Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all 376 articles
Browse latest View live

தோட்ட உத்தியோகத்தர்களின் காணிப்பிரச்சனை

$
0
0
தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கு ஏழு பேர்ச்சஸ் காணித்துண்டு கொடுத்ததைப் போன்று தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் வீடு கட்டிக்கொள்வதற்கு 10 பேர்ச்சஸ் காணித்துண்டுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவுடன் இப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்த்தன பொதுச்செயலாளர் கிங்ஸ்லி ராஜேந்திரன் றொபர்ட் ஆகியோர்களின் எற்பாட்டில் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் சமரசிங்க இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு உரையாற்றுகையில் தோட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சனை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் நேரில் பேசுவதற்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் என்றும் ஜனாதிபதிக்கும் உங்களின் சக்தி நன்கு தெரியும். அவர் பெருந்தோட்ட மக்கள் மீது நல்ல நம்பிக்கை கொண்டுள்ளார். 

ஆரம்ப கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் எடின்பரோ தோட்டத்தில் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு காணி வழங்குவதற்கு தோட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இவர்களின் பிரச்சனை பல வருடகாலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த போதிலும் இப்போதுதான் செயற்படுகிறது. 

கண்டி, களுத்துறை, நாவலப்பிட்டி, ட்டன், நுவரெலியா, தலவாக்கலை, அவிசாவெல்ல, கேகாலை ஆகிய பகுதியிலிருந்து தோட்ட உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 


டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பெரும் தீ

$
0
0
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியுள்ளது. நேற்று மாலை பரவிய தீ காரணமாக சுமார் 50 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மலையகத்தில் தற்போது காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக மலையகத்தில் உள்ள காடுகள் சிலவற்றுக்கு இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு வருகின்றனர்.

இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களின் தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படி பொதுமக்களிடம் நுவரெலியா மாவட்ட செயலாளர் டி..பி.ஜி.குமாரசிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுவரெலியாவில் வறட்சி; இரவில் பனியும் குளிரும்

$
0
0
நுவரெலியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் வறட்சி நிலவுகின்றது. பகல் வேளையில் வெய்யிலினால் உஷ்ணம் அதிகமாகவும் இரவில் பனி பெய்வதால் கடும் குளிரும் காணப்படுகின்றது.

நுவரெலியாவில் கடந்த ஒருவாரமாக பனி பெய்து வருவதால் உருளைக்கிழங்கு பீட்றூட் போன்ற செடிகளும் ஒரு சில தோட்டங்களில் தேயிலை செடிகளும் கருகி போயுள்ளன. 

மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை பனியினால் குளிர் அதிகமாக காணப்படுவதால் பாடசாலை மாணவர்களும் அதிகாலையில் தொழிலுக்கு செல்பவர்களும் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். 

இதேவேளை நுவரெலியாவில் குடி நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர சபை விநியோகிக்கும் குழாய் குடி நீரும் காலையிலும் மாலையிலும் மாத்திரம் விநியோகிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிரந்தர அதிபரை நியமிக்ககோரி ஆர்பாட்டம்

$
0
0
நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு வலியுறுத்தி பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பெற்றோர்கள் தெரிவிக்கையில் நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி கடந்த எட்டு மாதங்களாக நிரந்தர அதிபர் இல்லாமல் செயற்படுகின்றது. இது தொடர்பாக தாங்கள் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகளிடமும் பிரதேச அரசியல்வாதிகளிடமும் அமைச்சர்களிடமும் மத்திய மாகாண சபை அமைச்சர்,உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தாங்கள் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காத பட்சத்தில் தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.அந்த விசாரணை முடிவடைந்து அவர் வேறு ஒரு பாடசாலைக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் குறித்த நியமனத்தை அடுத்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் ஒருவரை நியமிக்க நுவரெலியா கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக அதிபர் ஒருவரை சிபாரிசு செய்து வலய கல்வி பணிப்பாளர் எம்.ஜீ.ஏ.பியதாச 24.01.2014 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை மத்திய மாகாண கல்வி பணிமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். எனினும் இது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை இனங்காட்டிக்கொள்ள விரும்பாத அதிகாரியொருவர்  கருத்து தெரிவிக்கையில், புதிய கல்வி செயலாளர் விவசாய திணைக்கள அமைச்சில் இருந்து நியமனம் பெற்று வந்திருக்கின்றமையால் இடமாற்றம் தொடர்பாக கோவைகளை பார்வையிட தனக்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்ததாக அந்த அதிகாரி தெரிவிக்கின்றார்.

பாதையை புனரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

$
0
0
நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை நகரத்தில் இருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மணிக்பாலம் கால்நடை பண்ணைக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பணிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றதால் இப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களக்கு முகம் கொடுக்கின்றனர். 

இதேவேளை ஹோம்வூட் தோட்டம் மற்றும் போபத்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களும் கர்ப்பிணி தாய்மார்களும் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கும் ஆளாகின்றனர். 

நடந்து முடிந்த மத்திய மாகாண சபை தேர்தலின் போது இப்பாதையை புனரமைப்பு செய்வதாக வாக்குறுதிகளை வழங்கியவர்கள் தேர்தலின் பின் இப்பிரதேசத்தை கண்டும்காணாமல் இருப்பதாக மக்கள் விசனம் தொவிக்கின்றனர். 

இப்பாதையை புனரமைத்து தருமாறு நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும் எவரும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று (13.02.2014) மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்.

தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா

$
0
0
மலையகத்தின் அடையாளமாக இருந்து கடந்த ஐம்பதாண்டு காலமாக எழுத்துலகில் முத்திரைப்பதித்து வெற்றிநடை போடும் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஈழத்து இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவருமான தெளிவத்தை ஜோசப்பின் இரண்டாவது சிறுகதை நூலான ´தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்´ வெளியீடும் அவரது ஏனைய இரண்டு நூல்களின் அறிமுகமும் பாராட்டு விழாவும் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது. 

தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் 

1960 களில் இருந்து தொடர்ச்சியாக ஐம்பது வருடமாக எழுதி வரும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள் 1979 ஆம் ஆண்டு பேராசிரியர் மு.நித்தியானந்தன் தனது அவர்களின் வைகறை பதிப்பகம் ஊடாக வெளியிட்ட ´நாமிருக்கும் நாடே´ தொகுதிக்குப் பின்னர் நூலுருப்பெறவில்லை. அந்தக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக மல்லியப்புசந்தி திலகரின் ´பாக்யா பதிப்பகம்´ ´தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்´ எனும் மகுடத்தில் 17 கதைகளை தொகுத்து வெளியீடு செய்துள்ளது. 

