டத்தில் வாழ்வோர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தாழ்நிலையில் உள்ளனர். தெனியாய பகுதியிலிருந்து உயர்தர வகுப்பிற்கு செல்வதென்றால் காவத்தைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது.
இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. சமத்துவம் எனும் போது உள்ளக சமத்துவமும் முக்கியமானவொன்று. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணம் விளங்குகின்றது.

பத்தாயிரமாண்டு அபிவிருத்தி குறிக்கோள்கள். 2015ம் ஆண்டில் முடிவடைந்த நிலையில், தோட்ட சமூக அபிவிருத்தி திட்டம் 2009-2015 நிறைவேற்றப்படாமல் மூடிவைக்கப்பட்ட நிலையில், இந்த மக்களின் சமத்துவ அபிவிருத்தி 2015ற்கு பின்னர் எத்தகையதாக இருக்கும் என்று கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.

தோட்டப்புற பாடசாலைகள், தோட்ட சுகாதார, தோட்ட வீடமைப்பு, தோட்டப்புற பாதைகள், தோட்ட நீர் விநியோகம், இப்படி தொடர்புடைய அமைச்சுக்களில் நிதி ஒதுக்குகள் குறித்து ஒரு வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும்.

அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. இவற்றில் திவிநெகும, மற்றும் கமநெகும போன்றவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. மாகாண மட்டத்தில் செயற்படுகின்ற அபிவிருத்தி முன்னெடுப்புகளும் எந்தளவிற்கு தோட்டப்புறங்களுக்கு சென்றடைகின்றன என்பவை அறியப்பட வேண்டியவையாகும். இந்த முனைப்புகள் குறித்து மக்கள் பிரநிதிகள், குறித்த இடங்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் சிவில் சமூகம், சமூகம்சார்ந்த அமைப்புகள், அக்கறை செலுத்த வேண்டும். அது மக்கள் பிரதிநிதிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்.
அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் செய்யும் விடயங்களையே செய்ய முனையாமல், மேலதிகமாக செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். இதில் சமூகத்தினர் தனியார் துறை, சமூகம் சார்ந்த அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் என்பவை அபிவிருத்தி சம்பந்தமாக கூடிய அக்கறை செலுத்த வேண்டும். தனியார் துறை எனும் போது பெருந்தோட்ட கம்பனிகள் இன்று நிறுவன சமூக பொறுப்பு கொண்டவையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் நிச்சயம், அபிவிருத்தி அம்சம் கலந்துள்ளது.

பொருளாதார ரீதியாக தேசிய மட்டத்தில் தேயிலையின் பங்களிப்பு குறைந்து செல்கின்ற வேளை தேசிய உற்பத்தி, அந்நிய செலாவணி சம்பாதிப்பு என்ற வகையில் தேயிலையின் முக்கியத்துவம் குறைந்து செல்கின்றது. தேயிலையின் ஏற்றுமதி விலைகளை தொடர்புபடுத்தியதாக, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அமைந்திருப்பதால் குறைவான விலை குறைவான கூலி என்ற வகையில் தோட்டத்தொழிலை மாத்திரம் தமது வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

உயர்கல்வி தோட்டத்தொழிலுக்கு மரபுரீதியாக இருந்த வந்த கூலி என்ற இழிவான சமூக அடையாளம் என்பவை காரணமாக கணிசமானோர் க.பொ.த சாதாரண தரத்துடன் வேறு திறனற்ற தொழில்களைத் தேடி தோட்டப்புறத்திலிருந்து அகன்று செல்கின்றனர். தோட்டத்திற்குள்ளே, தோட்டத்தொழிலில் ஈடுபடாது வாழுவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக அமைந்துள்ளதாக சில கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவர்களை முன்னர் போல, தோட்டங்களிலிருந்து அகற்றிவிட முடியாது. தோட்டக் கம்பனிகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஒரு அபாயமாக கருதப்படுகின்றது. உழைப்பினை பதிலீடு செய்கின்ற தொழிற்நுட்பங்கள் குறித்து இப்போது அதிகம் அக்கறை செலுத்தப்படுகின்றது. குறைந்த உழைப்பில் உயரிய உற்பத்தியை அடைவதையே கம்பனிகள் இலக்காக கொண்டுள்ளன. இவை தோட்டங்களை சிறுபகுதிகளாக்கி வெளியார்க்கு கையளித்தல் முறைக்கு இட்டுச்செல்லும் நிலை தள்ளப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

சமூக ரீதியாக முழுக்கமுழுக்க தொழிலாளர் குடும்பங்களாக இருந்த நிலைமாறி, தொழிலாளர் அல்லாதோரை கொண்ட சமூகமாக, மலையக சமூகம் இன்றி மாறிவருகின்றது. இந்த சமூகநிலை மாற்றம் அதிகரித்து செல்லும் போக்கு அவதானிக்க கூடியதாக உள்ளது. இதுவரை தோட்ட நிர்வாகத்தில் தங்கியிருந்த நிலைமாறி, பிரதேசசபை, போன்ற அரசாங்க நிறுவனங்களில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் போக்கே எதிர்காலத்தில் காணப்படலாம்.

அந்தவகையில் அரசியல் ஜனநாயக முறைமையில் அதிக ஈடுபாடு காட்டக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அதனுடைய பிரதிபலிப்புகள், மாகாண தேசிய மாவட்டங்களில் புதிய அரசியல் தலைமைகள் - கீழிலிருந்து உருவாகக்கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றன. இந்த போக்கு மக்களின் அபிவிருத்தி தேவைகளை அர்த்தமுள்ள வகையில் வெளிப்படுத்துவதாக அமையும்.
மலையக மக்களை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஒரு தரவு தளம் இல்லாதிருப்பதாகும். அமைச்சு மட்டத்தில் இப்படியொன்று அமைக்கப்பட வேண்டுமென 10 ஆண்டு திட்டம் நடைமுறைப்படுத்திய போது முன்மொழிவு செய்யப்பட்டது.

நாம், முன்னர் குறிப்பிட்டது போல, பல்வேறு அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றன. இவை பற்றிய தரவுகள், மற்றும் தகவல்கள் ஓரிடத்தில் கிடைப்பதாயில்லை. இது ஒரு அமைச்சு மட்டத்திலே நிறுவப்படுவது பொறுத்தமான ஒன்று.

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை கல்வித்துறை சம்பந்தமான சீடா நிறுவனத்தின் ஊடாக தரவுத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மலையகம் முழுவதையும் உள்ளடக்கி, அனைத்து துறைகளுக்குமான கல்வி- சுகாதாரம், வீடமைப்பு, பாதைகள் மற்றும் பல்கலைக்கழகம் செல்வோர், வேலை வாய்ப்பற்றோர் போன்றவிடயங்களுக்கென தரவுக்களம், ஒன்று அவசியமாகும்.

மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி, எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? அபிவிருத்தி குறித்து நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளியல் அறிஞர் அமாத்தய சென் அவர்களின் கூற்றொன்றை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். “ஒரு தனிமனிதன் எத்தகைய அளவு உரித்துகளையும், இயலுமைகளையும் கொண்டிருக்கிறானோ அந்த அளவிற்கே அவன் அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்” என்ற கருத்தை இச்சமூகத்திற்கும் பொருந்திப்பார்க்க முடியும்.

இங்கு சுட்டிக்காட்டப்பட்ட வரலாற்று அனுபவத்திலும் இந்த சமூகம் உரித்துக்களின் தொகுதிகளை ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் காலங்கடந்தே பெற்று கொண்டது. இன்னும், இந்த உரித்துக்களின் தொகுதி பெருப்பிக்கப்பட வேண்டும். இதை முழுமையாக அனுபவிக்கவேண்டுமெனில் அதற்கான இயலுமையை இந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். இயலுமை குறைவே, இந்த சமூகத்திற்குரிய மிகப்பெரும் பலவீனமாகும். இதுவும் வரலாற்று நிகழ்வுகளின் விளைவுதான். இந்த இயலுமைகளின் அபிவிருத்தி மனிதவள மேம்பாட்டில் தங்கியுள்ளது கல்வி திறன் பயிற்சி என்பவை தான் இவற்றை கொண்டு வர முடியும்.