இதன் வெளியீட்டு விழா அன்றைய தினம் கொழும்புத் தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கோ.நடேசய்யர் அரங்க அமர்வில் நடைபெறவுள்ளது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் காப்பாளரும் முன்னாள் அமைச்சுச் செயலாளருமான எம்.வாமதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நூலினை மூத்த பத்திரிகையாளர் திருமதி.அன்னலடசுமி ராஜதுரை வெளியிட்டு வைக்க புரவலர் ஹாசிம் உமர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் காப்பாளர் அமரசிங்க குடகல்லார ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். நூலாய்வுரையை திறனாய்வாளர் லெனின் மதிவானம் நிகழ்த்தவுள்ளார். 

மீன்கள் 

தமிழகத்தின் எழுத்தாளர் ஜெயமோகனின் பிரபல படைப்பான ´விஷ்ணுபுரம்´ பெயரில் இயங்கும் வாசகர் வட்டத்தினரே தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு ´விஷ்ணுபுரம்´ விருதினை வழங்கி விழாவெடுத்திருந்தனர். அதே விழாவில் இன்னுமொரு பரிசாக தெளிவத்தையின் 9 சிறுகதைகளை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே தொகுப்பாசிரியராக ´மீன்கள்´ எனும் மகுடத்தில் வெளியிட்டு தெளிவத்தைக்கு கௌரவம் செய்தார். தெளிவத்தையின் ´கூனல்´ என்ற சிறுகதையை உலகப்பெருமை மிக்க சிறுகதையென எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார். 

தெளிவத்தையின் ´மீன்கள்´ எனும் சிறுகதையை தமிழில் வெளிவந்த முதல் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக ஜெயமோகன் பட்டியலிட்டுள்ளார். அந்த ´மீன்கள்´ தொகுப்பின் அறிமுக நிகழ்வு மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அரங்க அமர்வாக ´ஞானம்´ ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது. நூலின் முதல் பிரதியை கொடகே பதிப்பக உரிமையாளர் தேசபந்து ஸ்ரீ சுமன கொடகே அவர்கள் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் நடராஜா, பேராசிரியர் தை.தனராஜ், கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் இரகுபதி பால ஸ்ரீதரன், சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் கமல் பெரேரா ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர். நூலாய்வுரையை கவிஞரும் சிறுகதையாசிரியருமான அல்அஸ{மத் ஆற்றவுள்ளார். 

குடைநிழல் 

தேசிய கலை இலக்கிய பேரவையும் - சுபமங்களாவும் இணைந்து நடாத்திய போட்டியில் பரிசு பெற்ற நாவலான தெளிவத்தை ஜோசப்பின் ´குடைநிழல்´ கொடகே பதிப்பகத்தினரால் ஏற்கனவே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாவலின் பெறுமதி; கருதி அதனை மறுபதிப்பு செய்து தமிழகத்தின் ´எழுத்து´ பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். விஷ்ணுபுரம் விருது விழாவில் இன்னுமொரு பரிசாக அமைந்த இந்த மறுபதிப்பு நூல் இவ்விழாவில் மலையக சிறுகதை முன்னோடி என்.எஸ்.எம்.இராமையா அரங்க அமர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நூல் தமிழகத்தில் வெளிவருவதற்கு பங்களிப்பை வழங்கிய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் எழுத்தாளரும் கலைஞருமான அந்தனிஜீவா நூலினை வெளியிட்டு வைக்க துரைவி பதிப்பக உரிமையாளர் துரைவி.ராஜ்பிரசாத் சட்டத்தரணி சோ.தேவராஜா கவிஞர் மேமன்கவி மற்றும் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஹேமசந்திர பத்திரண ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். 

தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பாராட்டு 

தமிழகத்தில் ´விஷ்ணுபுரம்´ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதன் மூலம் தமிழக மக்களுக்கு மலையக மக்கள் பற்றிய காத்திரமான செய்தியினை எடுத்துச் சென்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆளுமையை பாராட்டி மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கௌரவம் செய்யவுள்ளது. 

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவரான மு.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெறும் பாராட்டு நிகழ்வில் மன்றத்தின் இணைச் செயலாளர்களான ஜி.சேனாதிராஜா இரா.சடகோபன் ஆகியோருடன் இலக்கிய செயற்பாட்டாளர் மு.தயாபரன் மற்றும் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிப்புதீன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கவுள்ளனர். 

நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் ஒழுங்கமைப்பினை மல்லியப்புசந்தி திலகர் மேற்கொள்ள சுப்பையா கமலதாசன் வரவேற்புரை நிகழ்;த்தவுள்ளார். அமுதவிழா காணும் தெளிவத்தை ஜோசப் அவர்களின பிறந்த நாளான அன்று அவரது வாழ்க்கைப் பயணத்தினை தொகுப்பாக ஆவணப்படுத்தும் காணொளியும் தேநீர் விருந்தும் சிறப்பு நிகழ்வாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்

$
0
0
மலையக மக்களுக்கு இந்தி அரசினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன் பொதுச்செயலாளரும், கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கெட்டம்பே விலங்கள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இந்திய வீட்டுத்திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

இந்திய வீட்டுத்திட்டம் கிராமவாரியாக அனைவருக்கும் வழங்கப்படும் எனவும், மேலும் அங்கு பாடசாலை, கோவில், தேவாலயங்கள், பள்ளிவாசல் போன்ற சகல வசதிகளும் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரஜாசக்தி, நவசக்தி ஆகிய செயற்திட்டத்தினூடாக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் உயர் அதிகாரிகள் தோட்ட முகாமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

மலையகத்தில் கடும் வரட்சி

$
0
0
மலையகத்தில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மலையக மக்களுக்கு மற்றும் கிராமபுர மக்களுக்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைபோல் விவாசாயிகளுக்கும் தேயிலைக்கும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

மலையகத்தில் நீர்தேக்கமான காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களில் நீர்மட்டம் மின்சாரத்தை உற்பத்தியை செய்யமுடியாத அளவில் குறைந்து இருப்பதாக மின்சார சபையும் தெரிவிக்கின்றது. 

தேயிலை தோட்டங்களில் தேயிலை கருகி இருப்பதனால் தோட்ட தொழிலாளிகளின் வேலை நாட்கள் குறைந்துள்ளதால் அவர்களின் பொருளாதார வசதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையக பகுதிகளில் தோட்ட தொழிலாளியும் கிராமபுர மக்களும் மரக்கறி உற்பத்தியை மிக சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் தற்போது இருக்கும் காலநிலையின் காரணமாக மரக்கறி வகைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். 

அதேபோல் மலையக பகுதிகளில் குடிநீர் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீருக்காக குடிநீர் காணப்படும்  தூர இடங்களுக்கு சென்று குடிநீரை பெறுகின்றார்கள். 

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு புற்கள் இல்லாத காரணத்தால் பால் உற்பத்தியும் குறைந்திருப்பதாக பால் உற்பத்தியுள்ளார்கள் தெரிவிக்கின்றனர். 

நீர் காணப்படும் இடங்களில் தீ வைத்ததால் குடிநீருக்கு மிக பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவிக்கின்றார். 

மலையகத்தில் இவ்வாறான காலநிலை தொடர்ந்தும் காணப்பட்டால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Article 5

சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு 10,000 ரூபா அபராதம்

$
0
0
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் விக்னேஸ்வரன் என்ற சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அட்டன் நீதிமன்றம் 10ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது

குறித்த சிறுவனின் தந்தை, தாய் இருவரும் வெளிநாட்டில் பணிப்புரிவதால் பாட்டியின் பாதுகாப்பிலேயே குறித்த சிறுவன் இருந்துள்ளான். இந்நிலையில் குறித்த சிறுவன் பாடசாலைகளில் சில பொருட்களை திருடுவதனால் தான் பாட்டி விறகுகட்டையால் சூடு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து பாட்டியை கைது செய்து அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் தேவை- தலைநகரின் தேவை என்ன என்பதை இ.தொ.கா உணர்ந்திருக்கிறது

$
0
0
தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும். வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று அவர்களது குறைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டியது பிரதானமாகும். அவ்வாறு செயற்பட்டவர்களே தயக்கமின்றி அவர்களிடத்தில் செல்லவும் முடியும்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மக்களிடத்தில் செல்வதற்கு எந்த தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. நாம் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை முன்னிறுத்தியே அவர்களிடத்தில் செல்கின்றோம். உரிமை என்றும் போராட்டம் என்றும் காலங்களை கடத்திக்கொண்டிருப்பதால் நடைபெற போவது எதுவுமில்லை. எனவே, இன்றைய நிலையினை உணர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து ஆக்க பூர்வமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்களில் இறங்க வேண்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அது இடமறிந்து செயல்படும். மலையகத்தின் தேவை என்ன என்பதையும் தலைநகரின் தேவை என்ன என்பதையும் காங்கிரஸ் நன்கு உணர்ந்திருக்கின்றது. தலைநகர் வாழ் தமிழ் மக்களிடத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைப் பற்றி பேசுவதால் அர்த்தம் இருக்காது. அதேபோன்றுதான் மலையகத்துக்கு சென்று தலைநகர் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவது பிரயோசனம் அற்றதாகும் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை இ.தொ.கா. நிறைவேற்றிக் காட்டும்.

மழைக்காடுகள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வது நன்மை

$
0
0
இலங்கையின் பெருந்தோட்டங்களை பொறுத்தமட்டில் தொழிலாளர்களை ஊக்குவித்து தொடர்ந்தும் பெருந்தோட்டங் களில்  நிலைத்திருக்கச் செய்ய  வேண்டிய ஒரு கட்டாய தேவையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் காணப்படுகின்றன. ஏனெனில் நீண்ட காலப் போக்கில், பெருந்தோட்டங்களில் முக்கிய பங்காளர்களாக திகழும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் முற்றாக இல்லாமல் போகக்கூடிய ஒரு நிலை காணப்படுகிறது. இதற்கமைவாக, பெருந் தோட்ட கம்பனிகள், பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளன. 

இதில் ஓர் அங்கமாக மழைக்காடுகள் சான்றிதழ்களை குறிப்பிட முடியும். சூழல் பாதுகாப்புடன் நேரடி தொடர்புடைய இந்த மழைக்காடுகள் சான்றிதழின் மூலம் சூழல், பெருந்தோட்ட கம்பனிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் நன்மையடையக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் கம்பனியின் மூலம் பராமரிக்கப்படும் பெயார்வெல் எஸ்டேட் பகுதியில் இவ்வாறான மழைக்காடுகள் சான்றிதழ் செயன்முறை பின்பற்றப்படும் விதம் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருந்தது.

இதற்கமைவாக, பெயார்வெல் பெருந்தோட்டத்தின் பொது முகாமையாளர் சேனக அலவத்தேகம தமது பெருந்தோட்டத்தில் பின்பற்றப்படும் மழைக்காடுகள் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கையில், 

'உண்மையில் மழைக்காடுகள் செயற்பாடுகள் என்பது கம்பனிக்கு மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் நன்மை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சான்றிதழை பொறுத்தமட்டில் நாம் கட்டாயமாக 10 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வருடமொன்றுக்கு ஒரு தடவை வழங்கப்படும் இந்த சான்றிதழானது, கடுமையான பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. அனைத்து விதிமுறைகளும் ஒழுங்காக பின்பற்றப்படும்பட்சத்தில் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாம் இந்த சான்றிதழை பெற்றுக் கொள்ள அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறுங்கால நோக்கில் கம்பனிகளுக்கு இந்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என்பது செலவீனங்களை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்த போதிலும், நீண்ட காலப் போக்கில் அனைத்து தரப்பினர்களுக்கும் அனுகூலங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது'என்றார்.

மழைக்காடுகள் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு பத்து தத்துவங்கள் பிரதானமாக பின்பற்ற வேண்டியுள்ளது. இவற்றில் சமூக மற்றும் சுற்றாடல் முகாமைத்துவ முறைமை, சூழல் தொகுதி பராமரிப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பாரபட்சமற்ற நடைமுறையும் சிறந்த தொழில் சூழலையும் பணியாளர்களுக்கு வழங்கல், தொழில் சம்பந்தமான சுகாதாரமும் பாதுகாப்பும், சமூகத் தொடர்புகள், ஒன்றிணைக்கப்பட்ட பயிர் முகாமைத்துவம், மண் முகாமைத்துவமும் பராமரிப்பும் மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட கழிவு முகாமைத்துவம் போன்றன உள்ளடங்குகின்றன.