இத்தகைய சமூக சூழ்நிலையிலே, நேரடியாக நடவடிக்கைகள் அல்லது நேர்கணிய பாரபட்ச ஏற்பாடுகள் இந்திய, மலேசியா போன்ற நாடுகளின் யாப்புகளில் காணப்படுகின்றன. இலங்கையில் இத்தகைய இடைவெளிகள் காணப்பட்டபோது அவற்றை நீக்க நேர்கணிய பாரபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதியில் இன மற்றும் பிராந்திய தரப்படுத்தல், இனத்துவ ரீதியான ஆட்சேர்ப்பு என்பன சில உதாரணங்களை குறிப்பிடலாம்.

ஒரே மக்கள், ஒரே நாடு என்ற கோட்பாடு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமெனில் ஒரே மக்கள் என்ற தொகுதிக்குள் அடங்குகின்ற இனக்குழுக்கள் சமத்துவ நிலையை அனுபவிக்க வேண்டும். இங்கு இரண்டு மேற்கோள்களை பொருத்தம் கருதி குறிப்பிடலாம். ஒன்று இந்திய பிரதம நீதிபதி ஏ. என். ரே அவர்களின் கூற்று, சமத்துவம் அற்றவர்களுக்கு, சமத்துவமான சந்தர்ப்பங்களை வழங்குதல் சமத்துவமின்மையை தீவிரப்படுத்தும் என்பதாகும் மற்றது இந்திய யாப்பை உருவாக்கிய அம்பேத்காரின் கூற்று, நாம் அரசியலில சமத்துவம் கொண்டுள்ளோம். ஆனால் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையை காண்கின்றோம். கூடிய விரைவில் இம்முரண்பாட்டினை நீக்க வேண்டும். இல்லையெனில் சமத்துவமின்னையால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக உழைத்து கட்டியெழுப்பிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பினை உடைத்து எறிவார்கள்.

மலையகத்தின் காந்தி என போற்றப்படும் அமரர் கே. இராஜலிங்கத்தின் 104 ஆவது பிறந்த தினத்தையொட்டி கடந்த 3ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் “மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி” எனும் தலைப்பில் எம். வாமதேவன் ஆற்றிய பேருரை

தொடரும்…..
நன்றி- தினகரன்

நீர்த்தேக்கத்தில் மூழ்கிய வழிபாட்டுத் தளங்கள்

$
0
0
மவுசாக்கலை நீர்தேக்கத்தால் மூடப்பட்ட மஸ்கெலியா பழைய நகரைச் சேர்ந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன வெளித்தோன்ற ஆரம்பித்துள்ளன. 

தற்போது மலையக பகுதிகளில் நிலவும் வெயிலுடனான காலநிலை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது. இதனால் மலையகத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

மஸ்கெலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வழிந்தோடும் நிலையில் இருந்து 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக லக்ஷபான நீர் மின் உற்பத்தி
நிலையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மவுசாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கிய மஸ்கெலிய பழைய நகரத்தில் காணப்பட்ட கதிரேசன் கோயில் முழுமையக வெளித்தோன்றியுள்ளது. அத்துடன், அப்பகுதியிலிருந்த பௌத்த விகாரை மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் போன்றனவும் வெளித்தோன்றியுள்ளன. 

இந்த காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் கோயிலை சென்றடைவதற்கான பாதை முற்றாக பயன்படுத்தக்கூடிய நிலையை அடையும் போது அதிகளவானவர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்கு செல்வது வழமை. 

தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபடும் யாத்திரர்களாலும் இந்த பழைய கோயில்  பார்வையிடப்படுவதால் இது ஓர் சுற்றுலா தளமாகவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக மாணவர்களுக்கான பல்கலைகழக குறைபாடு உடன் நிவர்;த்தி செய்யப்பட வேண்டும்- அ. லோறன்ஸ்

$
0
0
இலங்கையில் பல பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. எனினும் மலையக மாணவர்களுக்கென்று தனியான ஒரு பல்கலைகழகம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இக்குறை உடனடியாக  நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் அ. லோறன்ஸ் தெரிவித்துள்ளாhர். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமைகள் மிகவும் முக்கியமானவையாகும். ஒருவரின் அல்லது ஒரு சமூகத்த்pன் உரிமைகள் உரியவாறு வழங்கப்படாது புறந்தள்ளப்படுவதன் காரணமாக முரண்பாட்டுச் சூழ்நிலைகள் மேலோங்குகின்றன. இதன் பாதக விளைவுகள் பல்வேறு மட்டங்களிலும் எதிரொலிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த வகையில் மலையக மக்களின் பல்வேறு உரிமைகள் ஏட்டளவிலேயே முற்றுப் பெற்றுள்ளமையை அவதானிக்கக் சுடியதாக உள்ளது. 

மொழியுரிமை குறித்து நோக்குகையில்இலங்கையில் தமிழி; மொழி அரச கரும மொழியாக உள்ளது எனினும் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. 

அரச  திணைக்களங்கள் மற்றும் கூட்டுத் தாபனங்களில் இருந்து வரும் சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் என்பன பெரும்பாலும் தனிச்சிங்கள மொழியிலேயே அனுப்பட்டு வருகின்றமை புதிய விடயமல்ல. பல அரச அலுவலகங்களில் தொடர்பாடல் உத்தியோகத்தர் இல்லாதுள்ளனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கருமமாற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பல இடங்களில் பெயர் பலகைகள் தனிச்சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தமிழ் அரச கரும மொழிதானா? ஏன்ற சந்தேகம் எழுகிறது. மலையக மக்களின் கல்வி உரிமைகள் கூட எந்தளவுக்கு நியாயமாக கிடைக்கின்றது என்பதில் ஐயப்பாடுககள் மேலெழுந்து வருகின்றன. 

வளங்கள் பங்கீடு மற்றும் நிதிப்பங்கீடு தொடர்பில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றமையை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. வள மற்றும் நிதி பங்கீடுகளின் நியாயமற்ற பகிர்வு முறை காரணமாக மலையக தமிழ் பாடசாலைகள் பின்னடைவு காணும் அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றன. இந் நிலைமை தொடருமாமனால் மலையக கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மலையக அரசியல் தொழிற்சங்கங்கள் மலையகத்தின் கல்வி உரிமைகள் மீறப்படுவது குறித்து தெரிந்திருந்தும் வாய்மூடி மௌனியாக இருப்பது வருந்தத்தக்க விடயமாகும். இதனை கருத்திற் கொண்டு மலையக கல்வி அபிவிருத்திக்கு காத்திரமான பங்களிப்பை வழங்க அரசியல் தொழிற்சங்கவாதிகள் முன்வர வேண்டும் உரிமைகள் பறிபோகும் போது தட்டிக்கேட்காமல் வெறுமனே இருந்து விட்டு பின்னர் வருந்துவதால் பயனில்லை என்றார்.


இனிய புது வருட வாழ்த்துக்கள்

மலையகத் தமிழர்கள் காணி பெறுவதை அரசு விரும்பவில்லை- ஆர். யோகராஜன் பா.உ

$
0
0

இலங்கையில் மலையகத் தமிழர்கள் சொந்தக் காணிகளைப் பெற்றுவிடக்கூடாது என்ற இனவாத நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். 

தேயிலை மீள்நடுகை நடவடிக்கையிலும் அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான- செயற்திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் சுமார் ஆறு லட்சம் ஏக்கர் தேயிலைக் காணியில், சுமார் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பிலுள்ள தேயிலைச் செடிகளை பிடுங்கிவிட்டு புதிதாக மீள்நடுகை செய்ய வேண்டியிருப்பதாக  தெரிவித்த யோகராஜன்  பா.உ; வெறும் 400 ஏக்கர் பரப்பில் மட்டுமே மீள்நடுகை செய்வதற்குப் போதுமான 500 மில்லியன் ரூபா நிதியையே அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களுக்கு தலா இரண்டு ஏக்கர் காணியை பகிர்ந்தளித்து அதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, தேயிலை உற்பத்தியை பெருக்குவது மட்டுமன்றி- தொழிலாளர்களுக்கும் உதவமுடியும் என்பதே பொருத்தமான நடவடிக்கை என்று அரசாங்கத்திடம் தான் யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவித்த யோகராஜன் தொழிலாளர் குடும்பங்களுக்கான மாடிவீட்டுத்திட்டம் பற்றி குறிப்பிடுகையில்

கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது, தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் (சுமார் 253 சதுர மீட்டர்) காணியை வீடமைப்புக்காக ஒதுக்குவதாக ஜனாதிபதி மலையக தோட்ட மக்களுக்கு வாக்குறதி அளித்திருந்த போதிலும், இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தனித்தனி வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூறியிருப்பதன் பின்னணியில், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடன் வீடு கிடைக்கக் கூடாது என்ற இனவாத நோக்கமே இருக்கிறது என்றார்.

விவசாயிகளுக்கு நிலமே ஆதாரம். தேயிலைத் தொழிலாளர்களும் விவசாயிகளே என்றபடியால், அவர்களுக்கு மாடிவீடு வழங்குவது ஏற்புடையதா என கேள்வி எழுப்பினார்.

ஆனால், அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற மலையகத்தின் பிரதான அரசியல்கட்சிகள் இந்த வீடமைப்பு முறையின் பாரதூர தன்மையைப் புரிந்துகொள்ளாமல் உள்ளனர் என்றார்

எப்போது எங்களுக்காக கதைக்கப் போகின்றீர்கள் ?

$
0
0


தேர்தல் காலங்­களில் மட்டும் சிரித்த முகத்­தோடு எம்மை தேடி வரும் பிர­தி­நி­தி­க­ளுக்கு 

கல்வி, சுகா­தரம், விளை­யாட்டு, போக்­கு­ரத்துதொழில் குடி­யி­ருப்பு என சகல அம்­சங்­க­ளிலும் பின்­தங்­கி­யி­ருக்கும் எங்கள் பிரச்­சி­னைகள் பற்றி கதைக்க வேண்­டிய இடத்தில் நீங்கள் எவ­ருமே கதைக்­க­வில்லை என்­பதை அறிந்து மிகவும் மன­வே­தனை அடை­கிறோம். பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 7 பேரில் ஐந்து பேர் அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருக்­கின்­றீர்கள். இதில் ஒருவர் அமைச்சர் மற்­று­மொ­ருவர் பிரதி அமைச்சர். வடக்கு மற்றும் கிழக்கு பிர­தேச மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­துவோர் ஏதோ ஒரு வழியில் தமது மக்­களின் பிரச்­சி­னை­களை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கின்ற போது நீங்கள் ஏன் அந்த அமர்­வு­க­ளுக்கே செல்­வ­தில்லை என்­பது எமக்கு புரி­ய­வில்லை. இது நீங்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்வது மலை­யக சமூ­கத்­திற்கு செய்யும் பெருந்­து­ரோகம் என்­பதை அறி­வீர்­களா?

 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவு திட்ட குழு நிலை விவா­தத்தில் மலை­யக மக்­களின் மேற்­கூ­றிய பிரச்­சி­னைகள் பற்றி எவ­ருமே மறந்து கூட வாய்­தி­றக்­க­வில்­லையே? இந்த விவா­தங்கள் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதில் மலை­யக மக்­க­ளோடு சம்­பந்­தப்­பட்ட அமைச்சு விவா­தங்­களில் முக்­கி­ய­மா­ன­தாக விளங்கும் கல்வி அமைச்சு குறித்த விவா­தங்­களில் நீங்கள் எவ­ருமே கலந்து கொள்­ள­வே­யில்லை எனும் போது மலை­யக கல்வி தொடர்பில் நீங்கள் வைத்­தி­ருக்கும் அக்­கறை எமக்கு நன்­றாக விளங்­கு­கி­றது. உங்­க­ளுக்கு தெரி­யா­விட்­டாலும் இந்த மாதத்தில் திகதி வாரி­யாக இடம்­பெற்ற குழு­நிலை விவா­தங்­க­ளையும் அதில் நீங்கள் ஒன்றில் கூட நீங்கள் பேச­வில்லை என்­ப­தையும் இங்கு தர கட­மைப்­பட்­டுள்ளேன்.

1) 2 ஆம் திகதி கல்வி மற்றும் உயர்­கல்வி அமைச்சு பற்­றிய விவாதம் இடம்­பெற்­றது. மலை­யக பகு­தி­களில் நிலவும் ஆசி­ரியர் பற்­றாக்­குறை பாட­சாலை வளப்­பற்­றாக்­குறை இடை­வி­ல­கல்கள் தகுதி வாய்ந்த மாண­வர்­க­ளுக்கு உயர்­கல்­வியை தொடர்­வதில் உள்ள இடர்கள் என கல்­வித்­து­றையில் காணப்­படும் பல பிரச்­சி­னைகள் பற்றி கதைக்க தவறி விட்­டீர்கள். 

2) 7 ஆம் திகதி சிறுவர் அபி­வி­ருத்தி மற்றும் மகளிர் விவ­கார அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. மலை­ய­கத்­தி­லி­ருந்தே அதிக சிறு­வர்கள் இன்று தலை­ந­கரில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­கின்­றனர் என்றும் அவர்கள் நீண்ட கால­மாக உயி­ரா­பத்­தையும் துஷ்­பி­ர­யோ­கத்­தையும்  சந்­தித்து வரு­கின்­றனர் என்­பதும் உங்­க­ளுக்கு தெரி­யா­த­தல்ல.  பெருந்­தோட்­டப்­பெண்­களின் கட்­டாய கருத்­தடை பிரச்­சி­னைகள் வேலைத்­த­ளத்தில் அவர்கள் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள் என எவ்­வ­ளவோ உள்­ளதே அதைப்­பற்­றியும் நீங்கள் எவரும் கதைக்­க­வில்லை.

3) 9ஆம் திகதி வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் ஊக்­கு­விப்பு நல­னோம்­புகை குறித்த அமைச்சு விவாதம் இடம்­பெற்­றது. பெருந்­தோட்­டப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்கு சென்று பிணங்­க­ளாக திரும்­பிய பெண்­களை மறந்து விட்­டீர்­களா? மலை­யக இளை­ஞர்­க­ளுக்கு தகு­தியின் அடிப்­ப­டையில்  வெளிநாட்டு தொழில் பெற்­றுத்­தர வேண்டும் என்ற எண்ணம் உங்­க­ளுக்­குக்­கி­டை­யாதா? போலி முக­வர்­களால் மலை­யக இளைஞர் யுவ­திகள் ஏமாற்­றப்­பட்டு வரு­வது குறித்தும் வெளிநாட்டில் தாய் பணி­யாற்றும் போது தந்தை அல்­லது  உற­வி­னர்­க­ளுடன் இருக்கும் பிள்­ளை­களின் பாது­காப்பு குறித்தும் நினைத்­துப்­பார்த்­தீர்­களா? இதற்கும்    மௌனம் தான் உங்கள் பதி­லாக இருந்­தது. 

4)  11 ஆம் திகதி இளைஞர் அலு­வல்கள் மற்றும் திறன் அபி­வி­ருத்தி அமைச்சு மீதான விவாதம்  இடம்­பெற்­றது. இன்று மலை­யக இளை­ஞர்­க­ளைப்­பொ­றுத்­த­வரை தோட்­டப்­பு­றங்­களில் அல்­லது தலை­ந­க­ரங்­க­ளி­லேயே அதி­க­மோனோர்  பணி­யாற்றி வரு­கின்­றனர். ஆசி­ரி­யப்­ப­ணி­களில் உள்­ளீர்த்­துக்­கொண்­ட­வர்­களின் தொகை போதாது. வேலை­யின்றி இருக்கும் இளை­ஞர்கள் பற்­றிய உங்கள் தொலை­நோக்­குப்­பார்வை என்ன? இதை சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்­க­லாமே?

5) 13 ஆம் திகதி போக்­கு­வ­ரத்து அமைச்­சுக்­கான விவாதம் இடம்­பெற்­றது. மலை­ய­கத்தில் எத்­த­னைப்­ப­கு­தி­களில் முறை­யான போக்­கு­வ­ரத்து சேவைகள் இல்லை என்­பதை நீங்கள் நன்­றா­கவே அறி­வீர்கள் இகாரணம் அத்­தனை இடங்­க­ளுக்கும் தேர்தல் காலத்தில் உங்கள் பிராடோ மோன்­டரோ ரக வாக­னங்கள் பய­ணித்­தி­ருக்­கின்­றன. பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்ட சிசு­ச­ரிய பஸ் சேவைகள் மலை­ய­கத்தின் எந்த பகு­திக்கும் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது சரி உங்­க­ளுக்­குத்­தெ­ரி­யுமா? அது குறித்தும் எவரும் கதைக்­க­வில்லை. 