இந்த தத்துவங்கள் தொடர்பில் சேனக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'இந்த தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது என்பது ஆரம்பத்தில் மிகவும் சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. நாம் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த தத்துவங்களை பின்பற்றி வருகிறோம். தொழிலாளர்கள் மத்தியிலும், தோட்;டத்தில் வசிப்பவர்கள் மத்தியிலும் இந்த தத்துவங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாம் சிறியளவிலான கருத்தரங்குகளை மாதாந்தம் முன்னெடுத்து வருகிறோம். இதற்கு மேலதிகமாக தோட்டத்தில் பணியாற்றும் தலைவர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட தொழிலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் ஊடாக இந்த மழைக்காடுகள் தத்துவங்கள் தொடர்பான முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரிடமும் இந்த விளக்கங்களை கொண்ட புத்தகங்கள் காணப்படுகின்றன. 

மழைக்காடுகள் தத்துவங்களுக்கு அமைவாக ஊழியர்கள் மத்தியில் தற்பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. இதன் ஓர் அங்கமாக கிருமி நாசினி தெளித்தல் செயற்பாடுகளுக்கு பாதுகாப்பான ஆடைகளை வழங்கல், பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

நான் இங்கு 1975ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். எனது குடும்பத்தில் ஆறு பேர் காணப்படுகின்றனர். அதிகளவு கொழுந்து காணப்படும் பருவ காலத்தில், மாதமொன்றில் 15000 ரூபாவை நான் பெற்றுக் கொள்வதுண்டு. அந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தற்போது பெருந்தோட்டங்களில் பணியாற்றுவது என்பது இலகுவாக அமைந்துள்ளது. எமக்கு பிளாஸ்ரிக் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. பறித்த கொழுந்தை நிரப்பிக் கொள்ள பைகள் காணப்படுகின்றன. கொழுந்தை நிறுப்பதற்கு அதிகளவு தூரம் நடந்து செல்லத் தேவையில்லை. இந்த புதிய வசதிகள் எம்மை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன.

நான் இங்கு 1972ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். எமக்கு இங்கு பணியாற்ற சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மழைக்காடுகள் தத்துவங்கள் தொடர்பில் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு விளக்கங்களை ஏற்படுத்திக் கொடுக்க நான் அதிகளவு ஈடுபாடுகளை செலுத்தி வருகிறேன். இவற்றின் அனுகூலங்கள் மற்றும் எவ்வாறு பின்பற்ற வேண்டும் போன்ற பல விடயங்களை நான் தெளிவுபடுத்தி வருகிறேன். ஓவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாம் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்வதுண்டு, வைத்திய அதிகாரி, என் போன்ற தோட்டத்தில் பணியாற்றும் ஏனையவர்கள், மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் இந்த கூட்டங்களில் உரையாற்றுவதுண்டு. இந்த கூட்டங்களில் நாம் மழைக்காடுகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய விடயங்களை நாம் தெளிவுபடுத்துகிறோம் என்றார்.

இவ்வாறு சகல பிரிவினருக்கும் அனுகூலம் வாய்ந்ததாக அமைந்துள்ள இந்த மழைக்காடுகள் செயற்திட்டம் ஏனைய பெருந்தோட்டங்களிலும் பின்பற்றப்படுமாயின், கம்பனிகளுக்கு, தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு மற்றும் சூழலுக்கும் அனுகூலம் வழங்குவதாக அமையும்.

நன்றி- தமிழ் மிரர்

மலையக மக்கள் சனத்தொகையில் வீழ்ச்சி (1911-2001)

$
0
0

நன்றி- புதிய மலையகம் 

பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள்- முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

$
0
0

பெருந்தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு உட்பட ஏனைய நலன்களை  வலியுறுத்தி கூட்டு ஒப்பந்தம் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கொழும்பிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் செயலகத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது

கடந்த முறை மேற்படி இரு சாரார்களுக்கும் இடையில்  கைச்சாத்திடப்பட்ட ஐந்து வருட கூட்டு ஒப்பந்தம்  கடந்த வருடம் அக்டோபர்  மாதத்தில் முடிவடைந்து  விட்டது. அதனைத் தொடர்ந்து  இலங்கை தோட்ட  சேவையாளர் சங்கம்   முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப்  பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக எவ்வித போராட்டமுமின்றி பேச்சுவார்த்தை மூலம்  05 வருட கூட்டு  ஒப்பந்தத்தை  மூன்று வருடங்களாக மாற்றியதுடன் கடைசியாக கடந்த வருடம்  அக்டோபர்  மாதம்  பெற்ற  சம்பளத்திலிருந்து  25 சதவிகித  சம்பள உயர்வு  உட்பட  ஏனைய நலன்களும்  நிலுவை சம்பளமும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர்  கிங்ஸ்லி ராஜேந்திரன் ரொபர்ட் தெரிவித்தார்.

இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.

$
0
0
மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இவ்வழைப்பை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாட்டின் போது  பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி இ. தம்பையா அச்சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பேசும் போது தெரிவித்தார். 29.03.2014 அன்று இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் இரண்டவாது மாநாட்டில் ஆர். இராஜேந்திரன் சங்கத்தின் தலைவராகவும் எம். தியாகராஜா பொருளாளராகவும் மற்றும் ஏனைய புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இம்மாநாட்டில் பலமான தொழிற்சங்கம் ஒன்றை கட்டுவதன் அவசியம், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி ஆராயப்பட்டதுடன் வென்றெடுக்கப்பட வேண்டிய தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அம்மாநாட்டில் உரையாற்றிய சட்டத்தரணி இ.தம்பையா மேலும் தெரிவித்ததாவது;

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களின் அடிப்படை வர்க்க, இன,  உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பொது இணக்கப்பாட்டுடன், பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவது காலத்தின் தேவையாகும். இதனை நிராகரிக்கும் தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதுடன், அவர்களின் இருப்பு நீண்டதாக இராது.

எனவே, மலையகத்தின் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான, பொது இணக்கப்பாட்டையும் பொது வேலைத்திட்டங்களையும் வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் தொழிற்சங்கங்களுக்கிடையே ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் எதிர்பார்க்கின்றது. அங்கத்துவ போட்டி மனப்பான்மையும் தேர்தல்களில் வெற்றிபெற தொழிலாளர்களின் வாக்குகளை திரட்டிக் கொள்ளும் போட்டி மனப்பான்மையும் நீக்கப்பட வேண்டும். மாறாக  தொழிற்சங்கங்களிடையே பரஸ்பர தொடர்புகளும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதனூடாகவே தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முடியும். தொழிற்சங்கங்கள் பிரிந்து நின்று எதிரிகளாக செயற்படும் போது தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் முடியாது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடியாது.