6) அதே 13 ஆம் திகதி சுகா­தார அமைச்சு மீதான விவா­தமும் இடம்­பெற்­றது. மலை­ய­கத்தில் நிலவும் மந்த போசனை மற்றும் வைத்­தி­ய­சா­லை­களில் நிலவும் வளப்­பற்­றாக்­குறை உங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். இந்த வரு­டத்தில் மட்டும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 19 கர்ப்­பி­ணித்­ தாய்­மார்கள் மர­ம­டைந்­துள்­ளமை உங்­க­ளுக்­குத்­தெ­ரி­யுமா? டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லையில் நிலவி வரும் உள்­ளக பிரச்­சி­னைகள் நாள்­தோறும் பத்­தி­ரி­கை­களில் வெளிவ­ரு­கின்­றன. அதை பார்த்தும் பாரா­தது போல் காலத்தை கடத்­து­கின்­றீர்­களே? சிசு மரண வீதம்இ சுகா­தார சீர்­கே­டுகள் குறித்து சபையின் கவ­னத்­திற்­குக்­கொண்டு வந்­தி­ருக்­க­லாமே? 

7) 14 ஆம் திகதி விளை­யாட்­டுத்­துறை அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. தேசிய ரீதி­யான போட்­டி­களில் பங்­கு­பற்ற தகு­தி­யி­ருந்தும் மலை­யக இளைஞர் யுவ­தி­க­ளுக்கு உரிய ஊக்­கு­விப்பு இன்­மையால் பிர­கா­சிக்க முடி­யா­தது குறித்து பேசி­யி­ருக்­கலாம் ஏனெனில் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் மலை­யக நக­ரான நாவ­லப்­பிட்­டியை சேர்ந்­தவர் தானே ? தோட்­டப்­ப­கு­தி­களில் உரிய மைதானம் இல்­லாமை இருக்கும் மைதா­னங்கள் பரா­ம­ரிக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றமை குறித்தும் சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்­கலாம். ஆனால் உங்­களில் பலர் இந்த விவா­தத்­திற்கு சமூகம் அளித்­தி­ருக்­கவே இல்லை.

8) 14 ஆம் திக­தி­யன்றே உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் தொடர்­பான அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. இது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் தோட்­டப்­பு­றங்­க­ளுக்கு சேவை­களை வழங்க முடி­யாத நிலை இருப்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கலாம். இந்த சந்­தர்ப்­பத்தை மலை­யக பிர­தி­நி­தி­க­ளான நீங்கள் தவ­ற­விட்டு விட்­டீர்கள். 

மேற்­கு­றிப்­பிட்ட அமைச்­சு­களின் விவாதம் தொடர்பில் நீங்கள் எவ­ருமே வாய்­தி­றக்­காத விட­யத்தை சில ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அதை வாசித்து விட்டு உங்­களால் எந்த அறிக்­கை­யையும் விட முடி­ய­வில்லை. ஆனால் 18 ஆம் திகதி இடம்­பெற்ற விவா­தத்தின் போது ஊட­கங்­களில் வெளிவந்த செய்­தியை முன்­னி­லைப்­ப­டுத்தி உங்­களில் சிலர் கதைத்­தீர்கள். அது கண் குரு­டான பின்பு சூரிய வணக்­கத்­திற்கு தயா­ரா­ன­தற்கு சமன். 
இப்­போது எம்­மத்­தியில் எழுந்­தி­ருக்கும் கேள்வி இது தான். மேற்­கு­றிப்­பிட்ட அனைத்து பிரச்­சி­னை­களும் இருந்தும் குறிப்­பிட்ட அமைச்சு மீதான விவா­தத்தில் நீங்கள் கதைக்­கா­ம­லி­ருந்­த­தற்குக் காரணம் இந்த பிரச்­சி­னைகள் வெளிப்­பட்டால் உங்­க­ளுக்கு பிரச்­சினை வந்து விடும் என்றா அல்­லது இவ்­வ­ளவு பிரச்­சி­னை­களை வைத்­துக்­கொண்டு இத்­தனை வரு­டங்­க­ளாக இந்த மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றீர்­களே என யாராவது கேள்வி எழுப்பி விடுவார்களே என்ற அச்சமா? 

நீங்கள் இவ்வாறு வாய்மூடி மௌனிகளாக இருப்பதால் மலையக மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என ஏனையோரும் ஏன் அரசாங்கமும் கூட நினைக்க வாய்ப்புள்ளதே ? சபை விவாதத்தில் கதைக்காமல் ஜனாதிபதியுடன் தனியே சென்று கதைப்பதில் என்ன பிரயோசனம் உண்டு? நீங்கள்  என்ன கதைத்தீர்கள் என்பது யாருக்குத்தெரியும்? பாராளுமன்றத்தில் கதைத்தால் தானே அனைவருக்கும் தெரியும்? அடுத்த வருடம் இடம்பெறும் முக்கிய விவாதங்களில் சரி கதைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இந்த மக்கள். இந்த வருடம் நீங்கள் கதைக்காமலிருந்ததற்கு  ஏதாவது காரணங்கள் இருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிக்கலாமே.

இப்­ப­டிக்கு உங்­க­ளுக்கு 
வாக்­க­ளித்­த­வர்­களில் ஒருவன்
(நன்றி சூரியகாந்தி)

அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக வாழும் பெருந்தோட்ட மக்கள்

$
0
0

நுவரெலிய மாவட்டத்துக்குட்பட்ட றம்பொடை டிவிசனில் அமைந் துள்ள ஆறு தோட்டங்களை உள்ளடக்கிய புரட்டொப் குறூப் ( பெரட்டாசி தோட்டம்) என்ற தோட்டப்பகுதியில் வாழும் மக்கள் பலவருடங்களாக அடிப்படை வசதிகள் கூட இன்றி கடும் சிரமத்துக்கு மத்தியில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

கல்வி, சுகாதார, போக்குவரத்து,  தபால், தொடர்பாடல் போன்ற வசதிகள் இல்லாததால் இப்பகுதிகளில்   வாழும் மக்களுக்கு தொடர்ந்தும் கொத்தடிமைகளாகவே  வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.  புரட்டொப் குறூப்பில் அமைந்துள்ள பூச்சிக்கொடை, அயரி, மேரியல், ரஸ்புருக், பெரட்டாசி, மேமலை ஆகிய தோட்டங்களில் தமிழ் மக்களே முழுமையாக வாழ்கின்றனர்.

இவர்கள் வாழும் பகுதிகளில் மொத்த வியாபார நிலையங்கள், பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், பாமசி, தொடர்பாடல் நிலையங்கள் என தேவையான எதுவுமே இல்லை. இருக்கும் சில்லறை வியாபார நிலையங்களிலும் உச்ச விலை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஏதாவது முக்கிய பொருட்களை வாங்கவேண்டுமென்றாலோ அல்லது  சேவையை பெற்றுக்கொள்ளவேண்டுமென்றாலோ புசல்லவை நகருக்கே மக்கள் செல்லவேண்டும்.

ரஸ்புருக்கிலிருந்து புசல்லாவைக்கு 1 மணித்தியாலயத்தில்  செல்லக்கூடியதாக இருந்தாலும், பெரட்டாசி - புஸல்லாவை வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் இரண்டு மணித்தியாலயத்துக்கும் மேலாக கடும் சிரமத்துக்கு மத்தியில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. கட்டிக்குத்தலை, காச்சாமலை, வீடன் ஆகிய தோட்டத்து மக்களும் இந்த வீதியையே போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவர்.

அதுவும் உரிய நேரத்துக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டே நகருக்கு வரவேண்டியுள்ளது. காலையில் சென்றால் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருவதற்கு மாலையாகிவிடும். எனவே, எங்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என தோட்டப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மழைக்காலங்களில் வீதிகளில் நீர் தேங்கிவிடுவதால் அதிக விபத்துகளும் ஏற்படுகின்றன. பெரட்டாசி - புசல்லாவை வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்கள் அடிக்கடி சேதத்துக்குள்ளாகின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து முன்னர் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் அந்த சேவை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனால், நகரப் பகுதிக்கு உயர் கல்வி பயிலவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணங்களை செலுத்தவேண்டியுள்ளது. ஆசன எண்ணிக்கைக்கும் அதிகமாக பேருந்துகளில் ஏற்றப்படுவதால் நெரிச்சலுக்கு மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.  

குறிப்பாக மத்திய மாகாண சபைத் தேர்தல்  நடைபெற்ற காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக குறித்த வீதி புனரமைக்கப்படும் என உறுதிமொழிகள் அள்ளிவீசப்பட்டன. ஆனால், புனரமைப்பு பணிகள் பல மாதங்களாகியும் இன்னும் தொடங்கவில்லை என்று பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு அயரி என்ற தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சைப்பெறுவதற்கான  வசதி அமைத்துக்கொடுக்கப்பட வில்லை. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவோ அல்லது சத்திரசிகிச்சைப் பிரிவோ, கதிரியக்கப்பிரிவோ அதில் அமைக்கப்படவில்லை. இதனால், திடீர் விபத்துகளால் பாதிக்கப்படுவோரைக்கூட புசல்லாவைக்கு அல்லது கம்பளை வைத்தியாலைக்கு கொண்டுச் செல்லவேண்டிய துன்ப நிலை காணப்படுகின்றது. 

அம்புலன்ஸ் வசதிகள் இல்லாததால் கொழுந்து ஏற்றும் லொறியிலேயே நோயாளர்கள் கொண்டுச் செல்லப்படுவார்கள். வீதி சீர்கேடு காரணமாக நோயாளி இடைநடுவே இறந்து விடுகின்றனர். கர்ப்பினி தாய்மார்களுக்கும் வழியிலேயே பிரசவம் ஏற்பட்டுவிடுகின்றது.

நாய்க்கடி, பாம்புக்கடி,  குளவிகொட்டு போன்றவற்றுக்கு உரிய மருத்துவ வசதிகள் இல்லாததால் நகரத்துக்கு வருவதற்கு சிரமப்பட்டு பலர் நாட்டு வைத்தியத்தை அணுகுவதால் அதனாலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதற்கு புறம்பாக,  முறையாக மின் விநியோகம் வழங்கப்படாததால் லயன் அறைகள் அடிக்கடி தீப்பற்றி எறிதல், சுகாதார ஆலோசனைகள் இன்மை, சிறுவர் துஷ்பிரயோகங்கள், முகவர் நிலையங்களால் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் ஏமாற்றப்படுகின்றமை, 

சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடன் உதவி இன்மை,  ஆசிரியர்கள் பற்றாக்குறை,  கல்வி வீழ்ச்சி உட்பட மேலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவே,  ஊடகங்களும் குறிப்பாக தமிழ் ஊடகங்களும் மலையக சிவில் அமைப்புகளும் எமது பிரச்சினைக்கு விடிவைத் தேடிதரவேண்டும் என புரட்டொப் தோட்டத்தில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி- வீரகேசரி 

தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு

$
0
0
தமிழ் மொழி பேசும் அமைச்சர் ஒருவரின் அமைச்சில் இடம் பெற்ற விருது விழாவில் தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவமொன்று கண்டியில் இடம் பெற்றது.

மத்திய மாகாண சபையின் விவசாய, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, சுற்றாடல் அமைச்சின் கால் நடை உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு விருது விழா செவ்வாய்க் கிழமை  கண்டி அவன்ஹல மண்டபத்தில் இடம் பெற்றது.

அதன் போது கால்நடை மற்றும் பால் உற்பத்தி தொடர்பாக மத்திய மாகாண மட்டத்தில்  பங்களிப்புச் செய்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு துறைகளாகப் பிரித்து கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்த விவசாயிகள், மிருக வைத்தியர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், மிருக வைத்திய காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் மிருக வளர்ப்பு மகாண அமைச்சின் பல்வேறு அலுவலர்கள் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட, மிருக வைத்திய அதிகாரி பிரிவு மட்டம் போன்ற பல்வேறு மட்டங்களில் கௌரவிக்கப்பட்டனர். முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிலும் விசேடமாக மேற்படி துறையில் பங்களிப்புச் செய்தர்கள் என்று சொல்லக் கூடிய ஊடக வியலாளர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர். கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

ஆனால் அப்பட்டியலில் தமிழ் மொழி பேசும் ஊடக வியலாளர்கள் எவருமே இருக்கவில்லை. இது திட்டமிட்ட சதியா? தவறா எனத் தெரியவில்லை. அதில் மற்றொரு வியப்பு என்ன வென்றால் மேற்படி அமைச்சரின் தொகுதியான நுவரெலியாவில் இருந்து கூட ஒரு தமிழ் பத்திரிகையாளரின் பெயர் வாசிக்கப்படவில்லை. அப்படியென்றால் தமிழ் மொழி பேசும் அமைச்சரையும் பணிப்பாளரையும் பிரதானமாகக் கொண்ட மேற்படி அமைச்சின் செய்திகளை இதுகாலம் வரை தமிழ் மொழி பேசும் சகல மத்திய மாகாண ஊடகவியலாளர்களும் எழுத வில்லை என்ற கருத்து நிலவுகிறது.

எனவே குறிப்பிட்ட அமைச்சு அதிகாரிகள் தமிழ் ஊடக வியலாளர்களை புறக்கணித்தனரா? அல்லது மத்திய மாகாண தமிழ் ஊடக வியலாளர்கள் அமைச்சின் செய்திகளைப் புறக்கணித்தனரா என்ற வினாவிற்கு இரு சாராரும் விடைகாண்பது நல்லதென அங்கு சமூகமளித்திருந்த ஒரு சில தமிழ் மொழி பேசும் பொது மக்களும் மாகாண சபை தமிழ் அங்கத்தவர்கள் சிலரும் அங்கலாய்த்துக் கொண்டனர்.

மலையக தமிழர்களின் நலனுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - பி.பி. தேவராஜ்

$
0
0
இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது வடக்கு மாகாணத் தமிழர்கள் என்ற கோணத்தில் நோக்கும் இந்திய அரசியல் கட்சிகளின் இந்த இந்த அணுகுமுறை மாற வேண்டும். மத்திய மாகாணத்தில் இலட்சக்கணக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காகவும் இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென இலங்கை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி.தேவராஜ் டில்லியில் இடம்பெற்ற “பிரவாசி பாரதிய திவஸ்” மாநாட்டில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாங்கள் அனைவரும் மத்திய மாகாணத்தில் வசிப்பவர்கள். வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்கள் சுயாட்சி உரிமை கோருகின்றனர். அதேபோல, மத்திய மாகாணத்தில் உள்ள எங்களுக்கும் போதுமான மாகாண பிரதிநிதித்துவம், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக்கோரி வருகிறோம். 

மலைவாழ் தமிழர்களின் மக்கள்தொகை, இலங்கைத் தமிழர்களுக்கு இணையானதாகும். நாங்கள் சிங்களர்கள், தமிழர்கள் எனப் பிரிவினை பார்க்காமல் ஒற்றுமையுடன் வாழ்கிறோம். 
இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது வடக்கு மாகாணத் தமிழர்கள் என்ற கோணத்தில் இந்திய அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. இந்த அணுகுமுறை மாற வேண்டும். மத்திய மாகாணத்தில் இந்திய வம்சாவளி இந்தியர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களின் நலன்களுக்காகவும் இந்தியா குரல் கொடுக்க வேண்டும். 

தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகுந்த கொந்தளிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய வம்சாவளி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். 

இலங்கை குடிமக்கள் என்ற முறையில் ஒரே நாட்டில் வசிக்கும் சிங்களர்களுடன் நல்லுறவு பேணுவது அவசியம். இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி திரும்ப வேண்டும். 

இந்தியர்களின் ஆதரவும் அன்பும் எப்போதும் எங்களுக்குத் தொடர வேண்டும். அது இன, மத அடிப்படையில் அல்லாது, நட்புறவு, சகோதரத்துவம் அடிப்படையில் இருக்க வேண்டும். 

இதற்குத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்திய அரசும் ஒத்துழைக்க வேண்டும்´ என்று கேட்டுக் கொண்டார் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ்.