தொழிலாளர்களை வலுப்படுத்த வேண்டுமெனின் தொழிற்சங்க இயக்கம் வலுவடைய வேண்டும். அவ்வாறு வலுவடைவதற்கு தொழிலாளர்களிடையேயும் தொழிற்சங்கங்களுக்கிடையேயும் ஐக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

தொழிற்சங்கம் என்பது முதலீடு இல்லாத சுய தொழிலாகவும் பெரும் வியாபார கம்பனிகளாகவும் இருக்கும் நிலை மாற வேண்டும். அத்துடன் கம்பனிகளுக்கு எவ்வித இடையூறுமில்லாத வகையில் தொழிலாளர்களின் உழைப்பை வழங்குவதனையும், இருக்கும் உரிமைகளையும் கையுதிக்கும் சம்மதத்துடன் தொழிலாளர்களின் உழைப்பை வழங்கும் நிலையை உறுதி செய்யும் வகையில் தொழிற்சங்கங்கள் இயங்குவதை அனுமதிக்க முடியாது. தொழில் உறவை பேணல் என்பது தொழிலாளர்களின் உரிமை மறுப்பிலும் தொழிலாளர்களின் அவலத்திலும் உற்பத்தி நடைபெற்று அதிக இலாபத்தை கம்பனிகளுக்கு சென்றடைவதை அடிப்படையாக கொண்டு இருத்தலாகாது; மாறாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சி என்பவற்றில் தங்கி இருக்கிறது.

இவற்றை எல்லாம் மறுக்கும் உலகமயமாதல் சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் புதிய விதத்தில் செயற்பட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக எமது மக்கள் தொழிலாளர் சங்கம் இயங்கும். அதற்கான ஒத்துழைப்பை தொழிலாளர்களிடம் நாம் வேண்டிநிற்கின்றோம்.  இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.



1. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்

அ. தேயிலை, றப்பர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பருவத்திற்கு பருவம் வேறுபாடுடையதாகவன்றி மாதாந்த சம்பளத்தின் அடிப்படையில் நிரந்தரமான சூத்திரமொன்றினூடாக நியாயமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆ. வாழ்கை செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப வருடாந்த சம்பள உயர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. கூட்டு ஒப்பந்தம்

அ. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுகின்ற தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களினதும் பங்களிப்பும் அந்தஸ்த்தும் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆ. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான நியாயமான, நிரந்தரமான திட்டமும் வருடாந்த சம்பள உயர்வுக்கான சூத்திரமும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இ. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட தொழிலாளர்களின் ஓய்வூதி திட்டமும் முன்னேற்றகரமானவையாக பேணப்பட வேண்டும்.

ஈ. சம்பளம், சம்பள உயர்வு, தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகள் போன்றன குறைந்தபட்சம் இலங்கையில் தொழிற்சட்டங்கள் தராதரங்கள், சர்வதேச சட்டங்கள், தராதரங்களுக்கேற்ப கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் சேர்க்கப்பட வேண்டும்.

உ. தொழிலாளர்களின் நாளாந்த தொழில் உறவு பிரச்சினைகள் பற்றி பெருந்தோட்ட நிர்வாகங்களுடன் கலந்துரையாடல், இணக்கத்தீர்வு, நடுத்தீர்வு போன்ற வழிமுறைகளினூடாக தீர்க்கப்பட வேண்டும்.

ஊ. தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பூரணமாக நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வுரிமைகள் நேரடியாக சட்டவாக்கங்களினூடாகவோ மறைமுகமான நடவடிக்கைகளினூடாகவோ பறிக்கப்படகூடாது.

3. பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் உரிமை, வாழ்வு கட்டியெழுப்புவதன் அடிப்படையில் பேணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

4. தேயிலை, றப்பர் தென்னை பெருந்தோட்ட தொழிற்துறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்துறையும் ஏனைய மாற்று தொழிற்துறையும் பெருந்தோட்டத் துறைக்கு சமாந்திராக கட்டி வளர்க்க வேண்டும்.

5. தோட்டத் தொழில் துறையும் அதனோடு தொடர்புடைய மற்றும் மாற்று தொழிற்துறையினூடாக தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது வழித் தோன்றல்களுக்கும் அத்தொழில்வாய்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

6. பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கென குடியிருப்புக்கு தேவையான காணி வசதிகளுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வீதி போக்குவரத்து கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பாடசாலைகள், வைத்தியசாலைகள், நிர்வாக பரவலாக்கல் மையங்கள் போன்றன நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக கிராம அல்லது நகர குடியிருப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும்.

8. நீண்ட கால இலக்காக பெருந்தோட்டங்களும் அதனோடிணைந்த வளங்களும் பல்தேசிய கம்பனிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு தோட்டங்களில் உற்பத்திக்கென பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகள், இயற்கை வளங்கள் போன்றன தொழிலாளர்களுக்கும் அவர்களினது வழித்தோன்றல்களுக்கும் உரித்தாக்கப்பட்டு  தொழிலாளர்களின் பங்களிப்புடனான கூட்டுப் பண்ணை அடிப்படையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. மலையக மக்;கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் தேசிய அபிலாசைகள் உறுதி செய்யும் அடிப்படையில் சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்பன அடிப்படையில் அவர்களின் அரசியல் தன்னதிகாரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.

10. தமிழ் தொழிலாளர்களுக்கு இன ரீதியான மத ரீதியான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்; மொழி உரிமைகள் பேணப்பட வேண்டும்.

11. தமிழ் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களிலும் வெளியிலும் இருக்கின்ற ஏனைய உழைக்கும் மக்களுடன் விவசாயிகளுடனும் ஐக்கியப்பட்டு மேற்கொள்ளகூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

12. பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள், சிறுவர்கள் போன்றோரின் இலகுவாக ஊறுபடக்கூடிய நிலை மாற்றப்பட்டு அவர்களின் சமத்துவ உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

பெருந்தோட்டத்துறையின் சவால்கள்

$
0
0
தேயிலை என்பது சர்வதேச நுகர்வு பொருளாக அமைந்துள்ளது. இலங்கையின் மாபெரும் விவசாயத்துறையாக தேயிலை பெருந்தோட்டத்துறை அமைந்துள்ளதுடன், நாட்டின் மொத்த சனத்தொகையின் 10 வீதமான 2 மில்லியன் பேருக்கு தொழில் வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் துறையாக அமைந்துள்ளது. இந்த துறை மலையகத்தின் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யவும், குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலும் உயர்ந்த பங்களிப்பை வழங்கி வருகிறது.