பெருந்தோட்ட நிர்வாக நிலங்கள் யாவும் அரசுடமை தொழிலாளர்கள் சொந்தம் பாராட்ட முடியாது

$
0
0
பெருந்தோட்டத்துறை நிர்வாகத்திலுள்ள விவசாய மற்றும் தரிசு நிலங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள், தோட்டப்பணியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சொந்தம் பாராட்டுவதோ, விவசாய பணிகளில் ஈடுபடுவதோ நீதிக்கு புறம்பானது என நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜித குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாவலப்பிட்டி பிரதேசம் போஹில், கிறீன்வூட், ருவன்புர, வெரலபத்தன சார்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தாங்கள் சார்ந்த தொழிற்சங்க பிரமுகர்கள் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், எம். மோகன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.எம். கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர் கெஹல்தெனிய ) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திந்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இவர்கள் இங்கு தெரிவிக்கையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தரிசு நிலம் காணியில் எங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் பற்றாக்குறைக்குமே இந்த தரிசு நிலத்தில் மா, பலா, தேயிலைச்செடி, கால்நடை வளர்ப்பு முதலியவற்றை பெரும்பான்மை இனத்தவர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 2012ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தரிசு நிலத்தில் விவசாயம் செய்வோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
;. 
இதே­வேளை, மாதத்தில் 15 நாட்கள்    கூட தோட்டங்களில் தொழில் வழங்கப்படுவதில் நாளாந்த வாழ்வில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே இதனை செய்து வருகிறோம். சுpறிய ரக விவசாயிகளுக்கு சார்பாக மக்கள் நலன் காப்பதாக வெற்றி ஆரவாரம் ஏட்டளவிலேயே உள்ளது. அது பேரினப் பொருளாதாரக் கொள்கையாகவே காணப்படுகிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 
தேர்தல் காலங்களில் உறுதியளித்த எந்தவொரு திட்டமும் இன்றுவரை செயல்முறைப்படுத்தப்படவில்லை. கொள்கைப் பொதிகளை கட்டவிழ்த்து சூறையாடப்படுகின்றதே தவிர எங்களைப் போன்ற தொழிலாளர் வர்க்கத்தினருக்கு பாரபட்சமே எஞ்சியுள்ளது என பலரும் தெரிவிக்கின்றனர்


தொழிலாளர்களுக்கு தனி வீடா? மாடி வீடா? அல்லது சொந்தமான வீடா – சந்திரபோஸ்

$
0
0
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் தனித்தனியான வீடுகளாகவே அமைக்கவேண்டும் என்று ஒருசாரார் வாதிடுகின்றனர். இல்லை, அவர்களுக்கு மாடி வீடுகளே பொருத்தமானது என்கின்றனர் மறுசாரார். எனினும் தனி வீடுகளோ, மாடிவீடுகளோ எதுவாயினும் அவை சொந்தமாக்கப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்த முனைந்தபோதும் அவர்கள் வாழ்கின்ற வீடுகள் சொந்தமாக்கப்படவில்லை. எனினும் லயன் காம்பிராக்களுக்கு வெள்ளை பூசப்பட்டன. கணிசமான லயன் காம்பிராக்களில் கூரைத்தகடுகள் மாற்றப்பட்டன. மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. குடிநீர் வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. இதற்கு மேலாக தனிவீடுகளும,; மாடிவீடுகளும் கட்.டப்பட்டன. மொத்தமாக லயன்களில் வாழ்பவர்களில் சுமார் 33 வீதமானவர்கள் லயன் காம்பிராக்களில் இருந்து விடுபட்டு தனி அல்லது மாடிவீடுகளில் வாழமுடிந்தது. இவை யாவும் கடந்த 60 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

தொழிலாளர்களின் லயன் குடியிருப்பில் உள்ள அசௌகரியங்களை நீக்கி அவர்களை கௌரவமான வீட்டில் குடியிருத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே தனிவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிவீடுகள் அமைக்கும் பணியை மனித அபிவிருத்தி நிதியமே (PHDT) ஆரம்பித்தது என்று கூறுவதற்கில்லை. குடிபெயர்ந்துவந்த இந்திய தொழிலாளர்களின் லயன் வாழ்க்கையை பொறுக்கமுடியாத இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினால் 1930களில் ஒருசில தோட்டங்களில் இரட்டை வீடுகளும் அமைக்கப்பட்டன. அவற்றில் சில மாடி வீடுகளாகவும் நிர்மாணிக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகளை இப்போதும் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக ஹட்டனில் இருந்து நுவரெலியா செல்லும் வழியில் நானுஓயா நகரத்தைக் கடந்து செல்லும்போது இடப்பக்கத்தில் காணப்படும் தோட்டக் குடியிருப்புகள் மாடி வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதேபோல இரட்டை வீடுகளை ரதல்ல (Radella), ரொக்வூட் (Rockwood) போன்ற தோட்டங்களிலும் காணலாம்.

ஓப்பீட்டளவில் மாடிவீடுகளிலும் பார்க்க இரட்டைத் தனி வீடுகள் நல்லமுறையில் நிர்மாணிக்கப்பட்டன. தொழிலாளர்களுக்கென அமைக்கப்பட்ட இந்த இரட்டை வீடுகள் பிற்காலத்தில் கங்காணிமார்கள், சுப்பவைசர்கள், டிரைவர்களுக்கும் வழங்கப்பட்டன. சில தோட்டங்களில் இவ்வாறான வீடுகள் staff Quarters ஆகவும் பயன்படுத்தப்பட்டன. பானா தங்கம் எழுதிய கட்டுரையில் கூட இதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பி;ட்டதுபோல 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ‘தனித்தனி வீடுகள்’ அமைக்கப்படுமா? அல்லது ‘மாடிவீடுகள்’ அமைக்கப்படுமா? என்றவாறு பலதரப்பட்ட அபிப்பி;ராயங்கள் ஒருபக்கமாக இருக்கும் போது ‘மாடிவீடுகளே’ அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஏன் மாடிவீடுகள் அமைக்கப்பட்டன? அதன் பலாபலன்கள் யாவை? மாடிவீடுகளுக்குப் பதிலாகத் தனிவீடுகள் அமைத்து அவர்களுக்கு அதனை சொந்தமாக வழங்குவதிலுள்ள சிக்கல்கள் என்ன? என்பது பற்றிய சிலவிடயங்கள் இக்கட்டுரையில் மேலோட்டமாக அவதானிக்கப்படுகின்றது.

ஏன் மாடிவீடுகள் கட்டப்பட்டன?

லயன் குடியிருப்புகளுக்குப் பதிலாக தனிவீடுகள் அமைப்பதை விட்டுவிட்டு ஏன் மாடிவீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்று பலரிடம் வினவியபோது அவர்கள் வழங்கிய விளக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன.

1.லயன் வீடுகளில் காணப்பட்ட அசௌகரியமான இருட்டு அறை, அடுப்புப் புகைகூட வெளியேற முடியாத அடைப்புகள், கணவன், மனைவி, பிள்ளைகள், புதுமணத் தம்பதிகள் என்று ஒரே அறையில் அடங்கிக் கிடைப்பதைவிட வெளிச்சமுள்ளதும் தமது பிரத்தியேக நடவடிக்கைகளுக்கு ஏதுவானதுமான வாழ்க்கைமுறைக்கு பொருத்தமானது மாடிவீட்டுத் திட்டமாகும்.

2. 1990களில் திட்டமிடும்போது தனி வீடுகளாயின் சுமார் 150,000 வீடுகள் அமைக்க வேண்டும். அவ்வாறாயின் வருடத்தில் 10,000 வீடுகள் அமைத்தாலும் திட்டம் நிறைவுபெற 15 ஆண்டுகளாவது தேவைப்படும். ஆனால் மாடிவீடுகள் என்றால் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

3. தனிவீடுகள் அமைத்துக் கொடுத்தால் அதனை தொழிலாளர்கள் வெளியார்களுக்கு விற்றுவிடலாம் அல்லது வாடகைக்கு வழங்கலாம். தோட்டங்களில் அமைக்கப்பட்ட இவ்வாறான தனிவீடுகள் பல பறிபோய்விட்டன. ஆனால் இப்போது இருப்பது போல லயன் அமைப்பில் மேல்மாடியுடன் அமைத்துக் கொடுத்தால் அப்படியான குடியிருப்புக்களை வெளியார்கள் விரும்பமாட்டார்கள.; அதனை சொந்தமாகவும் பெற்றுக் கொள்ள முனையமாட்டார்கள். இவ்வாறான நிலையில் லயன்களுக்குப் பதிலாக மாடிவீடுகளை வழங்கினால் தொழிலாளர்களின் இருப்பை பாதுகாக்கலாம் என்றும் கருதப்பட்டது.

4.மாடிவீடுகளை நிர்வகிப்பதற்கு மேலதிக செலவுகள் தேவைப்படுவதில்லை. அதனால் அவர்கள் தோட்டத்தில் வழங்கப்படும் சம்பளத்திலேயே சமாளிக்கக் கூடியதாயிருக்கும்.

5.மாடிவீட்டில் வாழ்வதும் ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது. காலம் காலமாக லயத்தில் வாழ்ந்தவர்கள் ‘மாடிவீடுகளில் தான் வாழ்கிறோம்’ என்ற பெருமையுடன் வாழ்வதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என்றும் எடுத்துக்காட்டப்பட்டது.

6.தோட்டத்தில் இப்போது 150,000 குடும்பங்கள் இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 7 பேர்ச் வீதம் தனி வீடுகள் அமைக்கக் காணிகள் இல்லை. அவ்வாறாயின் இருக்கின்ற தேயிலைச் செடிகளைப் பறித்துவிட்டு வீடுகளை மட்டுமே கட்டலாம். அவ்வாறாயின் அவர்கள் எங்கே வேலை செய்வர்? தேயிலைத் தொழிலை எப்படி நடத்துவது? என்று கேட்கின்றனர். இவ்வாறான நிலையில் இருக்கின்ற லயன் காம்பிராக்களுக்குப் பதிலாக அதே இடத்தில் அமைக்கப்படும் மாடிவீடுகளால் தோட்டங்களில் உள்ள தேயிலைக் காணியில் எவ்வித குறைபாடும் ஏற்படப் போவதில்லை என்ற அபிப்பிராயமும் காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்டது போல பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் தனிவீடுகள் அமைக்க ‘முழுத்தேயிலைச் செடியையும் பறித்தெடுக்க வேண்டியேற்படும்’ என்ற வாதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.

உதாரணமாக ஒருவருக்கு 7 பேர்ச் காணித்துண்டில் வீடுகட்ட வேண்டுமாயின் எவ்வளவு காணித் துண்டுகள் தேவைப்படும் என்பதை கணிப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு ஹெக்டேயர் காணியில் சுமார் 384 பேர்ச்சஸ் காணப்படும். 384 பேர்ச்சினை 7 துண்டுகளாக பிரிப்போமாயின் (384 ÷ 7=54.8) சுமார் 55 துண்டுகளாக பிரிக்க முடியும். அவ்வாறெனின் ஒரு ஹெக்டேயர் காணியில் வீடு, நடைபாதை மற்றும் தொடர்பாடல் வசதிகளுடன் சுமார் 30-35 வீடுகளையே நிர்மாணிக்க முடியும். அவ்வாறாயின் இப்போது தோட்டங்களில் நிரந்தரமாக பதிவுப் செய்துள்ள சுமார் 150,000 தொழிலாளர் குடம்பங்களுக்குத் தேவைப்படும் காணித்துண்டின் அளவினைக் கணிப்பிடலாம். 

தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் 200,000 இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையானது தோட்டங்களில் நிரந்தரமாகப் பதிவு செய்துகொண்ட தொழிலாளர்களின் குடும்பம் மட்டுமன்றி தற்காலிமாக தோட்டங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுடன், கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட தனிவீடுகள் அல்லது மாடிவீடுகளில் வசிப்பவர்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படும். நாம் ஏற்கனவே அறிந்தது போல சுமார் 33 வீதமானவர்கள் தனியான அல்லது மாடிவீடுகளில் வாழ்கின்றார்கள். அவ்வாறெனின் 200,000 குடும்பங்களில் 33 வீதத்தைக் கழிக்க வேண்டும் அப்படியானால் லயன்களில் உள்ள தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களாக வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை (200000-66000) 134,000 ஆகக் காணப்படலாம். ஒரு குடும்பத்திற்கு 7பேர்ச் வழங்க வேண்டுமாயின் (134,000×7) 938,000 பேர்ச்சஸ் காணிகள் தேவைப்படும். 938,000 பேர்ச்சஸ் என்பதை ஹெக்டயரில் கணிப்பிடுவோமாயின் (938,000÷384 பேர்ச்சஸ் = 2442) சுமார் 2450 ஹெக்டேயர் பரப்புள்ள காணித்துண்டாகும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு ஹெக்டேயரில் 30-35 வீடுகளை மட்டுமே அமைக்கலாம் என்றால் 134,000 குடும்பத்திற்கும் தேவைப்படும் காணியின் அளவு (134,000÷30=4466) சுமார் 4470 ஹெக்டயர்கள். ஒரு ஹெக்டேயரில் 35 குடும்பங்கள் எனின் (134,000÷35=3828) சுமார் 3830 ஹெக்டேயர்கள் தேவைப்படும்.

பெருந்தோட்டங்களிலிருந்து இக்காணிகளை வீடமைப்பிற்காகப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படவிருக்கும் பாதிப்புக்களையும் அவதானித்தல் நல்லது. இதன்படி ஒரு ஹெக்கடேயரில் 35 வீடுகள் என்றவாறு 134,000 வீடுகள் அமைக்க சுமார் 3830 ஹெக்டயர் காணிகளே தேவைப்படுகின்றது. இவ்வாறாயின் இன்று பெருந்தோட்டக் கம்பனிகளிடம் தேயிலை, இறப்பர் செய்வதற்கெனப் பயன்படுத்தும் காணிகளின் மொத்தப் பரப்பு சுமார் 122,000 ஹெக்டேயர்களாகும் இதில் 3830 ஹெக்டேயர் என்பது (3830÷122,000×100) சுமார் 3 வீதமான காணியாகும். கம்பனிகள் பயன்படுத்தம் காணியில் 3 வீதத்தினை தொழிலாளர்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்துவதை தேயிலைத் தொழிலுக்;கு செய்யும் துரொகமாகக் கூறுவதற்கில்லை. இப்போது அவர்கள் வாழ்கின்ற இடத்திலேயே 7 பேர்ச் அளவிலான வீடுகளும் நிர்மாணிக்கப்படுமாயின் வீடுகளுக்காகப் பயன்படுத்தப்போகும் காணியின் அளவு 3830 ஹெக்டேயர்களிலும் பார்க்க குறைவாகவே காணப்படும்.

இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்ட காணிகள் என்று சுமார் 37,000 ஏக்கர் காணிகளை அரசாங்கம் மீட்டெடுத்தது. அக்காணிகளை 12,000 இளைஞர்களுக்கு மாற்றுப் பயிர் நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்படும் என்றனர். அவை முழுமையாகப் பயன்படுத்தப்படாது போனால் அக்காணியையும் தனிவீடுகள் அமைக்கப் பயன்படுத்தலாம். இதன்போது இப்போதிருக்கும் தேயிலை, இறப்பர் காணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாத அளவில் வீடமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும் தோட்டங்களிலிருந்து சமூக நலன்களுக்காக காணிகள் பெற்றுக்கொள்வது இலகுவான காரியமல்ல. ஏற்கனவே பாடசாலைகள் அமைக்கவும் சிறுவர் நிலையங்கள் அமைக்கவும் காணிகள் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். எனினும் இறுதியில் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. சிறுவர் நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டன. இதனூடாக இந்த இரண்டு துறைகளிலும் குறிப்பிட்டளவு வளர்ச்சி காணப்பட்டன. ஆனால் வீடு மனிதனின் அடிப்படை உரிமையாகும். மனிதனின் அடிப்படைத் தேவையில் உணவு, உடை என்பதற்கு அடுத்ததாக உறையுள் (வீடு) அமைந்துள்ளது. இந்த உரிமையை எவரும் மறுப்பதற்கில்லை. அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் உரிமை கிராமிய, நகர மக்களுக்கு இருப்பது போல இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மூன்று தலைமுறையாக உழைக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.


கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்
நன்றி- வீரகேசரி

2013 இல் தேயிலை உற்பத்தி 339 மில்லியன் கிலோ- வருமானம் 1.6 பில்லியன் ரூபா

$
0
0
நாட்டில் 2013 ஆம் ஆண்டில் 339 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்தி வரலாற்றுடன் ஒப்பிடுகையில் இது பாரிய சாதனையாகும். இதன்மூலம் நாட்டுக்கு 1.6 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மாத்தறை கொட்டபொல மொரவக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் 2012 ஆம் ஆண்டில் 328 மில்லியன் கிலோ தேயிலையே உற்பத்தி செய்ய முடிந்தது. தேயிலை செய்கைக்கு வழங்கப்படுகின்ற உர மானியம் காரணமாகவே தேயிலை உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது.

2013 ஆம் ஆண்டு 70 வீதமான தேயிலை சிறு தேயிலை உரிமையாளர்களினாலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சிறு தேயிலை தோட்டங்களுக்கு பல்வேறு வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தேயிலைக்கு உலகம் முழுவதும் உயர்வான கேள்வி ஏற்பட்டுள்ளது.

தேயிலை செய்கைக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டெயருக்கு 350000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. 3500 ரூபா பெறுமதியான 50 கிலோ கொண்ட உரம் 1500 ரூபாவுக்கு வழங்கப்படுகின்றது. 