2012 இல் இலங்கை தேயிலை ஏற்றுமதியின் மூலம் 160 பில்லியன ரூபா ஏற்றுமதி வருமானமாக பெறப்பட்டிருந்தது. 2013 இல் இந்த பெறுமதி 197 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஆயினும், தொடர்ச்சியாக வெளியாகி வரும் எதிர்மறையான அறிக்கைகள் துறையை சவால் நிலையில் தள்ளியள்ளது. 'சர்வதேச போட்டி, மோசமான காலநிலை மற்றும் செலவீனம் ஆகியவற்றின் காரணமாக இந்த துறை பெருமளவு சவால் நிலையை எதிர்நோக்கியுள்ளது. விவசாய பொருளாதாரத்தில் எந்தவொரு துறையும் வெளிக் காரணிகளில் தங்கியுள்ளது. எனவே இது எப்போதும் சவாலானது, ஆனாலும் நெருக்கடியான நிலை அல்ல'என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் பெறப்பட்ட உயர்ந்த சாதனை மிக்க பெறுமதிகளின் வசைபாடிக் கொண்டிருப்பது என்பது, எதிர்காலத்தின் சவால்களுக்கு திர்வை பெற்றுக் கொடுக்காது, மீள் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது, உற்பத்தி செலவீனம் அதிகரித்துச் செல்வது, ஊழியர் பற்றாக்குறை, காலநிலை மாற்றங்கள், சிறுதோட்ட செயகையாளர்களின் பங்களிப்பு மற்றும் வெளிகள செய்கை முறை, பன்முக தன்மை, துறைசார்ந்தவர்களின் ஒன்றிணைந்த ஈடுபாடு, பயிற்சி மற்றும் ஆய்வுகள் போன்றன பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது மட்டும் போதுமானதாக அமையாது, ஆனாலும் இந்த செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு, பங்களிப்பு அதிகரிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என ரொஷான் ராஜதுரை மேலும் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

மீள் பயிர்ச்செய்கை மற்றும் நிரப்பு பொருள்
 
'குறைந்தளவான விளைச்சலை பெறுவதற்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக அமைந்திருப்பது தேயிலைச் செடிகளின் முதிர்ச்சியடைந்த நிலையாகும். இவற்றில் சில சுமார் நூற்றாண்டு காலம் பழமையானதாகும். 'மீள் பயிர்ச்செய்கை என்பது தொழிலாளர் ரீதியிலும், நிதி ரீதியிலும் மிகவும் செலவீனம் நிறைந்த விடயமாக அமைந்துள்ளது. – ஒரு ஹெக்டெயார் பகுதியை மீள் பயிரிடுவதற்கு 3.9 மில்லியன் ரூபா வரையில் தேவைப்படுகிறது. மேலும் ஆரம்ப முதலீட்டை மீள பெற்றுக் கொள்ள சுமார் 20 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது'

போதியளவு தொழிலாளர்கள் இன்மை மற்றும் நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக, 2013 வரவுசெலவுத் திட்டத்தில் தேயிலை மீள் பயிர்ச்செய்கைக்காக ஹெக்டெயார் ஒன்றுக்கு 350,000 ரூபா வரை மானியமாக வழங்கவும், புதிய செய்கைகளை மேற்கொள்வதற்காக ஹெக்டெயார் ஒன்றுக்கு 250,000 ரூபா வீதம் வழங்க அரசாங்கம் பரிந்துரை செய்திருந்தது. 'மீள் பயிர்ச் செய்கை என்பது தேசிய மட்டத்தில் காணப்படும் பிரச்சனையாகும். அரசாங்கம் இந்த பிரச்சனை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நீண்ட கால அடிப்படையில் நிதி உதவிகளை வழங்குவதற்கு தனது உறுதிமொழியை வழங்கியுள்ளது'.

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் சிறுதோட்ட செய்கையாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் மீள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். பெருந்தோட்ட கம்பனிகள் பெரும்பாலும் மூன்றில் ஒரு பங்கான பகுதியை மீள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் 457 ஹெக்டெயர் நிலப்பரப்பில் தேயிலை மீள பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புதிய செய்கை 261 ஹெக்டெயர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்
 
தேயிலைச் செய்கை என்பது பெருமளவு தொழிலாளர்களில் தங்கியுள்ள ஒரு தொழிற்துறையாகும். உறுதியான தொழிற்சங்களின் அழுத்தங்கள் காரணமாக உயர்ந்தளவு கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு கம்பனிகள் தள்ளப்படுகின்றன. மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக, எதிர்கால சந்ததியினரை இந்த தொழிற்துறையில் தக்க வைத்துக் கொள்வது என்பது பெரிதும் சவாலான விடயமாக அமைந்துள்ளது.

'பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை என்பது ஒரு பாரிய சிக்கலாக மாறி வருகிறது. எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் என்பது சிறுதொழில்களில் ஈடுபடுவதில் ஊக்கம் செலுத்துவதாக இல்லை. இலவச கல்வி முறை, மேம்படுத்தப்பட்ட வீதி மற்றும் தொலைத்தொடர்பாடல் வசதிகள் போன்றன இளைஞர்கள் மத்தியில் விவசாயத்துறைக்கு அப்பாற்பட்ட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளன'.

தேயிலைச் செய்கையை பொறுத்தமட்டில் 65 வீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி செலவு என்பது தொழிலாளர்களுக்கான கொடுப்பனவில் தங்கியுள்ளது.

மேலும், பெருந்தோட்ட கம்பனிகள் இதர சமூக மற்றும் நலன்புரி அனுகூலங்களையும் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. ஏனைய நாடுகளில் இந்த பொறுப்பு அரசாங்கத்தினதும், இதர தொழிற்துறைகளினதும் பொறுப்பாக அமைந்துள்ளது.

எமது தொழிலாளர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். அவர்களின் பிரத்தியேக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சாதனங்களை நாம் வழங்கியுள்ளோம். அவற்றை உபயோகப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வையும் நாம் ஏற்படுத்தி வருகிறோம். ஆளுமைகள், தொழில்முயற்சி கட்டமைப்புகள் ஆகியவற்றை அவர்கள் மத்தியில் ஊக்குவித்து வருகிறோம்'.

'எமக்கு காணப்படும் மிகப்பெரிய சாதகமான நிலை என்பது, தனியார் மயமாக்கப்பட்டதன் பின்னர், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில் வழங்குநர் எனும் வகையில், நாம் ஏனையவர்களையும் பாதுகாக்க வேண்டும். இது சவாலான விடயமாக அமைந்துள்ளது'என்றார்.

இயந்திரமயமாக்கம்
 
சகல விதமான விவசாய செயற்பாடுகளிலும், தேயிலை பயிர்ச்செய்கை என்பது செலவீனம் நிறைந்ததாக அமைந்துள்ளது. தாவரத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. 'பெருந்தோட்டத்துறை ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. இது உற்பத்தி திறனில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உற்பத்தி செய்யப்படும் தயாரிப்பின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதற்காக தேயிலை உற்பத்தி செயற்பாடுகளையும், விளைச்சலை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டையும் இயந்திரமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது'.

வெளிக்கள செய்கை முறை
 
உற்பத்தித்திறன் என்பது இந்த துறையில் தற்போது பல ஆண்டுகளாக அடிபடும் ஒரு பொதுவான சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வாக வெளிக்கள செய்கை முறை பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பினருக்கும் ஏற்புடைய மாற்று முறையாகவும் இது அமைந்துள்ளது. இந்த முறைக்கமைவாக, தொழிலாளர்களுக்கு குறிக்கப்பட்ட காணித் துண்டொன்றில் விளைச்சலின் உரிமையை வழங்குவதுடன், அவற்றை பராமரிப்பதற்கு அவசியமான உரம் மற்றும் இதர தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்றன கம்பனியின் மூலம் வழங்கப்படும். பறிக்கப்படும் தேயிலையின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கம்பனிகள் தமது வழமையான மேற்பார்வை நடவடிக்கைகளை இந்த பகுதிகளில் முன்னெடுக்கும். குறித்த தேயிலை மரங்களை பாதுகாக்கும் பொறுப்பை தொழிலாளர்கள் கொண்டிருப்பதுடன், இதற்காக வெளிப்படையான, நியமமான முறையில் கொடுப்பனவுகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

'வெளிகள வளர்ப்பு முறை என்பது, நிலம் என்பது கம்பனிக்கு உரித்தானதாக இருக்கும், ஆனாலும் தாவரம் மற்றும் விளைச்சல் என்பது தொழிலாளர்களின் பொறுப்பில் இருக்கும். இந்த முறை மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. தற்போது காணப்படும் சம்பள கொடுப்பனவு முறையை தாங்கிக் கொள்ள முடியாத தன்மையின் காரணமாக, இந்த வெளிகள வளர்ப்பு முறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் இந்த முறையின் மூலம் இரு தரப்பினருக்கும் சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்'என்றார்.

துறைசார்ந்தவர்களின் பங்களிப்பு
 
துறைசார்ந்தவர்கள் அனைவரினதும் பங்குபற்றல் என்பது தேயிலைத் துறையின் செயற்பாட்டை நீண்ட காலத்துக் முன்னெடுத்தச் செல்வதற்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது. 'இலங்கையின் பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், இந்த துறையின் நிலையாண்மையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும். 1.2 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் என்பது இந்த துறையில் தங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாவிடின், அதன் விளைவு அவர்களையும் பாதிக்கும். 'இந்த துறை பாரிய பின்னடைவை எதிர்கொள்ளுமாயின், தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்'என ராஜதுரை எதிர்வுகூறினார்.

அரசாங்கம், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். 'தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் சிறிய தோட்ட செய்கையாளர்கள் ஆகியோர், இந்த தொழிற்துறையில் எத்தனை பேர் தங்கியுள்ளனர் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். எனவே இந்த துறையில் ஏதேனும் பாரிய தாக்கங்கள் ஏற்படின் அது குறித்த சமூகத்தினர் மத்தியில் எந்தவிதமான சுற்றாடல் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்'என ராஜதுரை குறிப்பிட்டார்.

பன்முகத்தன்மை
 
பயிர்ச்செய்கை பன்முகத்தன்மை என்பது பயிரிடப்படும் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும், அந்த நிலத்தின் வளத்தை நிலையான வகையில் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ள ஒரு வழிமுறையாக அமைந்துள்ளது. ஒயில் பாம் மற்றும் கருவா போன்ற ஏனைய மாற்று பயிhச்செய்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் கம்பனிகளின் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலையான வளர்ச்சிக்கு பாம் ஒயில் செய்கை என்பது சிறந்த தெரிவாக அமைந்துள்ளது.

பெருமளவான கம்பனிகள் தேயிலை சுற்றுலா மற்றும் வலு போன்ற துறைகளுக்கு தமது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளன.

நீண்ட கால கொள்கை அடிப்படையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலத்தின் வளம் குன்றாத வகையில் மாற்றுச் செய்கைகளையும் மேற்கொண்டு, தொடர்ந்து இந்த துறையின் நிலையாண்மையை கடைப்பிடிக்க வேண்டிய தேவை என்பது இந்த துறையை சேர்ந்தவர்களின் பொறுப்பாக அமைந்துள்ளது.

ஆய்வுகளும் பயிற்சிகளும்
 
பயிற்சிகளும், ஆய்வுகளும் என்பது அபிவிருத்திக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதிகளவான தொழிலாளர்கள் உள்ளமையை கருத்தில் கொள்ளும் போது, நாம் பயிற்சிகளை மத்தியளவில் முன்னெடுக்கிறோம்'என ராஜதுரை குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கான பயிற்சிகள், அவர்களின் தொழில்நுட்ப ஆளுமைகளை விருத்தி செய்வது போன்றன தற்போதைய மாற்றமடைந்து வரும் சூழலில் கட்டாயம் பின்பற்றப்படவேண்டிய விடயங்களாக அமைந்துள்ளது'என ராஜதுரை குறிப்பிட்டார்.

நன்றி- தமிழ் மிரர்

வேலைக்காரி என்பதற்குப் பதிலாக “வீட்டு வேலை தொழிலாளர்”

$
0
0
இலங்கையின் சட்ட ஆவணங்களிலிருந்து “வேலைக்காரி” என்ற சொல்லை அகற்றி “வீட்டு வேலை தொழிலாளர் “ என்ற சொல் பதத்தினை உட்புகுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேனகா கந்தசாமி கண்டி ஈ.எல் சேனநாயக்கா சிறுவர் நூலகத்தில் இடம்பெற்ற வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் மூன்றாவது வருட கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
 
மேனகா கந்தசாமி அங்கு மேலும் தெரிவிக்கையில் அணி திரட்ட முடியாத தொழிலாளர்களாக ஒரு காலத்தில் இருந்த  வீட்டு வேலை தொழிலாளர்கள், இலங்கை செங்கொடிச் சங்கம், செங்கொடி சங்க மாதர்ப்பிரிவு, மற்றும் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக அது ஒரு தொழிற் சங்கமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.