ஒரு காலத்தில் ஒரு கி.கி தேயிலை கொழுந்தின் விலை 25 ரூபாவாக குறைவடைந்தது.

ஆனால் தற்போது 90 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. எனினும் தேயிலை செய்கைக்கு வழங்குகின்ற நிவாரணங்களை அரசாங்கம் குறைக்கவில்லை.

எமது நாடு சிறிய நாடாகும். எனவே நிலத்தை விரிவுபடுத்திக்கொள்ள முடியாது. இருக்கின்ற தேயிலை செய்கையை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்றார்.

இலங்கையை பொறுத்தவரையில் 206104 ஹெக்டெயர் நிலத்தில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றில் 70 வீதமானவை சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.அதாவது 397223 சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் 120664 ஹெக்டெயர் நிலத்தில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் 15 இலட்சம் பேர் தங்கிவாழ்கின்றனர். இலங்கையில் தனிநபர் தேயிலை பாவனையானது 1.3 கிலோ கிராமாகும். 14 மாவட்டங்களில் சிறு தேயிலை உற்த்தியாளர்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இரத்தினபுரி காலி மாத்தறை போன்ற மாவட்டங்கள் அவற்றில் முன்னணியில் உள்ளன.

தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாக செயற்படுகின்றனர்: சதாசிவம்

$
0
0
ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட ஆலோசனை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை முன்மொழிகின்றபோது ஒரு சில அரசியல்வாதிகள் அவ்விடயத்தில் கண்மூடித்தனமாக செயற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களை துரும்பாக உபயோகித்து ஒரு சிலர் அரசியல் இலாபம் பெறுகின்றனர். அந்நிலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனக் கோரி அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது மலையக மக்கள் தனியொரு தேசிய சிறுபான்மை இனமென்றும் அம்மக்களுக்கென தனியான கலாசாரம் பொருளாதார கட்டமைப்பு என்பன உண்டு என தொடர்ந்தேர்ச்சியாக குரல்கொடுக்கப்படுகின்ற போதும் அவர்களின் வாழ்வாதாரம் பரிதாபகரமானதாகவே உள்ளது.

இவர்களால் இலங்கை அரசு பொருளாதாரத்தில் பல நன்மைகள் அடைந்துள்ள போதிலும் இம்மக்களின் வாழ்வாதாரம் அன்றும் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. இம்மக்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் பொருளாதார ரீதியில் இலங்கையை உலகத்திற்கு உயர்த்தியது.

இந்நிலையில் அரசியல் ரீதியான ஒரு கட்டமைப்புக்குள் முழுமையாக இவர்களை செல்ல விடாது ஒருசில தொழிற்சங்கத் தலைவர்கள் இம்மக்களை அடகு வைத்து மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் பேரம் பேசும் சக்தி எனும் மாயையை மக்களிடம் புகுத்தி பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் தமக்கும் தாம் சார்ந்தோருக்கும் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்று வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் தன்மையை அடிப்படையகாகக் கொண்டு இவர்களது இன அடையாளத்தை கருத்தில் கொண்டும் இம்மக்கள் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கும் பொருளாதாரத் தாக்கங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட ஆலோசனை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகின்றபோது ஒரு சில அரசியல்வாதிகள் மௌனிகளாக இருந்து கண்மூடித்தனமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பல ஏக்கங்களோடும் எதிர்பார்ப்புகளோடும் வாழ்கின்ற மக்களை தொடர்மாடி என்று கூறி மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு கொண்டு செல்வது இம்மக்களின் உழைப்பை உறிஞ்சுபவர்களின் நன்றிக் கடனாகாது.

மாடி வீடு என்ற மாயையில் ஒரு லயன் அறைக்கு மேல் மேலும் ஒரு லயன் அறையை கட்டிக்கொடுத்து இம்மக்களை அவமானப்படுத்தியது போதும். ஜனாதிபதி நீட்டும் வீட்டுத்திட்ட நேசக்கரத்துக்கு மலையகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் தொழிற்சங்க தலைவர்களும் நலன் விரும்பிகளும் ஆரோக்கியமான வீட்டுத் திட்டமொன்றை அமைக்க வேண்டும். இவ்வீட்டுத்திட்டமானது மலையக புவிசரிதவியலுக்கு ஏற்ப சகல வசதிகளையும் கொண்ட தனிவீடாக அமைவதே பொருத்தம். ஆகவே இது விடயத்தில் அனைவரும் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்ட உடமையாளர்களாக மாற வேண்டும்

$
0
0
தோட்டத் தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால எதிர்;பார்ப்பாகும் என இ.தொ.கா பொதுச்செயலாளரும், கிராமிய கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பத்தனை பிரதேசத்தில் முன்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக வேர்ல்ட் விஷன் நிறுவனம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாக முன்பள்ளி கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. இதற்கெனபல லட்சம் ரூபாவை செலவிட்டு வருகின்றது. ஆரம்ப கல்விக்கு சரியான அடித்தளம் இடப்பட்டால்தான் உயர்கல்வியில் மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகின்றது. தொழிலாளர்களும் தமக்கு கிடைத்த இந்த வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று நாம் விரும்புகின்ற அதேவேளையில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளியாகவே இருக்காமல் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். தோட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2- 3 ஏக்கர் தேயிலை காணிகளை வழங்கி அதை தொழிலாளர்களே பராமரித்து கொழுந்து பறித்து அதை தோட்ட நிர்வாகத்துக்கு விற்பனை செய்து வருமானத்தை ஈட்டி முதலாளிமார்களாக வளர வேண்டும் என்பதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான ஆலேலாசனைகளை முன்வைத்துள்ளோம். அவ்வாறு நாம் காணிகளை பெற்றுக்கொடுக்கும் போது அவற்றை வெளியாருக்கு யாரும் விற்பனை செய்து விடக்கூடாது. தங்களுக்கு கிடைத்த காணிகளில் தகுந்த வருமானத்தை தேடிக்கொள்வதோடு அந்தக் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். 

கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட சுமார் 6,000 குடியிருப்புக்கள் வெளியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு அவற்றை விற்றவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் குடியிருப்புக்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் தீபாவளி பண்டிகை இரண்டு தினங்களுக்கு மாத்திரமே கொண்டாடப்பட வேண்டியதொன்றாகும். கடந்த வருடனம் ஒரு தோட்டத்தில் 10 நாட்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளனராம். இந்த வருடம் ஒரு தோட்டத்தில் 30 நாட்கள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வேலைக்குச் செல்லாமல் செய்கின்ற தொழில் மீது அக்கறை இல்லாமல் இருந்தால் தேயிலை உற்பத்தி எவ்வாறு பெருகும். தொழிலாளர்களுக்கு எவ்வாறு வருமானம் கிடைக்கும்? தமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, தொழிலாளர்கள் இந்த நாட்டில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக நாம் மேற் கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு, கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள சமூகம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றார்கள்

$
0
0
மனித உரிமைகள் தொடர்பாக தற்போது அதிகமாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றமை வருந்தத்தக்க விடயமாகுமென மலையக மக்கள் முன்னணியில் அரசியல் பிரிவுத் தலைவர் வி. இராதாகிருஷ்ணன் நுவரெலியாவில் பொது மக்களுடனனான சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். 

அவர் அங்கு தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பின் சிகரமாக திகழ்கின்றார்கள். நாட்டுக்கு உரமூட்டுகிறார்கள.; இவர்களுக்கு நீண்டகால வரலாறு இருக்கின்ற போதும் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்பது கசப்பான உண்மையாகும். தொழிலாளர்கள் குடியிருக்கும் லயன்கள் சுமார் 200 வருடத்துக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டதாகும். இந்த வாழ்க்கை முறையை மாற்றியமைத்து தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற போதும் தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதில் இழுபறி நிலைகளே காணப்படுகின்றன.

தொழிலாளர்களின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்படவில்லை. இவர்களை ஏணியாக வைத்து பலர் முன்னேறி செல்கின்ற போதும் தொழிலாளர்கள் இருந்த இடத்திலேயே இருந்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற உலகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். அவர்களின் கல்வி, கலை, கலாச்சாரம் விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளின் அபிவிருத்தி கருதி நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் பிரச்சினைகள் மாறுபட்ட தன்மை கொண்டவை மலையக மக்களுக்கும் தனித்துவமான பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. இவற்றை தீர்ப்பதற்கு அரசு ஆர்வம் காட்ட வேண்டும். இதேவேளை மலையக தலைமைகள் அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும். 

Viewing all 376 articles
Browse latest View live