எமது சங்கம் பதிவு செய்யப்பட்டது மட்டும் போதாது. அதன் மூலம் உரிமைகளை பெறுவதற்கு முன் எமக்குரிய கடமைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். நேரத்திற்கு வேலைக்கு செல்லுதல், நாணயம் நம்பிக்கைகளை பேணுதல் போன்ற நற்பன்புகளையும் எமது சேவை நிபந்தனைகளையும் சரியான முறையில் நிறைவேற்றிய பின் எமது உரிமைகளுக்காக போராடினால் மட்டுமே இச்சங்கம் நிலைத்து நிற்க முடியும். இல்லா விட்டால் மீண்டும் அணி திரட்ட முடியாத ஒரு அமைப்பாகவே இது மாறிவிடும்.

அடுத்த கூட்டம் நடைபெறும் போது, சட்ட ஆவனங்களில் 'வேலைக்காரி'என்ற சொல்லுக்கு பதில் 'வீட்டு வேலை தொழிலாளி'என்ற பதத்தை உட்படுத்தியவர்களாக இக்கூட்டம் நடை பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். என்றார்
 
வீட்டு வேலை தொழிலாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பேசி தீர்க்கவும், தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் தொழிலாளத் என்ற அடிப்படையில் எமக்கும் உரிமைகள் உண்டு.

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு அறிவு திறமை, சட்ட ஒழுங்குகள் என்பன முக்கியமாகத் தேவை. அந்த அடிப்படையில் எமது சங்கம் அறிவு, திறன் என்பவற்றை வளர்க்க உதவுவதுடன் சட்டம் தொடர்பான விடயங்களை கையாளவும் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்
 
இவ் வைபவத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னால் பிரதி தொழில் ஆணையாளருமான எஸ்.ஜீ.சூரியாரச்சி தொழிலாளர் நலன் காக்க சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் சட்ட ஏற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் சட்டத்தால் பெற முடியாத உரிமைகளை கூட தத்தமது எஜமானர்களின் மனதை கவர்வதன் மூலம் சலுகைகளாக அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாளர் பிரச்சினைகளை கையாள்வதற்கு மாவட்ட தொழிலாளர் காரியாலயங்களுக்கு மேலதிகமாக உப காரியாலயங்களும் உள்ளன. இவற்றில் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
 
இலங்கை குற்றவியல் சட்ட கோவையின்படி பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு தீர்;வைப்பெற சிறுவர் மற்றம் மகளிர் பிரிவுகள் பொலிஸ் நிலையங்கள் தோரும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமும் தேவையான உதவிகளை பெறலாம் என்றார்.

ஹட்டனில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

$
0
0
பெருந்தோட்ட தொழிலாளிகளின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றில் தரகர்களால் ஏற்படுத்தப்படும் மோசடியை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஹட்டன் நகரை அண்மித்த தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தலைவர்கள், தொழிலாளர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
 
தொழிலாளர் நலன் திட்டத்தின் அமைப்பு குழுவினர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைப்பின் தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவிக்கையில் 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன அவர்களின் உழைப்பிலிருந்து சேமிக்கப்பட்டவை. தொழிலாளர்களுக்கு மிஞ்சியதும் அது மாத்திரமே. எஞ்சிய அவர்களின் பரம்பரை சொத்தை போலி தரகர்கள் தோட்டங்களுக்குள் பிரவேசித்து, அந்த நிதிகளை  இலகுவாகப் பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிய சூரையாடிச் செல்கின்றார்கள்.
 
இவற்றை கட்டுப்படுத்தி சூரையாடுபவர்களை உடனடியாக கைது செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி இலகுவாக பெற்றுகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். இதற்கான அரச திணைக்களத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு பிராந்தியத்திலும் அரச திணைக்களங்கள் இயங்குகின்றன.

அரச முகவர்கள் இயங்குகின்றார்கள். எனினும் இவ்வாறு போலி தரகர்களிடம் சென்று சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதிக்காக உங்கள் பணத்தை வீண்விரயப்படுத்தி உங்கள் சொத்தை இழந்து விட வேண்டாம்.

சட்டவிரோத முகவர்கள் உங்கள் தோட்டப்பகுதியில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது தொழிலாளர் நலன் திட்டத்திலோ தெர்pவிக்குமாறு 'ஹட்டன் தொழிலாளர் நலன் திட்டத்தின்” தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

குளவி கொட்டியதால் 30 பேர் வைத்தியசாலையில்

$
0
0
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  டிக்கோயா தோட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் குளவி கொட்டியதால் 30 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா கோவில் ஒன்றில் ஆலய பூசை ஒன்றில்; கலந்து கொண்டவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

ஆலய யாக பூசையின் போது கிளம்பிய புகை ஆலயத்தின் அருகில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டுக்கு பரவியதால் குளவி கலைந்து பூசையில் ஈடுப்பட்டிருந்தவர்களின் மீது கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சிலருக்கு பெரும் பாதிப்பு இல்லையெனவும் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சிறுகுழந்தையொன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில் தடம்புரண்டதால் ரயில் சேவைகள் பாதிப்பு

$
0
0
மலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டன் ரொசல்ல பகுதியில் ரயில் தடம்புரண்டதில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தாமதமாகியுள்ளது.
 
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர தபால் ரயிலே தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில்  பயண இலக்கான கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்திருக்க வேண்டும்.

இருப்பினும், ரயில் தடம்புரண்டமை காரணமாக இதுவரையில் பயண இலக்கை வந்தடையவில்லை.

தடம்புரண்ட ரயில் இன்று அதிகாலை நான்கு 4.00 அளவில் மீள பயணத்தை ஆரம்பித்தது.

எவ்வாறாயினும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று காலை பயணத்தை ஆரம்பிக்க இருந்த ரயில் உரிய நேரத்தில் பயணத்தை ஆரம்பித்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்  சுட்டிக்காட்டியுள்ளது.
Viewing all 376 articles
Browse latest View live